1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிப்பும் கசப்பும்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Apr 19, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female




    எனக்கு ரொம்ப நாளாவே இந்த அல்ப ஆசை உண்டு ,எல்லாருக்கும் என்னை மாதிரி இந்த அல்ப ஆசைகள் எல்லாம் உண்டா இல்லையான்னு அதோட விளைவு தான் இந்த


    அல்ப சந்தோசம்


    முதல் முதல்ல பந்தியிலே ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது ..


    யாரும் பாக்காத போது புது ட்ரசைப் போட்டு பாக்கும் போது........


    அடுத்தவாளோட வாட்சைக் கட்டிண்டு அழகு பாக்கும் போது....


    கல்யாணத்திலே, நாதஸ்வரம் வாசிக்கறவன் இல்லாத போது, அதை எடுத்து வாசிக்க ட்ரை பண்ணும் போது ............


    ரொம்ப கூட்டமா இருக்கிற பஸ்லே, எறங்கப் போறவன் நமக்கு சீட்ட கொடுக்கும் போது........


    டிவி சீரியலிலே அடுத்து வரப் போற டயலாக்கை சொல்லும் போது..........


    பஸ்லே சின்ன பசங்களா இருக்கிறப்போ டிரைவர் சீட்டிலே உட்கார்ந்து பார்க்கிற போது.........................


    லாட்டரி சீட்டிலே ஒரு இருபது ரூபாயாவது விழும் போது................


    யாராலும் திறக்க முடியாமல் போன பாட்டில நாம் திறக்கும் போது........


    பக்கத்துக்கு வீட்டு காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிபோயி ஒளிஞ்சிக்கரபொ ...

    அடுத்த வீடு போட்டோ ஆல்பத்தில் நம்முடைய போட்டோவை திரும்ப ஒரு தரம் பார்க்கும்போது....



    நம்மளோடே வயசை அடுத்தவர் குறைவாக சொல்லும் போது.....


    பஸ்சுக்கு கால் கடுக்க நிக்கும்போது தெரிந்தவர் லிப்ட் கொடுத்தால்......


    கடைக் காரர் கொசுறு கொஞ்சம் அதிகமாபோடும் போது.....

    நம்ம பேரம் பேசற விலைக்கு கடைக்காரர் சாமான் கொடுக்கும் போது.......







    புது சோப்பு, புது பேஸ்ட், நம்ப முதலிலே எடுக்கும் போது.....


    கடைக் காரன் ஒரு சோப்போ,சீப்போ எக்ஸ்ட்ரா மறந்து போயி போட்டப்போ....

    கடைக் காரன் பில்லிலே டோடல் மிஸ்டேக் பண்ணி நம்ம கொஞ்சம் கம்மியா பணம் கொடுக்கும் போது.........


    புது டிசைன்ல நெக்லேசோ அல்லது புடவையோ கட்டிண்டு போயி எல்லோரும் நம்மை வச்ச கண்ணை வாங்காம பாக்கும்போது...........






    அதே மாதிரி சில சமயம் எரிச்சலும் வரும் கோபமும் வரும் அதுவும் உங்களுக்கெல்லாம் உண்டான்னு தெரிஞ்சுக்க தான் இந்த


    எரிச்சல்


    ரொம்ப இன்டரஸ்டிங்கா சினிமா பாககுரப்போ அடுத்த வீட்டு வாண்டு கதை முடிவை சொல்றப்போ......................

    அவசரமா கிளம்பும் பொது செருப்பு ஸ்ட்ராப் பியும் போது.................

    தலையிலே எண்ணையை வச்சிண்டு குளிக்கப் போகும் போது தண்ணி நிந்து போகும் போது ....

    கொஞ்சூண்டு கறிவேப்பலை வேணும்னுட்டு ஒரு பெரிய கிளையய்யே எடுத்துண்டு போற போது ......


