1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

இரசப்ப(பி)த்து !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 6, 2018.

 1. PavithraS

  PavithraS Platinum IL'ite

  Messages:
  2,045
  Likes Received:
  4,122
  Trophy Points:
  290
  Gender:
  Female
  கரிக்குமுட்டி வெள்ளீயம் எல்லாமே நமக்குத்
  தருதே சிறுபிராய நினைவு.

  ஈயத்துச் சொம்பு தலைமுறை காணும்
  தீயிலே கவனம் மிகுங்கால்.

  ஈயத்து இரசத்திற்கு ருசியதிகம் பசித்தாலோ
  பாயலாம் நிலைவெள்ளி இரசத்துள்ளும்.

  வெள்ளீயச் சொம்பிட்ட இரசவாசம் போலாகா
  வெள்ளியுள் இட்டதாம் சாறு.

  ருசியேற்ற வெள்ளீயம் நாடலாம் மெய்ருசிக்கு
  ருசுவாகும் வெள்ளிக் கலம்.

  இரசமாக்கப் பருப்புப்புளி தக்காளி மிளகுடனே
  உசிதமாகும் ஈயச் சொம்பே.

  பருப்புருண்டை இரசமெனினும் கண்டந்திப்பிலிச் சாறெனினும்
  விருப்பமது வெள்ளீயம் பால்.

  கிள்ளி வைத்த இரசத்திற்கும் ருசியூட்டும்
  தெள்ளமுதாய் நல்லதோ ரீயச்சொம்பு.

  எலுமிச்சை இரசமிட்ட ஈயச் சொம்பினுள்
  நிலவொத்த வெண்ணிறம் மின்னும்.

  வேப்பம்பூ இரசத்தையும் இனிப்பாக்கும் இரசவாதம்
  எப்படியோ ஈயச் சொம்பில் ?!

  இரசமீயில் சொம்பீய மாகட்டு மில்லென்றேல்
  இரசனைக் குறைவு படும்.

  Regards,

  Pavithra :yum::yum::grinning:

  (பி.கு)
  நிலைவெள்ளி- Stainless steel or more colloquially Ever silver !
  வெள்ளீயம் - Tin (which is good for health not காரீயம்- Lead which is harmful if consumed regularly)
   
  Karthiga, jskls, Rrg and 4 others like this.
 2. Amulet

  Amulet IL Hall of Fame

  Messages:
  3,148
  Likes Received:
  5,063
  Trophy Points:
  408
  Gender:
  Female
  Rasam vs. E-rasam ? Why இ in front of the rasam?
  These Venpa like couplets are amazing compositions. இர|சத்|திற்|கும் :confundio1:
  I was tempted to check the meter prosody rules, i.e., Ma in front of Nirai, and Kai in front of Neyr.... and went Um..
  .[​IMG]
   
  Last edited: Oct 6, 2018
  periamma likes this.
 3. ragnarok

  ragnarok Senior IL'ite

  Messages:
  39
  Likes Received:
  23
  Trophy Points:
  23
  Gender:
  Female
  That's the right spelling - you have to add silent 'e' in front of r
   
 4. kaniths

  kaniths IL Hall of Fame

  Messages:
  5,628
  Likes Received:
  11,612
  Trophy Points:
  445
  Gender:
  Female
  Rasatthai 'Ee' meikkum enbadhalo? :tongueclosed::sleeping:
   
  PavithraS likes this.
 5. periamma

  periamma IL Hall of Fame

  Messages:
  9,236
  Likes Received:
  20,446
  Trophy Points:
  470
  Gender:
  Female
  இரசப்ப (பி)த்து

  இராப்பத்து பகல் பத்து போல் இது இரசப்பத்து ..இரசத்துக்கு சுவை ஊட்டுவது சேர்க்கும் பொருட்கள் மட்டும் அல்ல .அதை செய்ய பயன்படும் பாத்திரத்துக்கும் உண்டு என்று வடித்த கவிதை மிக நன்று .
   
  kaniths likes this.
 6. GoogleGlass

  GoogleGlass IL Hall of Fame

  Messages:
  5,711
  Likes Received:
  22,527
  Trophy Points:
  470
  Gender:
  Male
  அருமை அருமை

  ஹ்ம்ம் நமக்கு இதெல்லாம் எங்க தெரியுது?

