1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இ(ரு)தயம் -10

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 27, 2013.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வானதியின் இந்த பேச்சை விஷ்வா மட்டும் அன்றி வேதாவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    இப்படி முதல் சந்திப்பிலேயே ஒரு நபரிடம் பேசும் வர்க்கம் இல்லை வானதி. அது தான் வேதாவை வாயடைக்க செய்தது.
    சொல்ல போனால் என் நண்பனை சந்திக்க வா.! என்று அவள் பல முறை கோரியும் விஷ்வாவை சந்திக்க வானதி சற்றும் பிடி கொடுக்ககவில்லை.

    "இங்கே போகணும்...அங்கே போகணும்"என்று கழுவிய மீனில் நழுவிய மீனாய் இருந்தவளை என்று ஏதோ ஒரு தற்செயல் விபத்து சந்திக்க வைத்தது.
    ஆனால் இப்படி முகஸ்துதி பாடும் அளவு கீழிறங்க மாட்டாள். அதுவும் முதல் சந்திப்பிலேயே...

    விஷ்வாவிற்கு தான் தர்மசங்கடமாய் போனது.
    இப்படி முகத்திற்கு நேராய் புகழும் பெண்களை பார்த்தாலே அவன் ஒதுங்கி விடுவான் ஏதோ வேதாவின் தோழி எனவும் தான் ஒரு மதிப்பில் சந்திக்க ஒப்பு கொண்டான்.
    வேதா துடுக்கு தனம்,வாய் பேச்சு இருந்தாலும் வழியும் ரகமில்லை.
    ஒரு நட்பு கலந்த பேச்சும் கிண்டலும் மட்டுமே...
    சொல்ல போனால் வானதியின் முகத்தோற்றம் ஏனோ அவள் மேல் ஒரு மரியாதையை கூட ஏற்படுத்தியது அவனுக்கு
    வேதாவை போல் இவளிடமும் நல்ல நட்பு பாராட்ட வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கு இவளது இந்த ஈயடிச்சான் பார்வையும் முகஸ்துதியும் ஏனோ ஒரு ஏமாற்றத்தை வர வைத்தது.

    இருந்த சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றுவதை போல் அவனது செல்லின் ஒலி எழும்ப அதை கையில் எடுத்தபடி மன்னிப்பு கோரி இருவரிடமும் இருந்து விடைபெற்று நகர்ந்தான் விஷ்வா.

    ஆனால் அவனிடம் இருந்த வானதியின் பார்வை மட்டும் விலகவே இல்லை.

    "வானதி...."

    "ஹே வானதி....." என்று தோழி இரு முறை உலுக்கிய பின்னரே சுய நினைவிற்கு வந்தாள்.

    "என்னடி ஆச்சு உனக்கு...." என்று கோபமாய் ஆரம்பித்தவளின் பேச்சு தோழியின் கண்ணீரில் நின்றது.

    "ஹே என்னடி ஆச்சு? எதுக்காக இப்ப அழற?" என்றவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து அழுதபடி ஓடியவளை விஷ்வாவும் கவனிக்க தவறவில்லை.

    இரவு விஷ்வாவின் அறை..

    "ஹே என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கு? எப்பவும் ஒன்பது மணிக்கெல்லாம் விளக்கனச்சிட்டு படுன்னு என் உசுர எடுப்ப இப்ப என்னடான்னா.....மணி ரெண்டாகியும் தூங்காம முழிச்சிட்டு இருக்க..? என்ன ஏதாவது பிரச்சனையா? " என்ற நண்பன் மாதவனின் குரலில் கலைந்தவன் ஒன்றும் இல்லை என்று மறுத்து சட்டையை மாட்டி கொண்டு விடுதியின் மேல் மாடிக்கு வந்தான்.

