1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனியவனே

Discussion in 'Stories in Regional Languages' started by ramachandran, May 21, 2010.

  1. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Part-2

    அதற்குள் கோவில் வந்து விட, ஒ.கே ..என்ற ஒற்றை வார்த்தையில் கீழே இறங்கியவள் ,அங்கே துரு துரு என்று ஒரு சிறு குழந்தை கோவிலில் இருந்து வெளியே ஓடி வருவதை பார்த்தாள்.

    அதே சமயம் அங்கே வாசல் அருகில் பூஜைக்காக வேகமாக ஒரு லாரி ரிவேர்ஸ் வருவதை கண்டவள் ,வேகமாக ஓடி , குழந்தையை காப்பாற்றினாள்.

    லாரி டிரைவர் உணர்ந்து பிரேக் அடிக்கும் முன்னர் லாரியின் பின் பகுதி அவளை வேகமாக இடித்ததில் அவள் கீழே விழுந்தாள்.

    காரை பார்க் செய்துவிட்டு வந்த அஜய்,இதை பார்த்து இஷு..... என்று அவள் அருகில் ஓடினான் .

    அவள் தலையை தன் கைகளில் ஏந்த அவள் ,"அஜ்ஜு, என் கை ரொம்ப வலிக்குதுடா" என்று முனகலாக கூறிக் கொண்டே மயங்கினாள்.

    இஷு ,இஷு என்று அவளை எழுப்ப முயன்றவன் ,அவள் கைகளை பார்த்து அதிர்ந்தான் .

    இடது கையில் ரத்தம் வழிவதை கண்டவன் ,உடனே அவள் புடவை ,முந்தானையை கிழித்து ஒரு கட்டு போட்டான்.

    அவளை உடனே தன் கைகளில் ஏந்தி கொண்டு காருக்கு சென்று, முன் சீட்டில் உட்கார வைத்தவன்,வேகமாக அருகில் இருந்த மருத்துவமனை எமேர்ஜன்சி வார்டில் அவளை அட்மிட் செய்தான்.

    அவளை உள்ளே அழைத்துச் சென்றவுடன், தன் உயிர் பத்திரமாக வந்து சேர வேண்டும் ,என்ற நினைவில் அங்கு இருந்த சேரில் தோய்ந்து அமர்ந்தான்.

    அஜய்...
    ராம் மற்றும் மல்லிகாவின் செல்லப் பிள்ளை.
    அஜய் மிகவும் கம்பிரமானவன்.சிறிது கருப்பாக இருந்தாலும் ,அதுவே அவனுக்கு ஒரு தனி அழகை கொடுத்து வந்தது.mba முடித்து விட்டு தன் தந்தையின் பிசினஸ் பார்த்து வருகிறான்.

    ராம் ,அஜயின் தொழில் நுட்ப திறமையை நன்கு உணர்ந்ததால் , அனைத்து பொறுப்புகளையும் அவனிடம் கொடுத்து விட்டார்.
    சென்ற வருடம் ராம்,மல்லிகா இருவரும் இந்தோனேசியா, சுற்றுல்லா செல்ல அங்கே நடந்த பூகம்பத்தில் இருவரும் ஒன்றாக பலியானார்கள்.

    அதன் பின்னர் தென்னவன் தான் அஜயை தேற்றி ,அவனுக்கு ஒரு தூணாக இருந்து வந்தார்.

    ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு அஜயை விட, ரிதியை தேற்றுவது தான் மிகவும் கடினமாக இருந்தது.

    கடைசியில் ரிதியின் நிலைமையை பார்த்த அஜய் தன் கவலையை,மறந்து ரிதியை மெல்ல தேற்றி சமாதானம் செய்தான்.

    வெளியில் வந்த டாக்டர் பயப்பட ஒன்றும் இல்லை என்றும்.
    ரத்த சேதம் ஆனதினால் அவளுக்கு ரத்தம் ஏற்றியதாகவும் ,கை காயத்திற்கு தையல் போட்டு உள்ளதாகவும் கூறினார்.
    இன்னும் சிறிது நேரத்தில் நினைவு திரும்பி விடும் என்று கூறினார்.

    தனக்கு நல்ல செய்தி சொன்ன டாக்டரிடம் நன்றி உரைத்து விட்டு உள்ளே சென்றான்.

    அவளுடைய கைகளை, தன்கைகளால் மயிலிறகை வருடுவதைப் போல் வருடியவன் ,அவளின் அசைவை கண்டு அவள் அருகில் அமர்ந்தான்.

    கண் விழித்த இஷு, அவன் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க தன் கைகளை தூக்க, வலியை உணர்ந்தாள்.

    அம்மா......, ,என்று வலியில் துடித்தவளை பார்த்து.,இஷு ஒன்னும் இல்லைடா.கை அசைக்காம வெச்சு கோ.

    அவளை சிரிக்க வைக்க எண்ணி ,"இப்ப எதுக்கு என்ன அடிக்க கை தூக்குற",.என்று கேட்டான்.

    "டேய்,போடா போனா போகுதே, அழுது வடியரையே, பாப்பாவிற்கு கண்ண துடைக்கலாம்ன்னு தூக்குனா".

    "யு ,யு ,யு "என்று அவள் சொல்ல, அஜய் "எஸ்.,ஐ, ஐ, ஐ" என்று கூறி இருவரும் சிரித்தனர்.

    "இஷு, ரொம்ப வலிக்குதாடா" என்று கேட்டான்."இல்ல ,அஜ்ஜு ரொம்ப ,ரொம்ப, ரொம்ப, வலிக்குது" என்றாள்.

