1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழுக்கு பெருமை

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Aug 15, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    10,115
    Likes Received:
    10,934
    Trophy Points:
    590
    Gender:
    Male
    :hello: இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழுக்கு பெருமை
    :hello:
    "தேவாரப்பதிகம் பாடி... பெற்ற சுதந்திரம்..."
    இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழுக்கு பெருமை
    சேர்த்த அற்புத நிகழ்வு ஒன்று....
    15.8.1947...
    இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கும் அனைத்து சாசனங்களும் தயார் செய்யப்பட்டு ... மௌண்ட்பேட்டன் பிரபுவால் நேருவுக்கு அளிக்கப்பட்டது...
    சுதந்திரதின சம்பிரதாயங்கள் என்ன..? பதவியேற்பு எவ்வாறு நடத்துவது என நேரு அவர்கள் இராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார்...
    இராஜாஜி அவர்கள் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆலோசனை கேட்டார்..
    ஆதினமும், நமது மரபு படி செங்கோல் ஒன்றை நேருவிடம் வழங்கும் நிகழ்வை பரிந்துறை செய்தார்..
    செங்கோல் தயாரிக்கும் வேலையையும் ஆதினமே மேற்கொண்டார்.. தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோல் ஒன்றை தயார் செய்து ஆதினம் டெல்லி சென்றார்..
    15.8.1947..
    அதிகார சாசனத்தில் நேரு கையொப்பம் இடும் சற்று நேரத்திற்கு முன்பாக....
    திருவாடுதுறை ஆதினத்தின் ஓதுவார்கள், சம்பந்தரின் தேவாரப்பதிகமான வேயுறு தோளி பங்கன் என்னும் பாடலைப்பாட..
    சரியாக...
    "அடியார்கள் வானில் அரசாள்வார்
    ஆணை நமதே .."
    என்ற வரிகள் வரும்போது ... திருவாடுதுறை ஆதினத்திடமிருந்து செங்கோலை ஜவகர்லால் நேரு அவர்கள் பெற்றுக்கொண்டார்...
    பிறகு பிரதமராக பொறுப்பேற்றார்...
    செப்புமொழி பதினெட்டுடையாள் என்றார் பாரதி...
    அந்த 18 மொழிகளுள்..
    செந்தமிழால் பாடப்பட்ட பாடல் ஒன்றை சாட்சியாகக் கொண்டு பாரதத்தின் சுதந்திரம் சாசனமானது...
    ஆதினத்திடமிருந்து ..
    செங்கோலை நேரு பெறும் புகைப்படம் இறும் திருவாடுதுறை ஆதின மடத்தில் உள்ளது....
    தமிழுக்குக் கிடைத்த மேலும் ஒரு பெருமையான நிகழ்வு இது....
    அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
     
    Loading...

Share This Page