  நமக்கு தெரிஞ்சதெல்லாம் எப்படா சொம்பு டேமேஜ் ஆகும், அத போட்டு ஈயம் பித்தளைக்கு நாலு பேரிச்சம்பழம் வாங்கி திங்கலான்னு தான் தோனும் :)
   
 7. PavithraS

  PavithraS Platinum IL'ite

  Messages:
  2,045
  Likes Received:
  4,122
  Trophy Points:
  290
  Gender:
  Female
  இரசித்துப் படித்தேன், " ஈ...ஈ..." என நகைத்தேன் ! :roflmao:
  வெகு நாட்கள் கழித்து என் பதிவில் கருத்திட்டமைக்கும், கருத்திடாமல் போனாலும், தொடர்ந்து வருகை தந்து போவதற்கும் மிக்க நன்றி, என்னருமைத் தங்காய் ! நலமோடு வாழ்க ! :)
  நன்றி, பெரியம்மா ! திருமணமான புதிதில் மனைவி கைகழுவிய நீரே ஒரு கணவனுக்கு 'இரசமாய்' இருப்பதுண்டு. அதுவே சில காலம் கழித்து, மனைவி செய்யும் எந்த உணவுப் பண்டமும், 'கழுவு நீர்ப்போல் ' இருப்பதுண்டென , நகைச்சுவைத் துணுக்குகள் ஏராளம் படித்திருக்கிறோம் அல்லவா ? :smile::smile:அதை ஆண், பெண் 'பால்' மாற்றிக் கூடப் போடலாம், இன்றைய சமூக வழக்கிற்கு ஏற்றதாயிருக்கும். இல்லையென்றால் பெண்ணீயவாதிகள் உண்டு இல்லையென்று செய்துவிடுவார்கள் !! :icon_pc::shakehead:நமக்கேன் வம்பு ?:worship2:

  நன்றி, GG !
  சொம்பு நல்லாயிருந்தாலும் இரசத்தை ஊற்றித் திங்கணும், அது நசுங்கினாலும் கடையில போட்டுப் பேரீச்சம்பழம் வாங்கித் திங்கணும்- ஆக மொத்தம் திங்கணும்... இந்த அறிவு ஒன்று போதாதா ? :facepalm::smile::smile:
   
  Last edited: Oct 6, 2018
  kaniths and GoogleGlass like this.
 8. PavithraS

  PavithraS Platinum IL'ite

  Messages:
  2,045
  Likes Received:
  4,122
  Trophy Points:
  290
  Gender:
  Female
  Thank you for the generous appreciation but I still consider this a scribble. Glad it sounds like 'Venpa' to you,though am not a pro in தமிழிலக்கணம் (பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடம் நானறியேன்...ஏடறியேன், எழுத்தறியேன்.. எழுத்துவகை நானறியேன்..இலக்கணம் படிக்கவில்ல..) leave alone the most rigorous among the five parts of the same, யாப்பு, which again has 6 parts எழுத்து ,அசை (இங்குதான் தேமா,புளிமா, கூவிளம், கருவிளம் எல்லாம் வரும் ), சீர், தளை, அடி, தொடை.. :grimacing:

  Hmmm...I too got a 'ismaal douttu'...Why use Ne'Y'r to denote நேர் when Ner might be less complicated transliteration ? Also, why get confused and go 'Um..' ?:rolleyes: When it comes to ரசம் /இரசம் /ரஸம் the only expression for me naturally is "Yum...." which actually sounds "slurp...slurp" when you try to out race the rasam served over rice on a வாழையிலை... That is an experience to cherish..:yum:

  Without much further ado, let us come to the point. Why use an extra letter 'இ' in front instead of just using 'ர' ? (@ragnarok , thanks for chipping in and explaining that 'இ' used here is actually silent :) )

  Then the question would be,"if it is just a silent 'இ' then why use it at all" ?! Well, it is because to educate the reader that the word used here is not ' தூய தமிழ்ச்சொல்' but borrowed and used from some other language, திசைச்சொல், mostly 'Sanskrit',வடமொழி. If that is the case, then the word is more specifically called as வடசொல். தூயதமிழ்வாதிகள் will recommend to avoid usage of such words which is actually to be appreciated. People with limited vocabulary, like me, tend to overlook their guidance and continue using such 'corrupted' words instead of searching for the appropriate தமிழ்ச்சொல்.

  However,here I used the word இரசம் for the same prosody meter that you have mentioned and also for the readers' easy understanding not because I do not know more appropriate தமிழ்ச்சொல் for the same. It is சாறு and I have used it too. It all depends on the limitations/abilities of the language user.

  There are strict rules in தமிழ் that governs as to which letters should come as the first letters in words, மொழி முதல் எழுத்துகள். எழுத்திலக்கணம் deals with that not யாப்பிலக்கணம். And it states that all the 12 vowels,உயிரெழுத்துக்கள், அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ will come as first letter in a word. When it comes to vowel consonants,உயிர்மெய்யெழுத்துகள், those born from the union of the following 10 consonants out of 18 ,மெய்யெழுத்துகள், 'க்,த்,ந்,ப்,ம்,ச்,ஞ்,ய்,வ், ங்' along with all 12 or some of the vowels ,உயிரெழுத்துகள், அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ appear as first letters மொழி முதல் எழுத்துகள்.