    அவன் முகம் மீண்டும் சுருங்க, அவள் பேச்சை மாற்ற எண்ணி
    அஜ்ஜு," அப்பாவிற்கு கால் பண்ணிட்டியா".என்று கேட்டாள்
    "சாரி இஷு,டென்ஷன்ல சொல்லலே.இப்ப சொல்லிடறேன்", என்று அவன் போனை எடுக்க, அது மெல்லிய சங்கீதத்தை இசைக்கவும் சரியாக இருந்தது.
     
  2. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Friends,
    Here we go with the second update.
    Another one or two updates story will be over.
    Please do pen your comments.
    :)
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    story is going cool.......rama chandran........keep post next part quickly.......
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice conversations....
     
  5. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Devapriya,
    Thanks .:)
     
  6. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
  7. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Latha,
    thanks so much.:)
     
  8. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Part-3

    "ஹலோ அங்கிள்",என்று எடுத்தவன் ,தென்னவனிடம் சுருக்கமாக நடந்த விஷயத்தை கூறி ,பயப்பட ஒன்றும் இல்லை என்று கூறினான்.

    அதற்குள் இஷு போனில் "அப்பா,ஒன்னும் பிரெச்சனை இல்லை , நீங்க இங்கே மெதுவா கிளம்பி வாங்க " என்று கூறினாள் .

    தென்னவன் அங்கே உடனே வருவதாக கூறி விட்டு, டிரைவரிடம் ஹாஸ்பிடல் பேரை கூறி காரில் அமர்ந்தார்.

    கண்களை மூடியவர்,"என் பெண்ணிற்கு ஒன்றும் இருக்க கூடாது ,கடவுளே இது என்ன சோதனை ,இன்று ரித்து மற்றும் அஜயிடம் திருமணத்தை பற்றி பேசி ,முறையாக மாலையில் அறிவித்து விடலாம் என்று நினைத்து இருந்தேனே".

    "இப்படி ரித்து, பிறந்த நாள் அதுவுமாக ,ஹாஸ்பிடலில் இருகிறாளே", என்று நினைத்தவர் கண்களில் தானாக சூடான நீர் மணிகள் இறங்கியது.

    அவர் ரித்து ரூமை அடைந்து ,"ரித்து ,எப்படி இருக்க கண்ணா "என்று கண்களில் நீர் வழிய கேட்டார்.

    ரித்து அவரைப் பார்த்து,"டேய் அப்பா,நான் நல்ல இருக்கேன் .இப்ப தான் டாக்டர் வந்து பார்த்துட்டு எல்லாம் நார்மல் ஆகா இருக்கு ," என்று கூறினார்.

    அதுக்குள்ளே ,"நீங்க ஏன் இப்படி ரிவர் எல்லாம் ஓபன் பண்றீங்க", என்றாள்.

    இதை கேட்டு செல்லமாக அவள் தலையில் முட்டியவர் ,"எனக்கு எல்லாம் நீதானடா . பிறந்த நாள் அதுவுமா இப்படி" ..என்று ஆரம்பித்தவரை..."அப்பா ,டேய் ரொம்ப செண்டிமெண்ட்..தாங்க முடியலே...ஏற்கனவே எனக்கு டாக்டர் போட்ட ஊசி கண்ண கட்டுது" என்று கூறினாள்.

    "சாரி டா கண்ணா ,நீ தூங்குடா.அஜய் எங்கே என்று கேட்டார்.?".

    "அப்பா ,அஜ்ஜு இப்பதான் என்னக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர சென்று இருக்கிறான்". என்றாள்.

    அதே நேரம் அங்கே அஜய் வந்துவிட அவன் வாங்கி வந்த பாலை மெதுவாக அவளுக்கு தென்னவன் புகட்ட ,அவள் குடித்து முடித்ததும்...அவளை மருந்தின் வீரியம் தாக்க கண்கள் மூடி ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றாள்.

    அதற்குள் தென்னவன் சென்று டாக்டரிடம் தன் மகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டுவந்தார் .

    அன்று நடக்க விருந்த பார்டியை கான்செல் செய்து விட்டதாக அனைவர்க்கும் கூறியவர் ,அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள ,அவரை விட ஒரு படி மேலே அஜய் ரிதுவை கவனித்துக் கொண்டான்.

    நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்க்கு வந்தாள்.

    சில நாட்கள்ளிலேயே இருவரின் கவனிப்பிலும் உடல் தேறியவள் ,பிசினஸ் ஐ வீட்டில் இருந்தபடியே கவனிக்க ஆரம்பித்தாள்.

    நாட்கள் உருள, அன்று அவளுக்கு மருத்துவ மனையில் பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருந்தது.

    மேலும் அவளுடைய ரிபோர்டை அன்று பெற்று கொள்ளுமாறு கூறி இருந்தனர்.

    தென்னவன் ,அஜய் இருவருக்கும் அன்று முக்கியமான மீட்டிங் இருந்ததால் அவள் தனியாகவே சென்று வருவதாக கூறினாள்.

    பரிசோதனை முடித்துவிட்டு ,ரிபோர்டை வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள் .
     
  9. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Friends,
    Here we go with the Part-3.
    Thanks
     
  10. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi ram...
    story is wonderful....:) conversations are wonderful....extrodinary....:clap soga kathai ezhutthidaatheenga pa.....:-( waiting eagerly for the next part....:):thumbsup
     

Share This Page