1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்துக்கள் சொன்ன தத்துவம் அவனுக்கு புரிந்தது

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Aug 18, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இந்துக்கள் சொன்ன தத்துவம் அவனுக்கு புரிந்தது

    அண்டத்தில் இருப்பதெல்லாம் ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றது என என்றோ சொல்லிவிட்ட மதம் இதுமதம், மானிட இனம் அதை கடந்த நூற்றாண்டில்தான் உணர்ந்தது

    முதலில் உணர்ந்தது மாமேதை ஐன்ஸ்டீன் அவனே அணுகருவினை சுற்றி நியூட்ரானும் எலெக்ட்ரானும் இன்னும் பல துகள்களும் சுற்றுவதை உணர்ந்தான், அப்படியே வானத்தில் சூரியனை சுற்றி கிரகங்களும் சுற்றிகொண்டிருப்பதை கண்டான் அப்படியே ஆச்சரியத்தில் அமர்ந்தான்

    அணுகருவினை துகள்கள் சுற்றும் வகையும் வான்வெளி கோள்களின் சுற்றும் வகைக்குமான பொது சூத்திரத்தை கண்டறிய முற்பட்டான்

    இந்துக்கள் சொன்ன தத்துவம் அவனுக்கு புரிந்தது, அப்படியே அவன் அணுகுண்டை தயார் செய்தபொழுது மாபெரும் அந்த சக்தியினை வெளிபடுத்த ஒரு பெரிய‌ சக்தி இணைய வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
    அப்பொழுதுதான் சிவசக்தி தத்துவமும் உலகுக்கு புரிந்தது

    இந்திய தத்துவ ஞானமெல்லாம் விஞ்ஞானம் என உணர்ந்த அந்த விஞ்ஞான கூட்டம், நடராஜர் சிலை தத்துவம் என்பது சதா சர்வகாலமும் இந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கின்றது அதாவது வானியல் கோள்கள் இயங்குகின்றன, சூரிய மண்டலம் இயங்குகின்றது அப்படியே

    பொருட்களுக்குள் அணுவும் இயங்கி கொண்டே இருக்கின்றது என்பதை சொல்வதை அப்படியே கண்டுகொண்டது

    சிவநடனம் நின்றால் உலகம் இயங்காது என இந்துமதம் சொன்னதை இந்த சுழற்சி இயக்கம் நின்றால் உலகம் இல்லை என்பதை சரியாக சொன்னது விஞ்ஞானம்

    அனைத்துலக அணுசக்தி தலமையகத்தில் நடராஜர் சிலை வைக்கபட்ட தத்துவம் அதுவே

    இன்று விஞ்ஞானம் சொன்னதை அன்றே அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் இந்துக்கள், திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார்.

    அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானத்தை தெளிவாக‌ சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று.

    சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது பாரதம். இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு

    இந்துமதம் எல்லா விஷயங்களிலும் எல்லை கண்டு இது உலகை அழிக்கும் பேராபத்து என ஒதுக்கி வைத்த விஷயத்தை கடந்தாண்டு புதிதாக படிக்க தொடங்கியது மேற்குலகம்

    ஜாண் டால்டன் அணுவினை பற்றி புதிய கருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று. அன்று அவர்கள்தான் அறிவு களஞ்சியங்கள்.

    நீல்ஸ்போர், ருதர்போர்டு ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. கொலைதாண்டவம் ஆடிகொண்டிருந்தான் ஹிட்லர்

    அமெரிக்கா ஒன்றே அவர்களுக்கான அடைக்கலம், மற்றபடி ஐரோப்பா முழுக்க ஹிட்லரின் கோட்டையாக இருந்தது, பிரிட்டனும் சோவியத்தும் மட்டும் எஞ்சியிருந்தன அவைகளும் ஹிட்லரிடம் தடுமாறிகொண்டிருந்தன‌

    அமெரிக்காவுக்கு உள்ளூர அச்சமிருந்தது, அமெரிக்க யூதர்களுக்கு அதை விட பேரச்சம் இருந்தது. எப்படியாவது வல்லமை மிக்க ஆயுதம் செய்து ஹிட்லரை மட்டுமல்ல அவன் படையினையே மொத்தமாக‌ கொல்ல வெறியில் இருந்தனர்.

    ஹிட்லரின் பெரும் எதிரிகளான யூதர்கள் கைக்கு அணு ஆராய்ச்சி வந்தது இப்படித்தான்

    அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணிக்கபட்டனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான‌ ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்களும் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை.

    ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது.

    அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு "ராமர் பிள்ளை" நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார்.

    ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில் இருந்தார்.
    ஆனால் அப்பக்கம் அணுகுண்டு ஆராய்ச்சியினை தொடங்கி இருந்தான் ஹிட்லர், ஆனால் அணுகுண்டினை விட அவனின் கவனம் விண்வெளி ஆதிக்கத்திலே இருந்தது, அமெரிக்காவினை கணக்கில் எடுக்காத அவன் பிரிட்டன் சோவியத் என்றே சுற்றிகொண்டிருந்தான்

    ஆணாலும் கிட்டதட்ட பாதி அணுகுண்டு கிணற்றினை தாண்டியிருந்தான் ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகால மரணமடைந்தான் அப்படி இல்லாவிடால் என்றோ அணுகுண்டு செய்திருப்பான், காலம் அவனுக்குத்தான் முழு வாய்ப்பாக இருந்தது

    ஆனால் அவர் வீழ்த்தபட்ட பின்புதான் அணுகுண்டு தயாரிக்கபட்டது, அப்படி அதனை பயன்படுத்தாமலே விட்டிருக்கலாம்.

    ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி "இந்தியாவின் தேசிய தலைவர்" என அறிவிக்கபட இருந்த நிலை.

    அது நேதாஜி மூலமாக ஜப்பானிய ஆதிக்கத்தை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சி என்பதும் தியரி, சொல்லமுடியாது, நேதாஜியினை விரட்டிவிட்டு ஜப்பானிய அரசரை இந்திய அரசராக்க அதிக நேரம் ஆகியிருக்காது, ஆனானபட்ட அமெரிக்காவினையே அன்று நம்ப வைத்து பேர்ள் ஹார்பரில் தாக்கியவர்கள்

    எனினும் இந்தியா போன்ற நாட்டிற்கு நேதாஜி போன்ற இரும்பு தலைவன் அமரும் சாத்தியத்தை மறுக்க முடியாது

    ஐன்ஸ்டீன் & கோ ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது.

    அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, "ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்" என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்ததாக சொன்னார்.

    ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், ஆனால் தமிழன் படித்தால் வர்னாசிரம தர்மம் என்கின்றது ஒரு கூட்டம். உலகின் மகா முட்டாள்தனமான வாதங்களில் இதுவும் ஒன்று

    பின்னர் அந்த அணு நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது.

    நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே பல டன் எடஒ, கணக்கிட்டுகொள்ளுங்கள்.

    ஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், ஜெர்மனும் இத்தாலியும் அவர்கள் கைக்கு வந்திருந்தது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி.

    அன்று அமெரிக்காவிடம் வினோத திட்டம் இருந்தது உண்மையில் ஹிட்லரை அவர்கள் தொடக்கத்தில் விரோதமாக கருதவில்லை. ஹிட்லருக்கு அஞ்சி பிரிட்டனும் பிரான்சும் ஆயுதம் அமெரிக்காவிடம் வாங்கும் பொழுது அவர்கள் உற்சாகமாக ஆயுதம் செய்தார்கள்

    ஹிட்லரை விட அவர்களுக்கு பெரும் எதிரி சோவியத் யூனியன். அதை ஹிட்லர் நசுக்க செல்லும்பொழுது தங்கள் வேலையினை ஹிட்லர் செய்கின்றான் என மகிழ்ந்தே இருந்தார்கள்

    ஆனால் ஹிட்லரை ரஷ்யாவின் ஸ்டாலின் தூக்கி போட்டு மிதித்து மண்டையினை பிளந்ததும், இனி தாமதிப்பில்லை உலகின் பெரும் வல்லரசு தாங்கள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்

    காரணம் ஹிட்லரை போட்டு தள்ளியதில் ஸ்டாலின் உலக மக்களால் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார், அந்த புகழை மறைக்க அமெரிக்கா ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தது

    இது உலக அரசியல் அப்படித்தான்

    தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும்.

    செய்தார்கள்.

    பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945
    ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.

    10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில் என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல்.

    அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம்.

    ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது, ஜப்பானிய ஆதிக்கத்திலருந்த நாடுகள் விடுதலை ஆயின, இந்தியாவும் ஜப்பானிய மிரட்டலில் இருந்து தப்பியது, காரணம் சீனாவில் பிலிப்பைன்சில் ஜப்பானிய ராணுவம் ஆடிய ஆட்டம் அவ்வளவு கொடூரமானது.

