1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்திரனின் கோரத் தாண்டவம்…..

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 13, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    இந்திரனின் கோரத் தாண்டவம்…..

    மாதம் மும்மாரி பொழிந்து செழிக்க,
    மாதம் பன்னிரெண்டும் வேண்டுதல்கள்!

    அருமையான அமிர்தவர்ஷிணி ஆலாபனைகள்;
    வருண பகவானுக்குப் பல வித பூஜைகள்!

    இந்திரனே மழைத் தேவன் – இது பாகவதம் கூறுவது.
    இந்திரனை மறந்து நின்றால், பலன்கள் இனியேது?

    தப்பாகப் பூஜித்தது, தப்பாகப் போனதோ?
    அப்பாவி மக்களைச் 'சுனாமி' கொண்டு போனதோ?

    நிலை குலைய உலகை உலுக்கிய பயங்கரம் – நீர்
    நிலைகளின் தேவனாம் வருணனின் சாகஸமோ?

    'எத்தைத் தின்னால் பித்தம் தீரும்?' – என அலைவதுபோல்
    கத்தையாய்ப் பணம் செலவழித்துக் கழுதைத் திருமணங்கள்!

    'சென்னை பத்து ஆண்டுகளில் பாலைவனமாகும்!'
    இன்ன பிற ஆரூடங்கள், தந்துவிடும் சோகம்.

    'லாரி' வரவை எதிர்பார்த்து, வண்ண வண்ணக் குடங்கள்;
    சேரி முதல் பங்களா வரை, பரிதவிக்கும் முகங்கள்!

    மழை நீர் சேகரிக்க வேண்டிப் பல திட்டங்கள்;
    ஏழைக் குடிசையும் கட்டாயம் செய்யக் கோரும் சட்டங்கள்!

    சாலைகளில் கிணற்று உறை ஏற்றிச் செல்லும் வண்டிகள் – ஒரு
    வேளை கூட ஓய்வில்லாமல் கிணறு தோண்டும் மனிதர்கள்!

    நீர்மட்டம் கீழே சென்று 'ஜெட் பம்பு' மாற்றங்கள்;
    நீரின்றி வாழ்வில்லை – எனவே எங்கும் குழாய்க் கிணறுகள்!

    அலுக்காமல் போட்ட பல ஆழ்குழாய்க் கிணறுகளில்,
    அலுங்காமல் வந்து கலந்தது, கரிக்கும் கடல் நீர்!

    பிடிவாதமாய் வந்த நீரில், சமைக்கத் தோது இல்லை – எனவே
    'அபிவாதயே' போஸில் நீர்க்குடுவை நிற்காத வீடு இல்லை!

    பூமித்தாயைத் துளைத்துத் துளைத்து மனிதன் செய்த மாற்றங்கள்;
    பூமித்தாய் அதிர்ந்து அதிர்ந்து பூகம்பச் சீற்றங்கள்!

    'மனித குலமே! இது மட்டும் போதாது உனக்கு!
    உனது வளமே போகப் போடுகிறேன், இந்திரனிடம் வழக்கு!'

    பொறுமைக்கு உவமையாம் பூமித் தாயின் வழக்கு;
    உரிமையுடன் போட்டான், இந்திரன் புதுக் கணக்கு!!

    வருணனை வணங்கித் தன்னை மறந்தது ஜனம்;
    தருணம் பார்த்தது தண்டிக்க, இந்திரனின் மனம்!

    இந்திரனின் கோரத் தாண்டவம் தொடங்குகிறது – முதலில்
    இந்தியாவின் பெருமை மிக்க மும்பை நகரம் மிதக்கிறது!

    அன்றாடம் செழிப்பில் திளைப்பவர் முதலாக,
    ‘அன்றாடம் காய்ச்சி’ வரை எல்லோருக்கும் சிரமங்கள்!

    அடுத்துத் தாக்கப்படுகிறது பெங்களூர் நகரம்;
    அடுக்கு மாடிக் குடியிருப்பும், நீர் சூழ்ந்த துயரம்!

    பெரு மழையின் பேயாட்டம், அங்கு யாம் பார்க்கவில்லை;
    பெரு நகராம் சென்னையும் தப்பிக்க மார்க்கமில்லை!

