1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரும்புக்கோட்டை மர்ம யோகி -1

Discussion in 'Stories in Regional Languages' started by Ilamuriyan, Feb 12, 2011.

  1. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பாகம் 1

    [​IMG]

    கி.பி. 12ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் பராக்கிரம பாண்டியன். பெயருக்கேற்றவாறு அவன் பராக்கிரமசாலி. படை பலம் பொருந்தியவன். பாண்டிய நாட்டை சுற்றியிருந்த பாளையங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு நாட்டின் எல்லையை விரிவு படுத்தினான்.

    எல்லா பாளையங்களும் என்றா சொன்னோம். இல்லை. ஒரு பாளையம் அவன் கட்டுக்குள் வரவில்லை. அதுதான் இரும்புக்கோட்டை. கோட்டையின் மதில் சுவர்கள் இரும்பால் ஆனவை போல் வலுவாக இருந்தது. கோட்டையின் நுழை வாயிலும் இரும்பினால் செய்யப்பட்டதால் எதிரிகளால் கோட்டையை தகர்க்க முடியவில்லை. பராக்கிரம பாண்டியனின் படைகள் இரும்புக்கோட்டையை முற்றுகையிட்டு வெகு நாட்கள் ஆகியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கோட்டைக்குள் மக்கள் வழக்கம்போல் தங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்தனர். சில நாட்கள் அவர்கள் ஆடல் பாடல்க்ளுடன் கேளிக்கையில் ஈடுபட்டது வெளியே இருந்த பாண்டிய படை வீரர்களுக்கு எரிச்சலைத் தந்தது.

    [​IMG]

    ஒரு தடவை பான்டிய நாட்டு தளபதி வீரகேசரிக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, பாண்டிய நாட்டு சிப்பாய்கள் ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியை தூக்கிக் கொண்டு வேகமாக வந்து இரும்புக் கோட்டையின் கதவின் மீது மோதினர். பல தடவைகள் அவ்வாறு மோதி இறுதியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். படைகளுக்குப் பின்னால் குதிரையின் மீது வீற்றிருந்த வீரகேசரி வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டான். ஆனால் அவனது எக்காளம் விரைவில் நின்று விட்டது. கோட்டையின் உள்ளிருந்து பாண்டிய நாட்டு சிப்பாய்கள் காலாட்படையினர், குதிரை வீரர்கள் எல்லோருமே காலாட்படைகளாகவே வெளியே வீசப்பட்டனர். சிப்பாய்களை வெளியேற்றியபின் இரும்புக் கோட்டையின் கதவுகள் முன் போல் மூடிக் கொண்டன. இரும்புக்கோட்டை மக்கள் கைப்பற்றிய குதிரைகளில் வலம் வரத் தொடங்கினார்கள். அங்காடிகளுக்குள் குதிரையிலேயே சென்று பொருள்களை வாங்கினர். ( இதைத்தான் இக்காலத்தில் டிரைவ் இன் என்கிறோம்).

    இரும்புக்கோட்டையை எப்படி கைப்பற்றுவது என்று பராக்கிரம பாண்டியன் அமைச்சர் முத்துவேலருடன் கலந்தாலோசித்தான். அவர்களுடைய உரையாடல் இதோ:

    அமைச்சர்: மன்னா,இரும்புக்கோட்டைக்குள் எத்தனை மனிதர்கள் அதில் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நாம் அதற்கு தகுந்த மாதிரி படை பலத்துடன்
    மோதலாம்.

    மன்னன்: அது எப்படி சாத்தியமாகும்?

    அமைச்சர்: நாம் ஒரு ஒற்றனை இரும்புக்கோட்டை நுழை வாயிலிக்கெதிரில் ஒரு நெடிதுர்ந்த மரத்தில் அமர்ந்து இரும்புக்கோட்டைக்குள் நடமாடும் மனிதர்களை கணெக்கெடுக்க செய்யவேண்டும்?

    மன்னன்: இது நல்ல யோசனையாக இருக்கிறது. ஒரு ஒற்றனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    அமைச்சர்: மன்னா, எனக்கு தெரிந்த மருது என்ற இளைஞன் ஒற்றர்களுக்கான பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றவன். நான் அவனை அழைத்து வருகிறேன்.

    மன்னன்: சரி, அப்படியே செய்யுங்கள்.

    உண்மையில் மருது அமைச்சரின் சகோதரி மகளின் கணவன். அமைச்சர் மருதுவிடம் சென்று மன்னர் உன்னிடம் ஒரு முக்கியமான வேலையை தரப் போகிறார். அதை செய்து முடித்தால் உனக்கு நிறய பொற்காசுகளை நான் வாங்கி தருவேன் என்றார். பொற்காசுகள் கிடைக்கும் என்றவுடன் மருது துள்ளி குதித்துக் கொண்டு அமைச்சருடன் மன்னரவைக்கு வந்தான். மன்னரவையில்,

    அமைச்சர்: மன்னா, இவன் தான் நான் சொன்ன மருது. மருது மன்னனை வண்ங்குகிறான்.

    மன்னன்: நல்லது. மருது, நீ இரும்புக்கோட்டையைப் பற்றி வேவு பார்க்க செல்ல வேண்டும்.