    ஆனால் ஜப்பானில் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு, அமெரிக்கா ஜப்பானை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பது இதனாலே.

    நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது.

    பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார்

    பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட.

    உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள் என போதனையை தீவிரபடுத்தின

    அமெரிக்கா செய்தால் ரஷ்யா செய்யவேண்டுமல்லா, செய்ததுதொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா எல்லாம் செய்தன இன்றைய உலகில் சுமார் 12 நாடுகளிடம் அணுகுண்டு உண்டு

    ஆனால் எந்த நாடும் அவ்வளவு எளிதில் இன்னொரு நாடு மீது அதனை ஏவாது, காரணம் அது ஒரு பாதுகாப்பே தவிர பயன்படுத்தினால் சர்வ அழிவு

    இன்னும் அதற்கு மாற்று இல்லை, வீசிவிட்டால் அவ்வளவுதான்

    இந்த இடத்தில் விஞ்ஞானம் மகாபாரதத்திடம் சரணடைகின்றது, அணுசக்தியினை கட்டுபடுத்த ஒரு வழி உண்டு என அது ஆறுதல் தருகின்றது.

    அதாவது அஸ்வத்தாமனும் பிரம்மாஸ்திரம் வீசினான், அர்ஜூனனும் வீசினான், இரு பிரம்பாஸ்திரம் மோதினால் உலகழியும் என்பதால் அர்ஜுனன் அதன திரும்ப பெற்றான்

    ஆனால் அஸ்வத்தாமனின் கனையால் அழிந்த அழிவினையும் அதே தான் சொல்கிறது, அஸ்வத்தாமன் நினைத்திருந்தால் அர்ஜூனன் தன் கனையினை கட்டுபடுத்தியது போல் கட்டுபடுத்தியிருக்கலாம் என தெளிவாக சொல்கின்றது
    இன்னொரு காட்சியும் இந்து புராணம் சொன்னது அது ரத்தபீஜன் கதை, ஆச்சரியமாக அது அணுசக்தியுடன் அப்படியே பொருந்துகின்றது

    அதாவது ரத்தபீஜன் என்றொரு அரக்கன் இருந்தான் அவனை வெட்டினால் அவன் ரத்தம் மண்ணை தொடும்பொழுது ஏராளமான ரத்த பீஜன்கள் வருவார்கள், அவர்களை வெட்டினால் இன்னும் வருவார்கள்

    அணுசக்தி இதுதான் ஒரு அணுவை பிளக்க இன்னொரு அணு உருவாகும் அதை பிளக்க இன்னொன்று உருவாகும் அந்த சங்கிலி தொடர் வெடிப்புத்தான் பேரழிவினை கொடுக்கும்

    அந்த ரத்தபீஜனை அன்னை காளி கொன்றாள், எப்படி கொன்றாள் என்றால் அவனின் ரத்தம் ஒன்று கூட சிந்தா வண்ணம் அதனை அப்படியே குடித்து அவனை மேலும் பெருகாமல் கொன்றாள்

    இங்குதான் விஞ்ஞான உலகம் புன்னகைகின்றது, அணுவெடிப்பை கட்டுபடுத்தும் ஒரு நுட்பம் உண்டு ஒரு சக்தி அதை மொத்தமாக நிறுத்த வழி உண்டு என புன்னகைகின்றது

    அதாவது அந்த பெரும் சக்தியினை கட்டுபடுத்தும் சக்தி ஒன்று உள்ளது, பிரம்மாஸ்திரம் போல , ரத்தபீஜன் போன அணுகுண்டையும் கட்டுபடுத்தலாம் என பாரதம் சொல்கிறது,

    அந்த கண்டுபிடிப்பு வரும் வரை நாகசாகியே அணுகுண்டு வெடித்த கடைசி இடமாக வரலாற்றில் இருக்கட்டும்.

    கவனியுங்கள் பிரமாஸ்திரம் என்பது அணுவெடிப்பு. இரு பிரமாஸ்திரம் வெடித்தால் உலகம் அழியும் என சொல்வது அணு இணைவு சக்தி.