    'மழையா வேண்டுகிறாய்? கன மழையாய்ப் பொழிகின்றேன்;
    ‘மழை’ என்ற சொல்லே வெறுப்பேற்ற வைக்கின்றேன்!'

    கங்கணம் கட்டியதுபோல் இந்திரனின் புறப்பாடு;
    எங்ஙனம் கூறுவது? சொற்களில் அடங்காது!

    கிணற்று நீர் உயர்ந்து வந்து தரை தொட்டுவிட்டது;
    அடுத்து வரும் நீர் ஊறத் தடை போட்டது!

    சாலைகளில் நிற்காமல் ஓடும்' புது ஆறுகள்;
    ஏரிகளில் வழிந்து வரும் நீரும் தரும் ஊறுகள்!

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்;
    அளவுக்கு மிஞ்சிய திட்டங்களும் பாழாகும்!

    அழையா விருந்தாளிபோல், வீட்டில் நுழையும் பிரவாகம்;
    மழை நீர் சேகரிப்பால், வந்தது பெரும் சோகம்!

    அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஏரி மீது கட்டினால்,
    தடுக்க இயலுமா துயரம், நீர் வீட்டை எட்டினால்!

    ஏரிகளும் ஆறுகளும் சரியாக அமைத்திருந்தால்,
    நீரினால் நன்மையே பெற்றிடுவோம், என்றென்றும்!

    தூர் வாரா ஏரிகளில், சரணடைய இடமில்லை;
    நீர் மீது பழி போட, எவ்வித ஞாயமுமில்லை!

    சிங்காரச் சென்னை சீரழிந்து கிடக்கிறது;
    பொங்கிவரும் வெள்ளத்தால் நிலை குலைந்து நிற்கிறது!

    தென் மாவட்டங்களிலும் மித மிஞ்சிய மழைதான்;
    சொல்லொணாத் துயரங்கள் வந்தது நிஜம்தான்!

    பயிர்கள் அடித்துச் சென்று பாழாகிப் போனது – மக்கள்
    உயிர்கள் காக்க வேண்டி ஓடும்படியானது!

    வீடுகளும் பொருட்களும் அடித்துச் சென்ற வேதனை;
    பாடுபடும் ஏழைகளுக்கு, மேலும் மேலும் சோதனை!

    அடுத்த வேளை உணவு கிடைக்குமா என மயக்கம்;
    உடுத்த மாற்றுத் துணியில்லாது, வந்துவிடும் கலக்கம்!

    பயணம் செய்த சில ரயில்களும், பேருந்துகளும் – கடைசிப்
    பயணம் கூட்டிச் செல்லும் எமனான துயரம்!

    மின்சாரக் கம்பத்திலிருந்து, அறுபட்டன 'வயர்கள்' – அதுபட்டு
    சம்சாரக் கடலிலிருந்து, விடுபட்டன உயிர்கள்!!

    கருணையுள்ளம் கொஞ்சமேனும் இந்திரனே நீ பெற்றிடு!
    தருணமிது மழை நிறுத்த, இப்போதே கற்றிடு!!

    :bowdown

    —– ராஜி ராம் —– 12 – 12 – 2005

    (குறிப்பு 13 – 12 – 2005 முதல் மழை குறைந்தது!) :thumbsup
     
    Loading...

  2. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hi raji,

    Romba sariyaga sonnirgal..
    'மனித குலமே! இது மட்டும் போதாது உனக்கு!
    உனது வளமே போகப் போடுகிறேன், இந்திரனிடம் வழக்கு!'
    பொறுமைக்கு உவமையாம் பூமித் தாயின் வழக்கு;'


    A very needed piece of verse at this time!:bowdown

    SARAS
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Saras for your quick feed back!

    All these happened in 2005! I always wonder whether Booma Devi's rage is because of the disturbances given to Her, by the human race!

    Raji Ram :spin
     
  4. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Hi Raji, nice Kavithai as usual. What happened in Japan recently is also only because of the disturbances given to Mother Earth. Global warming is nothing but the selfishness of man
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    You are right dear Maalti.

    Air conditioner affects the ozone layer but can we find any office or the residence of an upper middle class family without A/C?

    Life is like that!! :spin
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    All the lines speaks nothing except the truth!!! Great work!!
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Malar,

    I always like to write my own experiences because, no one else will write the same!!

    Raji Ram :biglaugh
     

Share This Page