1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம்

Discussion in 'Posts in Regional Languages' started by veni_mohan75, Dec 8, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தூரத்து உறவினர் ஒருவரின் இறப்பை பற்றிய தகவலுடன் தொடங்கியது இன்றைய காலை.

    ஒரு மாதம் முன்பு அவரை சந்திக்கும் போது கூட, நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தவர், இன்று இறந்தவர் என்பதை நினைக்கையில் உள்ளத்தில் ஒரு ஆற்றாமை. அந்த மனிதர், கடவுள் பக்தியும், கர்ம சிரத்தையும் கொண்ட ஒருவர், ஆனால் ஏனோ இல்லாதவர்க்கு கொடுப்பதில் விருப்பம் இல்லாதவர்.

    இன்று இறந்திடுவோம், என்று அவர் அறிந்திருந்தால், அவரும் இல்லாதவர்க்கு கொடுத்து உதவி இருப்பாரோ என்னவோ. என்னதான் "ஆன்மாவுக்கு அழிவு என்பது கிடையாது, அழியும் உடம் ஒவ்வொன்றும் அந்த ஆன்மா, உடுத்திக் களையும் சட்டை" எனும் கருத்தை நாம் அறிந்தாலும்.. இறப்பு என்பது மாறப் போவது இல்லை.

    இருக்கும் வரையில், பேதங்கள் இன்றி, கோபங்கள் இன்றி, பிறரின் சாபங்கள் இன்றி, இரக்கத்துடன் இருப்போம். இல்லாமையால் வருந்தும் அனைவருக்கும் நம்மால் உதவ முடியாவிட்டாலும், நம்மால் இயன்றவரை, வாரம் ஒருவருக்கேனும், ஒரு வேளை உணவிட முடிந்தாலும் அதை செய்வோம்.

    இறக்கவே பிறந்திருக்கிறோம்.. இரக்கத்துடன் வாழ்வோம்.. நிரந்தரமாய் உலகில் வாழ முடியாவிட்டாலும், ஒரு சிலர் உள்ளத்திலாவது வாழ்வோம்.
     
    Last edited: Dec 8, 2010
    2 people like this.
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    இறந்த மனிதருக்கு என் அனுதாபங்கள்....உங்களது வரிகள் உண்மை.

    இருக்கும் வரையில் சிறிதேனும் பிறர்க்கு உதவியாய், உறுதுணையாய், இரக்கத்தோடு வாழுவோம்.

    அக்கா உங்கள் கடைசி இந்த வரிகள் பிடித்தது
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    வேணி - மிக நல்ல கருத்து.
    நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க,
    அதன்படி செயல்பட தூண்டும் கருத்து.

    நம்மில் பலர் ஒரு பண்டிகை தினம் அன்றோ,
    அல்லது வருடத்திற்கு ஓரிரு முறை பிறருக்கு உதவினால் போதும்,
    என்ற எண்ணத்தில் இல்லாதோர்க்கு உதவி வருகிறோம், அதில் தவறு ஒன்றும் இல்லை.

    ஆனால் அன்றாட வாழ்வில் நீங்கள் சொல்வதுபோல்,
    பிறர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை நாளும் செய்து,
    இறக்கவே பிறந்தாலும், நாளும் அவர்கள் மனதினில் வாழும்,
    பெருமையைப் பெரும், சிறிய செயல்கள் ஆனாலும் அதை செய்து வாழ்ந்திடுவோம்.

    அவர் யாருக்கும் உதவவில்லை எனினும்,
    எங்களுக்கு இக்கருத்தைச் சொல்ல உங்களுக்கு உதவி இருக்கிறார்.
    என் அனுதாபங்கள் அவர் குடும்பத்தினருக்கு.

    பிறக்க தெரிந்த உயிரே உனக்கு இறக்கத் தெரியாதா? என நினைப்பதை விட,
    பிறக்க தெரிந்த உயிரே உனக்கு இரக்கம் கிடையாதா என நினைப்பதே சரி அல்லவா?
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    பிறக்கும் போது கொண்டு வந்தது ஒன்றும் இல்லை
    இருக்கும் போது கொடுப்பதற்கு இருக்கிறது..இரக்கம்
    கொடுத்து வாழ்ந்தால் வாழ்வில் இல்லை இறக்கம்

    அச்சாரமாய் ஆணிவேராய் உனது இறுதி வரிகள்
    அறுதி இட்டு கூறுகின்றன இரக்கத்தின் மேன்மையை
    நன்றி தோழியே
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    Veni,romba aazhamana karuththukkal....ovvoru muraiyum irappu patriya seidhi kekkumbodhu en manadhil odum ennangal ivai....
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    உண்மைதான் ஜெயா, கொண்டு வந்தது என்ன, கொண்டு செல்வது என்ன... இடையிலே எத்துனை மாற்றங்கள்...

    இயன்ற வரை இன்னல்கள் பிறருக்கு தராமல், உதவியாய் இருப்போம்.

    இரங்கலுக்கு நன்றி சகோதரி
     
    Last edited: Dec 8, 2010
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    நல் வார்த்தை சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல.

    உதவுவோம் உள்ள வரை... உறுதியாய்.. இறுதிவரை
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    போவது என்றோ ஒரு நாள் அது உறுதி..
    அதுவரை, முடிந்த அளவு, நன்மைகள்
    செய்வோமே.. எனும் ஒரு சிறு வித்து
    என்னுள்ளே விழ அந்த மனிதர் காரணம்
    அந்த எண்ணங்கள் தீர்க்கும் நம் ரணம்

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    Veni,
    iranthavargu aazhntha anuthaapangal..
    romba aazhamana, azhuthamana karuththu solli ullergal..
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    My heartfelt condolences to the family of the deceased.

    You have very aptly woven your thoughts about the practicality of life. Every day is a bonus to us really. So within the short span of life that God has blessed us, we must try to do our best to all our bretheren!
     

Share This Page