1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இழந்த செல்வத்தை மீட்டுதரும் அனந்த சதுர்த்தசி விரதமும் அனந்த பத்மநாப ஸ்வாமி தரிசனமும்!

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 13, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இழந்த செல்வத்தை மீட்டுதரும் அனந்த சதுர்த்தசி விரதமும் அனந்த பத்மநாப ஸ்வாமி தரிசனமும்!

    அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்க தொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது.

    நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது. இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார்.

    'அனந்தன்' என்பது ஸ்ரீ ஆதிசேஷனின் திருநாமமென் றாலும்,. அனந்தன் மேல் அறிதுயில் கொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமியைக் குறித்தே இந்த விரதம் செய்யப்படுகிறது. வாழ்வில் கர்ம வினைகளின் காரணமாக நாம் இழந்தவற்றைப் பெற உதவும் அற்புத விரதம் இது.

    முதலில் இந்த விரத மகிமையைப் பார்க்கலாம்.

    விரத மகிமை: பாண்டவர்கள், சூதால் தம் நாடு நகரங்கள் யாவையும் தோற்று மிகத்துன்புற்று, வனவாசத்தில் அலைந்துழலும் வேளையில் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், தம் மனவேதனைகளை ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவிடம் முறையிட்டு, தம் துன்பங்களில் இருந்து விடுதலையடையும் மார்க்கத்தைக் கூறி அருள வேண்டினார்.

    அப்போது ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா, 'அனந்த விரதம்' அனுஷ்டித்தால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்று கூற, யுதிஷ்டிரரும், 'அனந்தன் என்பவர் யார்?' என்று வினவினார். அதற்கு கண்ணபிரான், "நானே இவ்வுலகனைத்துமாயிருக்கிறேன். நானே அனந்தன். வேறு எவருமில்லை. நானே அனந்தனாயிருந்து இப்பூவுலகை தாங்குகிறேன். குந்தி மைந்தனே! தேவர்கள், ரிஷிகள், மலைகள், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள் அனைத்தும் என் வடிவமே!!" என்றார்.

    அனந்த பத்மநாப விரதம் பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது. முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்..

    பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம். ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் பதினான்கை, ஏழைகளுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத அளவுக்கு செல்வங்கள் வந்து சேரும்.

    தய நட்சத்திரத்தில் சந்திரனும் சந்திரனின் வீட்டில் ராகுவும் பயனிக்கும் காலத்தில் வருகிறது. திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் ராகு ஆதிக்கம் பெற்று பாம்பு உருவான ஆதிசேடனுக்கு உரியது என ஜோதிட உலகம் கூறுகிறது. அனந்த விரதம் செய்தால் உங்கள் வாழ்வில் ஆனந்தமயமான எதிர் காலத்தைக் கொண்டு வரும்.

    இன்று அனந்த சதுர்த்தசி விரதமிருந்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி, சென்னை அடையாறு காந்திநகர் அனந்த பத்மநாப ஸ்வாமி, திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதஸ்வாமி ஆகியவர்களை தரிசித்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதோடு ராகுவால் பல ராஜயோகத்தையும் அடைவது உறுதி!
     
    Loading...

Share This Page