1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இழந்ததை மீண்டும் பெற முடியுமா?

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Jan 25, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    சிறு குழந்தையாக இருந்த என்னை...
    பாலூட்டி, சீராட்டி அரவணைத்து...
    நான் தான் அவளின் உயிர் மூச்சு...
    என்பது போல்...
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...
    என்னை வளர்த்த அவளுக்கு...
    வளர வளர நான் குடுத்தப் பரிசு...

    பள்ளி பருவத்தில்...ஊரில் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு...
    அவள் என்னை பாசத்தோடு அழைத்தபோது
    "நான் மாமா கூட விளையாடனும்...நா வரல போ" என்றேன்.

    கல்லூரி பருவத்தில்...விடுதியில் நண்பர்களோடு சேர்ந்துக்கொண்டு
    "கண்ணு...உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆகுது...வீட்டுக்கு வாடா"
    என்று தவிப்போடு அவள் அழைத்தபோது
    "படிக்க நிறைய இருக்கு...வீட்டுக்கு வந்த நீயா எனக்கு எழுதி தர போற...உன் வேலைய மட்டும் பாரும்மா..." என்றேன்.

    வேளைக்கு செல்கையில்...
    தினம் தவறாது தொலைபேசியில்...
    "சாப்பிட்டியா டா கண்ணா? ரொம்ப நேரம் முழிச்சு வேல செஞ்சு உடம்ப கெடுத்துக்காத..." என்று ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்குள்...
    "ம்மா எனக்கு வேல இருக்கு...சும்மா சும்மா போன் பண்ணி என்னை தொந்தரவு பண்ணாதே.." என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் தொலைபேசியை துண்டித்தேன்...


    அன்பை மட்டுமே கொடுத்த அவளுக்கு
    அன்று நான் கொடுத்தது...
    கோபம், வெறுப்பு, சுட்டெரிக்கும் சொற்கள்...

    இன்று அந்த அன்பு வெறும் நினைவுகளாய் நிற்க...
    அவள் என்னுடன் இல்லை...

    இழந்த அந்த மணித் துளிகளை தேடுகின்றேன்...
    மீண்டும் அவளுடன் சேர்ந்து வாழ... அழுகை தான் மிஞ்சுகிறது...
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு அற்புதம் என்ன தெரியுமா மலர்....நாம் கொட்டிய கடுஞ்சொல் கூட அவளுக்கு தேனாய் தான் இனித்திருக்கும்...நாம் கொண்ட கோபம் கூட அவளுக்கு விளையாட்டாய் தோன்றியிருக்கும்...அதனால் தானே அவள் தாய்??
    உங்கள் தாயின் உடல் மறைந்திருந்தாலும்,உங்கள் நினைவலைகளில் அவர்களின் உயிர் இருந்துக்கொண்டே இருக்கும் என்றும்.
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    காயமுற்ற என் மனதிற்கு மருந்தாக உங்களுடைய வரிகள்...நன்றி!!!
     
  4. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    டியர் மலர்,

    தேவப்ரியா சரியாக சொல்லி இருக்கிறார்கள்.

    நாம் சிறிய வயதில் காட்டும் கோப தாபங்களையும்
    ஏற்றுக்கொண்டு நம்மிடம் அன்பு செலுத்துபவள் தான்
    அம்மா.
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    இழந்த அன்னையை மீண்டும் பெறுவது கடினம்.நீங்கா துயர் தான்.ஆயினும் அவள் உங்கள் நினைவுகளில் என்றும் மீண்டு கொண்டே இருப்பார்கள். . . நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்

    அனைத்தையும் தாங்கி என்றும் அன்பு தருபவள் அன்னையே..அவள் இன்றி உலகில் நாம் இல்லையே

    வருந்தாதே தோழி
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அனைவரின் வரிகளிலும் என் அன்னையையே காண்கிறேன். உங்கள் ஆறுதலுக்கு நன்றி.
     
  7. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Very nice poem malar...I was constantly reminded of my mom while reading it.
     
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    கவிதை நன்று மலர். நீங்கள் உணருவதை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளமுடிகிறது . உங்கள் அன்னை உயிரோடில்லை என்றாலும் உங்களை மகிழ்வாகத்தான் காண எண்ணுவார்கள். இப்படி நீங்கள் வருந்துவதை விரும்பமாட்டார்கள் . அதனால் வருத்தபடாதீர்கள்.
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    என் வரிகள் உங்கள் அன்னையை நினைவு படுத்துவதாக சொன்னீர்கள்...மிக்க நன்றி!!!
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஆறுதலான வார்த்தைக்கு நன்றி நெஞ்சமே!!!
     

Share This Page