  Even among the above mentioned 10, the letter'ங்' will come first in a word only with some special letters அ ,இ ,உ எனும் சுட்டெழுத்துக்களோடு (denoting 'this, that, yours') அல்லது எ,யா எனும் வினா எழுத்துக்களோடு(questioning,'how, when, where') மட்டுமே ங் முதலெழுத்தாய் வரும். அங்ஙனம்,இங்ஙனம், உங்கை,எங்ஙனம்? யாங்ஙனம்?

  The remaining 8 consonants மெய்யெழுத்துகள் ட், ண்,ர்,ல்,ழ்,ள்,ற் and their vowel consonants 'kids',உயிர்மெய்யெழுத்துகள், born out of the union with vowels, உயிரெழுத்துக்கள் do not appear as first letters in words, மொழி முதல் எழுத்துகள் ஆகா. However they might be used colloquially in day to day normal usage of the language as words from so many other languages which might start with that sound have now come to stay forever in தமிழ், and as I stated earlier, these words fall under the category of 'திசைச்சொல்' if it comes from any other language other than Sanskrit, and 'வடசொல்' if it is specifically from Sanskrit.

  Not only a silent 'இ' is added before a திசைச்சொல் that starts with 'ர வரிசை' but also sometimes it could be an 'அ' or even ' 'உ' depending upon the vowel sound.The words that begin with long 'ஓ' sound 'ரோ' and the short 'ஒ' sound' ரொ' have an added silent letter 'உ' in the beginning. Interestingly, words starting with 'ல' also have an added silent 'இ' or 'உ'.

  'இ' கரம் அல்லது '' கரம் முன்னிட்ட சில 'ர' கர,'ல' கர வரிசைத் திசைச்சொற்கள், வடசொற்கள் மற்றும் அதற்கீடான தமிழ்ச்சொற்கள் சில எடுத்துக்காட்டு

  இரசனை - விருப்பு, விருப்பம்
  இராகம்- பண்
  இராஜா- அரசன்,மன்னன்
  இரத்தம்- உதிரம்
  இரவி- பரிதி
  இரம்பம் -அறுவாள் (அரிவாள் என்பது வேறு சொல் )
  இரதம்-தேர்
  இரம்யம்-இனிமை
  இரயில்- இருப்புப்பாதை வண்டி( முன்னர் புகைவண்டி, பிறகு நீராவி வண்டி)
  அரங்கம் - அவை
  உரோமாபுரி-யவனம்
  உரொட்டி-கோதுமைப் பண்டம் (??!!)
  உரோகம் -உடற்பிணி
  இலாபம்- வரவு
  இலட்டு -இனிப்புருண்டை
  இலஞ்சம்-கையூட்டு
  இலங்கணம்- பட்டினி,உண்ணாமை
  உலோகம்-கணிமம்
  உலாஸ்யம்,உல்லாசம்- மகிழ்ச்சி

  Since both the languages are among the world's oldest and Classical languages list, the influence of one language over the other is quiet dominant and evident. Only with constant use and practice, one can master differentiating between the two language.
  "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் ! " என்பது இதுகுறித்துத் தான் போலும்.

  பழக்க வழக்கம் என்கிறார்களே அது பற்றி ஒரு சிந்தனை தோன்றியது,மேல் விவரித்தக் கருத்திற்கும் இதற்கும் யாதொன்றும் தொடர்பில்லை.
  பழக்கம் - தனி நபருக்கு இருப்பது, நாளடைவில் அதுவே அவரது அடையாளமாகிவிடுமோ ?
  வழக்கம்- தனி நபர்கள் பலருக்கும் ஒத்திருக்கும் பழக்கம், அதுவே பரவலாக ஒரு வட்டாரத்தில் வழங்கக்கூடிய , மொழியால், இனத்தால் ஒரே வரைமுறைக்குட்பட்ட மக்கட்சமூகத்தினர்க் கடைப்பிடிக்கத் துவங்கிவிட்டால், அதுவே வழக்கமாகி விடுமோ ? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

  Found a link in the internet which might be useful for a better understanding of the subject discussed in case one is interested in a more detailed explanation.

  Thank you for your patience, I have not yet mastered the art of 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' !:)
   
  kaniths, GoogleGlass and Amulet like this.
 9. Amulet

  Amulet IL Hall of Fame

  Messages:
  3,148
  Likes Received:
  5,063
  Trophy Points:
  408
  Gender:
  Female
  PavithraS. Thanks for that essay. I will have to reread that some more. When the cadence of the recitation feels good, then all the தளை's would seem proper. I am still not so reconciled to adding that இ up front.
  Nevertheless, all your couplets are, as I said, quite amazing.
   
 10. GoogleGlass

  GoogleGlass IL Hall of Fame

  Messages:
  5,711
  Likes Received:
  22,527
  Trophy Points:
  470
  Gender:
  Male
  மதிய இரசம் மிஞ்சினால் சுடுதலில் சுருங்கி இரவு இட்லிக்கு ஈடு தரும் :)
   

Share This Page