1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறைவன் எனுமோர் தலைவன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 6, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஒப்பிலா ஒருவன் ! தப்பிலாத் தலைவன் !
    முப்பொழுதும் அவன் நினைவிலேத் தொழுது
    அப்பழுக்கின்றி நாம் வாழ்ந்து வந்தால்,
    இப்பொழுதே அவன் ஆட்கொள வருவான் !


    வார்பட மெதற்கு ? இவ்வைய முழுதும்
    சீர்பட அவனே நிறைந் திருக்கையிலே ?
    நேர்படவே நாம் வாழ்ந்து வந்தால்,
    சேர்ந்திடலாம் அவன் திருவடி அதனில் !


    சாத்திரங்கள் பற்பல உண்டு- அவன்
    தோத்திரமும் பற்பல உண்டு- மெய்ப்
    பாத்திரமாய் நாம் வாழ்ந்து வந்தால்,
    காத்திருப்பான் நமைச் சேர்த்துக் கொள்ள !


    சழக்குகள், சமயச் சண்டைகள் எதற்கு ?
    வழக்குகள், வாய்ப் பூசல்களெதற்கு? மன
    அழுக்கிலாது நாம் வாழ்ந்து வந்தால்,
    கிழக்கிலுதிக்கும் கதிர் போலத் தெரிவான் !


    அஞ்சுதல் வேண்டாம் ! ஆராய்ச்சி வேண்டாம் !
    நெஞ்சில் கருணையை நிரப்பிக் கொண்டு
    சஞ்சலமின்றி நாம் வாழ்ந்து வந்தால்,
    தஞ்சமும் தருவான், தன்னையும் தருவான் !


    எங்குளானென்று அலைய வேண்டா- அவன்
    எங்குமுளான், எதிலு முளான் ! மாசறு
    தங்கமாய் நாம் வாழ்ந்து வந்தால்,
    தங்குவான் நம் இதய கமலத்துள் !

    Regards,

    Pavithra
     
    Harini73, vaidehi71, periamma and 2 others like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அழகான கவிதை! சஞ்சலமின்றி இம்மையில் மெய்யோடு அன்பு கொண்டு வாழ்ந்திட்டால் அதுவே போதும் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பே சிவம் .
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls , @periamma ,
    அன்பிற்குரியீர், உங்கள் சரியான புரிதலுக்கு நன்றி !

    @vaish78 , @vaidehi71
    கோட்பாட்டை விரும்பியமைக்கு நன்றி !
     

Share This Page