    நிலவொளி முழுவதும் அந்த மேல் மாடியை நனைத்திருக்க தூர இருந்து யாராவது பார்த்தால் அந்த நிலா வெளிச்சத்தில் உலா வரும் தேவனாக தான் தெரிந்திருப்பான் விஷ்வா.
    அப்படி ஒரு சாந்தமான முகமும் உடல் கம்பீரமும் எந்த ஒரு பெண்ணையும் மதி மயங்க செய்து விடும்.
    வாலிபம் அடைந்த காலம் முதல் பெண்கள் அவனை சுற்றுவது அவனுக்கொன்றும் புதிதல்ல
    அவர்களிடம் இருந்து முடிந்த வரை விலகி இருப்பான். முடியாவிட்டால் முகத்தில் அடித்தது போல் சொல்லி விடுவான்.
    ஆனால் இது போல் யாரும் அழுததில்லை. இதற்கும் அவன் கடுமையாய் எதுவும் சொல்லவில்லையே ஒரு வேலை தான் நடந்து கொண்டதில் அவளே வெட்கப்பட்டு அழுதிருப்பாளோ ? இல்லை ஒரு வேலை நான் எழுந்து வந்ததை அவமானமாய் நினைத்துவிட்டாளா ?
    சரி வேதா ஏதாவது திட்டி இருப்பாளோ? என்று அவளிடமும் கேட்டாயிற்று அவளும் இல்லை என்று மறுத்துவிட்டாள். வேறு என்ன காரணம்? என்று பலவாறாக மனதை குழப்பி கொண்டான்.

    ஏனோ அழுதுக்கொண்டே ஓடிய அந்த பால் முகம் நெஞ்சை விட்டு நீங்காமல் அடம் பிடித்தது.
    இந்நேரம் இருவரும் தூங்கி இருப்பார்கள் ஒரு முறை அழைத்து தான் பார்க்கலாமா? என்று கையில் இருந்த செல் பேசியை பார்த்தபடியே ஒரு மணி நேரத்தை கழித்தான்.

    இனி முடியாது என்று பொறுமை இழந்தவனாய் வேதாவின் நம்பருக்கு தொடர்பு கொள்ள அந்த பக்கம் மணி அடித்தது.

    நகத்தை கடித்தபடி நடந்து கொண்டிருந்தவனுக்கு நொடிக்கு நொடி பொறுமை குறைந்தது.
    அவன் அவஸ்தையை போக்கும் விதமாய் அந்த பக்கம் தொடர்பு கிடைக்க அவசரமாய் பேச தொடங்கினான்.

    "ஹலோ....ஹலோ..வேதா நான் பேசறது கேக்குதா?" என்ற அவனது குரலுக்கு பதிலாய் கேட்டது வானதியின் குரல்
    இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    "ஹலோ...நீங்க யாரு ?" என்று பாதி தூக்கத்தில் ஒலித்தாலும் அவள் குரல் தேன் தான் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    "நான்...நான் விஷ்வா...பேசுறேன் ..."

    "ஹ்ம்ம்....ஒரு நிமிஷம் இருங்க...." என்றவளின் குரல் அடுத்து தோழியை எழுப்பியது..

    "ஹே வேதா...யாரோ விஷ்வாவாம் உன்கிட்ட பேசணும்னு சொல்றாரு..." என்றவளது குரலில் இருந்த வேறுபாடு அவனை பலமாய் தாக்கியது.

    "நான் நாளைக்கு பேசுறேன்னு சொல்லு டி நடுராத்திரில தூக்கத்த கெடுத்துகிட்டு..." என்ற வேதாவின் பதிலோடு தொடர்பை துண்டித்தான்.

    ஏனோ அவனையும் அறியாமல் கோபம் பொத்து கொண்டு வந்தது..

    காலையில் முதல் சந்திப்பிலேயே ரோஜா என்று வர்ணிக்கிறாள் இரவில் நான் யாரோ வா? இந்த பெண்களே இப்படி தான் போல..என்று அவனையும் அறியாமல் கோபப்பட்டு கொண்டிருந்தான் விஷ்வா!

    அதே கோபத்துடன் படுத்தவனுக்கு அன்றைய ராத்திரி சிவராத்திரியாய் தான் போனது!
     
    1 person likes this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..
    nice update...

    yaaro vishwa vam nu vedha ta vanathy sonnadh superrr...
    vishwa oda thookam dhan poiruchu..
     
    1 person likes this.
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ha..ha...happy that u loved it

    keep reading ma
     

Share This Page