1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்தியாவுக்கு இழுக்கு!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jul 31, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    எத்தனையோ பதக்கங்கள் ஒலிம்பிக்கில் இருந்தும்,
    எத்தனை இந்தியாவுக்கு வருமென ஏக்கம் கொண்டு,

    கிடைக்கும் சிலவற்றை எண்ணி நாமும் காத்திருக்க,
    உடைத்தாள் ஒரு பெண், பாதுகாப்பு வளையங்களை!

    நடனம் ஆடத் தேர்வாகி, கூட்டத்துடன் சென்ற அவள்,
    உடன் நடக்க விழைந்தாள் நம் விளையாட்டு வீரரோடு!

    எளிமையான மஞ்சள் வண்ண உடைகளுக்கு முன்னே,
    துளியும் சலனமில்லாது, சிவப்பு நீல வண்ணங்களில்

    கண்களைப் பறிக்கும் வண்ணம் நடந்துவிட்டாள், தன்
    கண்ணான நாட்டைப் பற்றிக் கவலையே இல்லாமல்!

    வீரர்களுக்கு மைதானம் வரை வழி காட்ட அழைத்திட,
    வீரர்களுடன் சிறந்த வீராங்கனை போலச் சென்றாள்!

    விளையாடிப் பதக்கம் வென்றால், நமக்குப் பெருமை;
    விளையாட்டான இச் செயல் நமக்கெல்லாம் சிறுமை!

    இந்தியாவுக்கு இழுக்கையே தேடித் தந்தாலும், அவள்
    விந்தையான மனித வெடிகுண்டாக இல்லாதது நலம்!

    :hide:
     
    Loading...

  2. honeybee

    honeybee Gold IL'ite

    Messages:
    583
    Likes Received:
    187
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Very true ma'am.
    eppozhudhum pola arumaiyana karathu,ezhuthu nadai!
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you very much! :cheers
     

Share This Page