1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்துமத ஆசார-நம்பிக்கையின் இரகசியங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Feb 19, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன்?

    திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணியவேண்டுமென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டுமென்றும் கூறுவது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம்.

    திருநீர் அணிந்தவரை இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறியேதீறவேண்டும்.

    திருநீரின் மருத்துவ குணங்களைப்பற்றி நம் முன்னோர்கள் நன்கறிந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி திருநீரை ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும், இரு புஜங்களிலும், சில வர்மஸ்தானக்களிலும், பாட்டனும், பாட்டியும் பூசிக்கொள்வதை சிலராவது பார்த்திருப்போம். மாலைப்பொழுதிலும் இவ்வாறு திருநீரை நனைக்காமல் பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறோம்.

    ஆனால் குளித்தபின் திருநீரை நனைத்து உடலில் பூசி வந்தனர், நம் முன்னோர்கள். இதன் காரணம் என்னவென்று இப்போது இங்கு பார்ப்போம்.

    திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்தியிருக்கிறது. திருநீரை உலர்ந்த உடலில் நனைக்காமல் பூசுவதால், திருநீர் அணுக்களை அழிக்கும் சக்தி மிகையாக இருக்கும். குளித்தபின் நமது உடலில் ஈரம் உள்ளதால் அதை உறிஞ்சி எடுத்து அணுக்களை அழிக்க விபூதியை நனைத்துப் பூசிக்கொள்ளுகிரோம்

    இவ்வளவும் அறிந்தபின், நம் உடலில் காலையிலும், மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம். இரவு ஒருவர் தூங்கும்போது அவர்களின் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும், என்று விஞ்ஞானம் கூறுகின்றது. அதேபோல் மாலைநேரத்தில் சுற்றுச்சுழலில் உள்ள எண்ணற்ற நோயணுக்கள் நம் உடலில் வந்து வாழத்துடங்குகின்றன என்பது உருதியான கண்டுபிடிப்பு. அதனால் கலையிலும், மாலையிலும் இந்த நோயணுக்கள் நம்மை பாதிக்காமல் இருக்க திருநீரை அணிந்துவந்தனர்.

    குளிக்கும்போது நம் தோள்பட்டை, கழுத்து, நெற்றி, கைமுட்டுகளிலும், நெஞ்சு முதலிய இடங்களில் நீர் கட்டி உருவாகும். அது காலப்போக்கில் கொழுப்பாக மாறி சளி, முட்டு வாதம், போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டிவரும். அவற்றை தவிர்க்க குளித்தவுடன் ஈரமான நனைத்த திருநீரு அணிவதால் அந்த பாகத்திலிருந்து ஈரத்தை உறிஞ்சி எடுத்து நமக்கு நீர்கட்டுவதை தவிர்க்கிறது.

    திருநீர் அணியும்போது சொல்வதற்காக நமது ஆசார்யர்கள் மந்திரமும் விதித்திருக்கின்றனர்

    "ஓம் அக்னிரிதி பச்மஜலநிதி பஸ்ம
    சர்வம் ஹவா இதம் பஸ்மே
    மன ஏதானி ச க்ஷும் ஷிபஸ்ம்"
    [FONT=lucida grande, tahoma, verdana, arial, sans-serif],,,,,,,,,,[/FONT]
    சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

    வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும்.

    இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும், ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும்.

    பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும், கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல், தையல் இருக்கக் கூடாது; இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால், திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம்.

    பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன், கை, கால் அலம்பி, மந்திரம் உச்சரித்து, சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது, வீண் வம்பு பேச்சு பேசாமல், அன்னத்தை நிந்திக்காமல், பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில், வீட்டில் அவசப்தம், அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு, அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான்.

    உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ, சட்டை அணிந்தோ, உடைந்த பாத்திரங்களிலோ, இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும், வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு; இது கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ, தண்ணீர் எடுத்து கை, கால் அலம்பவோ கூடாது. "என்ன சார்... இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா... என்று கேட்டால், சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும். முடிந்ததை அனுசரிக்கலாமே!

    [FONT=lucida grande, tahoma, verdana, arial, sans-serif];;;;;;;;;;;;;;;;;;;;[/FONT]
     
    1 person likes this.
  2. jasmine25

    jasmine25 Gold IL'ite

    Messages:
    860
    Likes Received:
    940
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Re: இந்துமத ஆசார-நம்பிக்கையின் இரகசியங்கள&#302

    Very nice to read the reason behind these Sastras..Thank you Mathangi mam
     

Share This Page