இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள்

Discussion in 'Jokes' started by jaisapmm, Jan 31, 2010.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!

    வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!

    இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை! அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தம்பிக்கு பெண் குழந்தைகளாகப் பிறந்தால் பொறாமை! நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்தால், இளமையிலேயே தளர்ச்சியாயிருப்பவர்களுக்குப் பொறாமை! இப்படி பொறாமையின் வரிசை நீளும்!

    காரணமில்லாத சில பொறாமைகளும் உள்ளன! அவற்றைச் சகிக்க முடியாது.
    ஏன் இந்த பொறாமை இதனால் யாருக்கு லாபம்? நெஞ்சம் இருண்டு போவதால் முகமும் இருளும்! எரிச்சலைத் தவிர நாம் காணும் பலன் என்ன கபீர்தாசர் சொல்வார்,
    'தான் தான் மே லிகாஹை
    கான் கான் கா நாம்!'

    ஒவ்வொரு தானியத்திலும் அதைச் சாப்பிடப் பிறந்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளதாம். இறைவன் வகுத்தது எதுவோ அதுவே நாம் அனுபவிக்கப் போகிற பொருள்.

    'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

    என்ற குறளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதச் சொல்வோம்! உடலெல்லாம் விளக்கெண்ணை பூசிக் கொண்டு ஆற்று மணலில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்! 'வருத்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்றால் போகா!'

    ஆகவே பொறாமை என்ற 'ஆமை' புகாமல் பார்த்துக் கொள்வது அறிவுடைமை!
    அதுவே நித்தம் நிம்மதி தரும்!
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Anbhu jaisa,
    nal vaazhvukku vendiya ilakkanaththai , kollavendiya aamai, thallavendiya aamaai moolamnanga kooriullergal. Mikka nanri.
    Anbhudan
    pad
     

Share This Page