    ஹோட்டல்லே , நமக்குத்தான் சர்வர் சூடா இட்லி கொண்டு வரான்னு நினச்ச போது, அவன் நம்மை தாண்டி போற போது..................


    போஸ்ட் மன் நம்ம வீட்டிற்குத் தான் லெட்டர் கொண்டு வரான்னு ஆவலா பாக்கிறப் போ அடுத்த வீட்டுக்கு போற பொது...................

    அப்படியே வந்தாலும் வெறும் கல்யாணப் பத்திரிகை கொடுத்துட்டு போறப்போ............




    கடையில் சாமான் வாங்கிட்டு வரப் போ, பை பிடி அறுந்து மானத்தை வாங்கும் போது. ...........................


    டிக்கட் கவுண்டரில் அடுத்தவன் கியுவை நைசாக உடைத்துண்டு வந்து நிக்கும் போது ..............................


    சினிமா பார்க்கும் போது நெட்டையன் வந்து முன் சீட்டில் உட்காரும் போது......


    சினிமா பாக்க உடாம பாப் கார்னை சத்தம் போட்டு சாப்பிடும் போது.......................


    நாம் பேப்பர் படிக்கும் போது அப்படியும் இப்படியும் கழுதை சாய்த்து அடுத்தவன் படிக்கும் போது.....



    லைப்ரரியிலே புஸ்தகம் படிக்காம மடியிலே வச்சுண்டு அடுத்தவாளை படிக்க விடாம பண்ணும் போது...............


    விசேஷ காலங்களில் பந்தியில் உட்கார்ந்து சாப்பாடு பரிமாறின உடனேயே இலையை காலி பண்ணும் போது .........

    சின்ன பசங்களை, சினிமா தியேட்டர்லே அம்போன்னு விட்டுட்டு இருக்கிற பெற்றோர்களை பார்க்கும் போது .........

    ஓசியில புக் படிச்சுண்டு இருக்கிற சமயத்திலே , நம்ம இறங்கணுமோ இல்லை புக் குடுத்தவன் இறங்கரப்போவோ ......



    கடைசி ரொட்டி பண்ணும் போது காஸ் சிலிண்டர் தீர்ந்து போகும் போது......


    முக்கியமா எழுதிண்டு இருக்கப் போ பால் பென் ரீபில் காலி யாகும் போது ...
    .

    ..டிவி சீரியல் பாக்க மெனக் கெட்டு உட்கார்ந்துண்டு இருக்கப் போ கரண்ட் போகும் போது..........


    சுவாரசியமா பேசிண்டு இருக்கப் போ யாராவது காலிங் பெல்லை அடித்தால்...........


    லெட்டர் போஸ்ட் பண்ண வுடனே முக்கியமான சமாசாரம் ஞாபகம் வரும் போது.....



    நாம் தக்காளி பதினைந்து ரூபாய்க்கு வாங்கிட்டோம்னு பெருமை படரப்போ, அடுத்தவன் பாத்து ரூபாயிக்கு வாங்கினேன்னு சொலும் போது.........




    நம்ப வரப் பார்த்து லிப்ட் மன் லிப்ட் கதவை சாத்தும் போது.......


    முக்கியமா வேணும்கறப் போ செல் பாட்டரி காலியாகும் போது.......



    ஓட்டல்லே பில் நம்ப பே பண்றோம்னு சொல்லி பர்சை திறந்து பார்த்து பணம் போறாதப் போ ........


    சாப்பிடும் போது மாடு நாய் மாதிரி உறிஞ்சி சத்தம் போட்டு பக்கத்திலே இருப்பவனை வெறுப்பேத்தறது ...............


    வீட்டுக்கு வர விருந்தாளியை காபி குடிக்கறீங்கலான்னு கேட்டுட்டு,போயி பார்த்து பாலோ அல்லது டிகாக்க்ஷனோ இல்லாதபோது..........


