1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இலவசமாக பணம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Dec 26, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,747
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: இலவசமாக பணம் :hello:

    மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ?

    படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

    இது நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது. அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும்.

    தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம். தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

    நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது ....

    " நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....
    ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....
    பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.....
    எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...

    அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்..

    இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

    கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது....விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...

    எப்படி வருவான்னேன்.....?
    பணம் வேணும்னு உழைக்கிறாங்க....
    கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்...?

    பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்...!

    ஊரே தூக்கம் வராம கெடக்கும்....
    இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....
    உழைப்புதான் பணம்ன்னேன்...

    பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்....
    உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது.... ஒன்னுமே கெடையாது....
    இப்ப தெரிஞ்சுதா...?

    உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

    இது பொருளாதார படிப்பு படிக்காமல், நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை ... சொன்னது.....

    அருணகிரி நன்றி.
     
    Loading...

Share This Page