    இரும்புக்கோட்டை என்றவுடன் மருதுவுக்கு கை கால்கள் உதறத் தொடங்கின. இரும்புக்கோட்டை உள்ளிருந்து வெளியே வீசப்பட்ட அனுபவம் அவனது சிப்பாய் உடையை நனைக்க வைத்தன.

    மருது: மன்னா, மன்னிக்கவேண்டும்... என்று குளரினான்.

    மன்னன்: ஏன் ஒற்றனாக போய் வர உனக்கு விருப்பம் இல்லையா?

    மருது: ஒற்றனாக போவதைப் பற்றியில்லை. ஒற்றையனாக போகவேண்டுமே என்றுதான்...

    மன்னன்: என்னது? ஒற்றர்கள் ஒற்றையர்களாகத்தானே செல்வது வழக்கம். வேன்டுமென்றால் பாண்டிய நாட்டு படை முழுவதையும் உன்னுடன் அனுப்பட்டுமா? .

    எப்படியாவது இரும்புக்கோட்டை அருகில் கூட செல்லக் கூடாது என்று நினைத்த மருது

    " மன்னா, எனக்கு மேலுக்கு சுகமில்லை.. ஆகவே..."

    மன்னனுக்கு கோபம் வந்து கைகளைத்தட்டி காவலர்களை அழைத்து

    " இவனோட ஒற்றை கண்ணைப் பிடுங்கி ஒற்றடைகள் நிறைந்த ஒற்றை சிறையில் அடைத்து வையுங்கள்"
    என்றான்.

    அதைக்கேட்டு பதை பதைத்த மருது மன்னனின் கால்களில் விழுந்து
    " கருணை காட்டுங்கள் மன்னா. நான் ஒற்றையனாகவே போகிறேன்" என்றான்.

    " அப்படி வா வழிக்கு. இரும்புகோட்டை நுழைவாயில் எதிரே ஒரு நெடிதுர்ந்த மரத்தில் மேலே உன்னை இலை தழைகளால் மறைத்துக் கொண்டு இரும்புக்கோட்டைகுள் நடமாடும் மனிதர்களை கணெக்கெடுக்க வேண்டும்" என்றான் மன்னன்.

    மருது (தயங்கியவாறு): எவ்வாறு நான் கணக்கெடுப்பது?

    மன்னன்: நீ உன் கால்கள் கைகளில் உள்ள விரல்களைக் கொண்டு கணக்கிடலாம்.

    அமைச்சர் குறுக்கிட்டு: மன்னா, மருது கால்கள், கைகளை பயன் படுத்தினால் அவன் தவறி மரத்திலிருந்து கீழே விழக்கூடும். ஆகவே, நீங்கள் அவனிடம் நூறு பொற்காசுகள் கொண்ட கிழி ஒன்றை தாருங்கள். மருது ஒவ்வொரு இரும்புக்கோட்டை மனிதருக்கும் ஒவ்வொரு பொற்காசுகளை மரத்தின் கீழே போட்டால் சுலபமாக கணக்கிட முடியும்.

    மன்னன்: இது நல்ல யோசனையாக இருக்கிறது. ஆனால், எனக்கொரு சந்தேகம். மருது திரும்ப திரும்ப ஒரே மனிதரை கணகிட்டால் கணக்கு தவறாகிவிடுமே?

    அமச்சர்: மன்னா, சந்தேகம் வேன்டாம், ஒற்றர்கள் பள்ளியில் மருதுவுக்கு ஒரு முகத்தை ஒரு தடவை பார்த்தால் அதை நினைவில் நிறுத்திக் கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

    ஒற்றர்கள் பள்ளியா அது எங்கிருக்கிறது என்று மருது வியந்தாலும் பயத்தால் அதை வெளிக்காட்டவில்லை.

    மன்னர்: அப்படியா, இதோ ஒரு பரீட்சை வைக்கிறேன். மருது, நேற்று அரசவையில் நடனமாடிய குழுவில் இடம் பெற்ற மங்கையர் யார்?

    மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி.

    மன்னன்: அற்புதம். மருது இந்தா இந்த பொற்கிழியை எடுத்துச் சென்று வா வென்று வா.

    பொற்கிழியை பெற்றுக் கொண்டு, சோற்று மூட்டையை ஒரு தோளிலும், நீர் குவளையை மற்றொரு தோளிலும் சுமந்து கொண்டு இரும்புக்கோட்டையை வேவு பார்க்க மருது புறப்பட்டான்.

    தொடரும்...
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சரித்திர கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்...விரும்பி படிக்கவும், தெரிந்து கொள்ளவும் ஏகப்பட்டது இருக்கும்.

    அச்சோ... நான் முழுவதும் பின்னூட்டம் கொடுப்பதற்கு முன் என் கணினி சதி பண்ணிவிட்டது....

    (அது எப்படிங்க... நடிகைகள் ஒருத்தரையும் விடாம தேவி ஆக்கிட்டீங்க?)

    கண்டிப்பாக இந்த கதையைத் தொடருங்கள் ப்ளீஸ்...
     
    Last edited: Feb 18, 2011

Share This Page