1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்திரனின் தெளிவு

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 5, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    புதிதாகப் பதவி ஏற்ற இந்திரன் ஒருவன்,
    இருக்கின்ற மாளிகையை விரும்பவில்லை.
    புதிதான ஒன்று உடன் வேண்டுமென்றவன்,
    மிகப்பெரிதாய் திட்டம் தீட்டத் தயங்கவில்லை.

    வெகுநாட்கள் தான் வசிக்கப் போகும் இடத்தையே,
    வெகு அழகாய் எழுப்பி விட வேண்டும் என்றவன்,
    வெகுவான புகழ் அடைந்த தச்சன் மயனையே,
    வெகு சீக்கிரம் அழைத்து வர ஆளை அனுப்பினான்.

    வந்தவனிடம், தன் கனவினை அவனும் சொன்னான்.
    மாளிகையின் சுவர்களெல்லாம் தங்கத்தில் என்றான்.
    வாயிற்படிகளின் நடுவில் வைரம் போதும் என்றான்.
    மேலும் பலவாறு சொல்ல, மயன் வாயைப் பிளந்தான்.

    அப்பொழுது அங்கு வந்த நாரத முனியும், அவனை
    லோமசர் எனும் முனியைப் பார்த்திடச் சொன்னார்.
    எதற்காக? எனும் கேள்வியை உடன் கேட்டவனை,
    அவர் பார்த்து, ஒரு அர்த்தமுள்ள புன்னகை செய்தார்.

    அப்படியே லோமசரைத் தேடி அடைந்தவன்,
    பார்த்தவுடன், தனக்குள் ஓர் ஐயம் கொண்டான்.
    ஒரு நொடிக்கும் முன்பாக அதனை உணர்ந்தவர்,
    அதைக் கூற வைத்து, அவனுக்கு தெளிவும் தந்தார்.

    ஏன் உங்களுக்கு இத்தகைய எளிமையான தோற்றம்?
    கிழிந்த பாய் ஒன்று உடனிருக்கக் காரணமும் யாது?
    என்று அவன் வினவ, அவர் விடையினில் மாற்றம்,
    பெரிதும் கொண்டு திரும்பினான் தலை குனிந்தவாறு.

    அவர் சொன்ன விடை மிகவும் எளிமையான ஒன்று.
    "கேள் இந்திரா, என் வாழ்நாள் மிகவும் குறைவே!
    அதிலேயும் ஒப்பனைகள், பொன், பகட்டென்று,
    செலவிட்டால் எவ்வாறு அடைவேன் நிறைவே?

    நிலையில்லா இவ்வுடல் வசிக்கத் தக்க இடம் ஒன்று,
    வேண்டுமெனக் கருதி, நானும் சிறிது காலம் ஒதுக்கி,
    இறை நினைவை ஒதுக்கி விட்டு, சிறு வீடு ஒன்றை,
    அமைத்திட முயன்றால், என் வழியினின்று விலகி,

    இருக்க வேண்டும் என்பதனால் அந்நினைவை நீக்கி,
    இவ்வுலகில் படுக்க மட்டும் கொஞ்சம் இடம் போதும்,
    என்ற காரணத்தால் ஒரு பாயை எடுத்துக் கொண்டு,
    எல்லா இடங்களுக்கும் நான் சென்று வருவதுண்டு

    எனக் கூறி முடிக்க, நெகிழ்ந்த இந்திரனும் அவரை,
    உங்கள் ஆயுள் எவ்வளவு என்று சொல்லும் முனியே!
    என்று கேட்க, அவர் கனிந்து உரைத்த அந்த பதிலை,
    கேட்டவனும் அடைந்தான் பெரியதொரு திகைப்பை!

    உடல் முழுதும் உரோமத்தால் நிறைந்திருக்கும் எனக்கு,
    அவை அத்தனையும் உதிர்ந்தால் முடிவு எனக் கணக்கு.
    ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிய ஒரு முடியும் உதிரும்
    ஏற்கனவே இம்மார்பில் ஒரு காசளவு குறையும்,

    நிலையடைந்து விட்டேன்! இனி மேலும் என்ன?
    என் நாட்கள் மிகவும் வேகமாகக் குறைகிறது என்ன,
    ஒரு பிரம்மாவின் ஆயுளிலே, நூற்றில் ஒரு பங்கே,
    கொண்டவனும் ஓய்ந்தானே முழுவதுமாய் அங்கே!

    குறிப்பு: வெகு நாட்களுக்கு முன் இராமக்ருஷ்ண விஜயத்தில் படித்த கதை இது. இவரை ரோமசர் என்றும் குறிப்பது உண்டு. -ஸ்ரீ
     
    Last edited: Feb 5, 2011
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nalla karuththu Rgs..

    Kaalathai yeppadi yellam naam veenadikkirom enbadhai :bonk adithu koori irukkiraar..Romasar.
    Manadhai sidharadikkum vishayangalil manadhai seluthi...unmaiyana vishayathai kottai vidugirom..:-(

    sriniketan
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    ஆடம்பரம், பகட்டு போன்று வீணடிப்போருக்கு நல்ல சவுக்கடி....
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்து சரியே ஸ்ரீநிகேதன். பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஆம் லதா. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     

Share This Page