1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 28

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 30, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    [​IMG]

    மறுநாள் மதிய உணவின் போது வேறு வகையில் மறுபடியும் அவன் கோபத்திற்கு ஆளானாள். அன்று நளந்தன் பரம்பராவில் வற்புறுத்தி வாங்கித் தந்த ஒரு சுடிதாரை அணிந்திருந்தாள். அந்த உடை அவளுக்கு ரொம்பவும் பிடித்தமானது. நளந்தனின் தேர்வு என்பது ஒரு முக்கிய காரணம்.

    அடிப்பது போல அல்லாமல், அழகான மஞ்சளும் சிறிது ஆரஞ்சும் கலந்த..பட்டுப் புடவைகளில் வரும் மங்களகரமான மாம்பழ மஞ்சள் நிறம். கழுத்தைச் சுற்றி மிக நுண்ணிய வேலைப்பாடு. அதைத் தொடர்ந்து முன் பக்கம் நெஞ்சுவரை வெகு அழகாக கற்கள் பதித்து அலங்கரிக்கப்பட்ட 'யோக்' வேலைப்பாடு. அவள் இடையை லேசாக இறுக்கிப் பிடித்து முழங்காலுக்கு சற்று மேலாக முடிந்த அந்த சுரிதார், அவளுக்கே தைத்தார் போல வெகு கச்சிதமாக பொருந்தியது. கொடி போன்ற அவள் உடல்வாகிற்கு ஏற்ற தையல் அமைப்பு.

    அன்று வரை அவளை சேலையிலேயே பார்த்திருந்த சுகுனம்மா வியந்து மெச்சுதலாக பார்த்து, "நீ சேலை மட்டும் தான் கட்டுவாய் என்று நினைத்தேன்" என்றார்.

    சுகிர்தனோ வெளிப்படையாக, "வாவ்" என்றான் வைத்த கண் வாங்காமல்.
    இருவர் பேச்சையும் கேட்ட நளந்தன் அவளை பார்த்தும் பார்க்காமல் உணவில் கவனம் போல குனிந்து கொண்டான் !

    அவனது பாராமுகத்தில் மனம் வாடிய மிதுனா வெறுமனே முறுவலித்து, "தாங்க்ஸ் அம்மா" என்றாள்.

    "அத்தை என்று சொல்லம்மா" என்றவர் தொடர்ந்து, "என் கண்ணே பட்டு விடும் போல இருக்கிறது! இந்த உடை, நிறம் எல்லாம் உனக்கு அப்படி பொருந்துகிறது" என்று திருஷ்டி கழித்தார்.

    "மிதுனா அக்கா எங்கே மீனா" என்று சுகிர்தன் மேலும் கிண்டல் செய்தான். அப்படி வேறு ஆள் போல தெரிகிறாளாம்!

    "சும்மா இருடா!" என்று மீண்டும் அவனை செல்லமாக அதட்டியவர், "நீ ஸ்கர்ட், ஜீன்ஸ் எல்லாம் போடுவாயாடா? உன் மெலிந்த உடல்வாகிற்கு ஜீன்ஸ், ஷார்ட் குர்தா எல்லாம் போட்டால் ரொம்ப எடுப்பாக இருக்கும். இல்லடா சுகிர்தா?" என்று அவனையேத் துணைக்கழைத்தார்.

    "ச்சு.. டிஸ்டர்ப் செய்யாதீங்கம்மா" என்று அவன் சலுகையாக சொன்னான் அவளைப் பார்த்தபடியே.

    நளந்தன் இப்போதும் அதே கல்சிலை தான்.

    பேச்சின் ஒட்டு மொத்தக் கருப்பொருள் ஆன மிதுனா நெளிந்தாள். சுகிர்தனின் நிலைத்த பார்வை வேறு. எல்லாவற்றிற்கும் மேலாக நளந்தனின் மௌனம்.

    ஏதாவது சொல்ல வேண்டுமே என்று, "அது..வந்து..அம்..அத்தை.." என்று தடுமாறினாள்.
    அவளை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்த நளந்தன் தட்டில் கை கழுவினான்.

    பேச்சில் முமுரமாக இருந்த மற்றவர்கள் அதை கவனிக்கவில்லை என்றாலும் கவனித்த மிதுனா துணுக்குற்றாள்.

    "அம்மா..அத்தை என்று ஏம்மா தடுமாறுகிறாய்? அத்தை என்றே சொல்லு." என்று வலியுறுத்தினார் சுகுணா.

    "சரி.. அ..அத்தை.." என்று மரியாதைக்காக சொன்னாள் மிதுனா.
    நளந்தன் விறைப்புற்றான்.

