இந்த மலரும் எனதில்லை இந்த மலர் தோட்டமும் எனதில்லை இவை கொண்டு இது நாள் நான் பூஜித்த அந்த தேவதையும் என்னுடையதில்லை இந்த மொழியும் எனதில்லை இந்த மொழியின் வார்த்தைகளும் எனதில்லை இவை கொண்டு இது நாள் நான் எழுதிய அந்தக் கவிதைகளும் என்னுடையதில்லை இந்த இதயமும் எனதில்லை இந்த இதயத்தின் துடிப்புகளும் எனதில்லை இவை கொண்டு இதுநாள் நான் சுவாசித்த உன்பெயரும் என்னுடையதில்லை இந்தப் பாதை எனதில்லை இந்தப் பாதையின் பயணமும் எனதில்லை இதில் சென்று நானடைய நினைத்த அந்த காதல் மந்திரமும் என்னுடையதில்லை வாழ நினைத்தேன் வாழ்க்கையில்லை மாள நினைத்தேன் மரணமில்லை உன் நினைவால் உன் பிரிவால் இதுவரையில் அரங்கேறிய நாடகமும் என்னுடையதில்லை
வெங்கடேஷ் கவிதை நன்று .எதுவும் நமக்கு உரியதல்ல என்று நினைத்தால் வலி இருக்காது .உங்கள் கவிதைகளில் சோகம் தெரிகிறது .விரைவில் ஆனந்த கவிதை எழுதுங்கள்