    என்ன தான் சொல்லுங்கள், நவீன விஞ்ஞானத்திற்கு மகாபாரதம் ஒரு முன்னோடி. அவர்களின் யுத்த ஆயுதமும் முறையுமே வேறு. அக்கால மக்களுக்கு புரியும்படி வில் அம்பு கதை கனை என சொல்லிவைத்தார்களே தவிர மிகபெரிய தொழில்நுட்பம் அவர்களுக்கு இருந்திருக்கின்றது

    ஒப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானியே அணுகுண்டில் கிருஷ்ணனைத்தான் கண்டிருக்கின்றான், அவனே சொல்லியும் இருக்கின்றான்

    மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நவீன விஞ்ஞானமும் அதற்கான தீர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன, மகா ஆச்சர்யமான விஷயம் இது.

    பிரமாஸ்திரம் அணுகுண்டு என சொன்னால் பாரதம் இன்னொரு விஷயத்தையும் காட்டி பயமுறுத்துகின்றது

    பிரம்மாஸ்திரத்தை விட சக்தி மிக்கது பாசுபதகனை, அர்ஜூனன் அதை வாங்கி வந்தானே தவிர பயன்படுத்தவில்லை

    காரணம் பிரமாஸ்திரத்திலே உத்தரையின் கருவினை தவிர எல்லாம் அழிந்தது, யாரும் தப்பவில்லை
    இதில் பாசுபதகனையினை ஏவியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

    அணுகுண்டை விட சக்திமிக்க ஆயுதங்கள் வரலாம் என்பதே பாரதம் காட்டும் தத்துவம், அதன் அழிவின் சக்தியினை பாரதமே காட்டவில்லை

    இந்த உலகில் இன்று அணுயுத்தம் தொடங்குமானால் நிச்சயம் மனித குலம் பூண்டோடு அழியும் ஆபத்து உண்டு, அவ்வளவு சக்திவாய்ந்த அணுகுண்டுகள் உலகெல்லாம் குவிந்திருகின்றன‌

    ஹிரோஷிமாவில் வீசபட்டது உலகின் மிகசிறிய அணுகுண்டு என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

    இன்றைய தேதியில் அணுகுண்டுக்கு மாற்று ஒன்று உண்டு என்றால் அது சமாதனமும், அன்பும், மன்னிக்கும் குணமும் மானிட நேயமுமே

    ஹிரோஷிமாவில் இன்று மனித குலம் எடுக்க வேண்டிய சபதமும் அதுதான்

    ஐன்ஸ்டீன் சொன்னது போல அணுகுண்டுக்கு இனி மாற்று அன்பும் சமாதானமுமே.

    அந்த அன்பே சிவம் என என்றோ சொன்னது இந்துமதம்.

    ஆம் விஞ்ஞானம், அணுசக்தி, பிரபஞ்சவியல், அதை எல்லாம் மானுடத்துடன் இணைக்கும் அன்பு என ஒவ்வொரு புள்ளியாக கலந்த மிக பெரும் தத்துவே இந்துமதம்.

    பிரம்மாஸ்திரம் என்பது மிகபெரும் தவம் செய்தோருக்கும் கட்டுபாடு கொண்டவனுக்கும் இறை அச்சம் உள்ளவனுக்கும் மட்டும் வழங்கபட வேண்டும் என இந்துமதம் சொன்னது ஏன்? இந்துமத காட்சிகள் இருந்தது ஏன்?

    அகங்காரமும், பேராசையும் மமதையும் கொண்டவன் கையில் பேரழிவு ஆயுதம் சிக்கினால் உலகை அழிப்பான், கடவுளிடம் ஒடுங்கிய யோக மனம் கொண்டவன் கையில் அது கிடைத்தால் தர்மம் காப்பான் என்பதே

    எவ்வளவு உயர்ந்த தத்துவம்? இதனாலே தவம் செய்தவனுக்கு மட்டும் அது கிடைத்தது. கர்ணனின் நோக்கம் அறிந்து கிடைக்காமல் போனது

    எனினும் கிடைக்க கூடாதவன் கையில் பெரும் ஆயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதற்கு சான்றாக‌ அஸ்வத்தாமனை அது விட்டுவைத்தது.

    சிந்திக்க சிந்திக்க சிலிப்பூர்ட்டும் விஷயம் இவை , இந்துக்கள் பெருமையாக கொண்டாட வேண்டிய சித்தாந்தம் இவை

    இந்து என்பதில் பெருமை கொள்ள வேண்டும், மாபெரும் அறிவியலும் மானுடவில் சிந்தனையும் மனிதனுக்கு எது வேண்டும் அல்லது வேண்டாம் எனும் தத்துவமும் அதில் ஏகபட்டது குவிந்திருக்கின்றது

    படித்ததில் பிடித்தது.
     
    Loading...

Share This Page