    மிதுனாவுக்கு உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. நளந்தனின் விருப்பும் வெறுப்பும் தன்னை பாதிக்கும் விதம் புரியவில்லை.. பேச்சு போகும் திசையும் பிடிக்கவில்லை.

    அத்தை என்று சுகுனம்மா முதல் தினம் அழைக்க சொன்னதற்கும் இன்றும் ஒரு நூலிழை வேறுபாடு தெரிந்தது. அன்று பெருந்தன்மையாக ஒலித்த அவர் குரல் இன்று ஒரு உரிமையோடு ஒலித்தது. சுகிர்தனோடு ஒரு ரகசிய சிரிப்பை பகிர்ந்தவாறே 'அத்தை என்றே சொல்லு" என்றார்.ஏதாவது வேண்டாத எண்ணத்தை விதைத்துவிட்டாளா?!
    ஒருவேளை அது தான் நளந்தனின் கோபத்திற்கும் காரணமா?! ஆனால் அதில் நளந்தனுக்கு என்ன நஷ்டம்? ஒண்ட வந்தவள் அதீத உரிமை எடுத்துக் கொள்வது போல நினைக்கிறானா? நளந்தன் அப்படி நினைப்பவனும் இல்லையே..

    சுகுனாம்மா அவர் பாட்டில் பேசினார்.
    "நீ இன்னும் சொல்லவில்லையே..மாடர்ன் டிரஸ் எல்லாம் போடுவாயாடா?"

    "என் தாத்தாவிற்குப் பிடிக்காது அ..அத்தை" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மிதுனா.

    அதுவரை பேசாதிருந்த நளந்தன் அவளை உறுத்து நோக்கி, "அவர்கள் உன்னைப் பற்றிக் கேட்டார்கள். உன் விருப்பம் எது, அடுத்தவர் விருப்பம் எது என்று புரிந்துகொள்ளாவிடில் இப்படி 'பெண்டுலம்' போல ஊசலாடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்" எரிச்சலை உள்ளடக்கிய குரலில் கூறினான்.

    அவள் பேச இடம் கொடாது, மேஜையில் கிடந்த 'நாப்கின்னால்' கையைத் துடைத்துக் கொண்டு, "வருகிறேன் அத்தை. இன்று பத்ரியோடு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். வரேன்டா சுகி" என்று எழுந்துகொண்டான். தாத்தாவிடம் விடைபெறும் முகமாக ஒரு தலை அசைவு. அவளிடம் அதுகூட இல்லை.

    அவன் அலட்சியம் நெஞ்சை சுட்டது. உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. ஏன் இந்த திடீர் கடுமை? அவன் 'உன் விருப்பம்' என்று சொன்னது அவள் உடை பற்றி மட்டும் என்று மிதுனாவுக்குத் தோன்றவில்லை.

    வேறு எதில் என் விருப்பம் உணராது அடுத்தவர் விருப்பப்படி தலையாட்டுகிறேனாம்? அதிலும் பெண்டுலம் போல ஊசலாடுகிறேனாமே!

    எவ்வளவு யோசித்தும் அவன் கோபத்தின் காரணமோ, அவனது பூடகப் பேச்சின் பொருளோ ஒன்றும் அவளுக்கு விளங்கவில்லை. அவனால் இன்னும் எத்தனை முறை இப்படி குழம்பித் தவிக்கப் போகிறாள்?! இவனுக்கு இதே வேலையாகி போய்விட்டது!

    திருவள்ளுவர் போல எதையாவது இப்படி ரெண்டடியில் சொல்லிவிடுவது. அதற்கு சரியாக கோனார் உரை தேடி இவளும் கிளம்பிவிட வேண்டியது!
     
    2 people like this.
    Loading...

  2. umasundaram

    umasundaram Senior IL'ite

    Messages:
    115
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Wow.real nice story.

    uma
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    MST
    while drawing add some background scene also. It will suit ur story.
    story nalla viru viruppa poittu irukku
    great going..............
     
  4. malaramesh

    malaramesh New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hai very nice story pls write next part iam waiting for 2 days pls send soon adv thanks:drowning
     
    Last edited by a moderator: May 3, 2010
  5. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    Story is going well.
     
  6. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thanks Uma & Kala! :)
     
  7. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Sorry about the delay, Mala. :bonk
    How shall I make up for that?.. :idea How about updating nearly 10 parts for you? :thumbsup Happy Reading, Mala!
     
  8. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thanks, Gayathri! Appreciate your feedbacks. :thumbsup
    You are right about backgrounds.. I am not big on drawing backgrounds when compared to girl faces.. But shall try again in near future.. :)
     

Share This Page