    விருந்துக்கு போயி சமையல் நல்லா இல்லேன்னாலும் பேச்சுக்காக நல்லா இருக்குன்னு சொல்லப் போயி, அவங்க நமக்கு பிடிக்காத ஐட்டத்தை நிறையவே இலையில் போடும் போது.............


    பார்டிக்கு நல்லா சாப்பாடு கிடைக்கும்னு பசியோட போயிட்டு, அங்க வெறும் ஸ்நாக்ஸ் மட்டும் சாப்பிட கொடுத்தால் ...................


    கம்ப்யுடரிலே நிறைய டைப் பண்ணி சேவ் செய்யப்பார்த்து கரண்ட் போறப்போ .........................




    ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி ரிபோர்ட் கார்டுலே சைன் போட பசங்க ஞாபக படுத்தும் போது...............


    அடுத்த நாள் பாங்கிலே பணம் எடுக்கலாம்னு இருக்கறப்போ கவர்ன்மென்ட் ஸ்ட்ரைக்குன்னு சொல்லி பேங்க் மூடிவிடும்போது .... ........


    சின்ன குழந்தையை நர்சரி ரைம்ஸ் சொல்ல சொல்லி அது மக்கர் பண்ணும்போது....

    முக்கியமா கால் எதிர் பார்த்துண்டு இருக்கிறப்போ டெலி மார்கெட்டிங் கால் வரப்போ..............


    [ நீங்களும் இந்த லிஸ்ட்ல உங்களுடைய அல்ப சந்தோசம் ,எரிச்சல் ரெண்டையும் சேர்க்கலாம்]







     
    1 person likes this.
  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Everywhere it happens???????? Sometimes we can enjoy the outcome of the result.
     
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Dear Mathangi ma'am....
    Sweet post.....
    Now I understand the secret of your freshness and happiness( which is reflected in your posts)....
    Enjoyed reading your aasais......
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தொலைகாட்சியில் இனிமையான பாடலொன்றைக் கேட்டு அதை தனிமையில் பாடி பார்க்கும் போது.......

    நான் கொடுக்கும் ரோஜாவை என் ஆசிரியர்கள் சூடிக்கொள்வதை நான் பார்க்கும் போது........

    இந்த உடையில் நீ அழகாய் இருக்கிறாய் என்று யாராவது சொல்லும் போது........

    ஒரு சிறு தலைவலிக்கு என்னை சுற்றியுள்ளவர்களே துடித்து போய் என்னை கவனிக்கும் போது....

    மார்கழி பனியில் மாவு கோலம் போட திணறும் போது.....

    அதிக மதிப்பெண் வாங்கியதற்கு பெற்றவர்களிடமிருந்து பரிசு பெறும் போது....

    என் பிறந்தநாளின் நள்ளிரவு நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுப்பி தோழிகள் வாழ்த்து சொல்லும் போது.....

    அழகாய் துணிகளை அடுக்கி வைத்ததற்கு அம்மாவிடம் பாராட்டு வாங்கும் போது..........

    இவையெல்லாம் நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாலும்,அவை நடக்கையில் என் மனம் துள்ளத்தான் செய்யும்.:)
     
    1 person likes this.
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    நம்ம உடை கலர்ல தோழியும் உடை அணிந்து வரும் போது

    assignment submit பண்ற last datela assignment முடிக்காம முழிக்கும் போது அந்த lecturer leavenu தெரியும் போது

    funtionukku அணியும் உடைக்கு சரியாய் நகைகளை பிறர் தேர்வு செய்யும் பொது

    தனக்கு பிடித்த தொலைகாட்சி ப்ரோக்ராமை பார்க்காமல் நமக்கு பிடித்ததை நம்முடன் பார்த்து ரசிப்பது

    தலைவலியுடன் வீட்டிற்கு திரும்புகையில் தயாராய் காபி கொடுப்பது

    நாம் பார்த்து ரசித்த ஓவியத்தை நமக்கு தெரியாமல் வாங்கித்தருவது
     

Share This Page