1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 14

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 14, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 14


    ஷாப்பிங் மாலினுள் நுழைந்ததும் சந்தோஷ் முன்னே செல்ல பெண்கள் இருவரும் பேசிக் கொண்டே பின்னே நடந்தனர்.

    " ஏய் நிம்மி !! அங்கே நிற்கிறது நிகிலன் போல இருக்கு " என்றான் சந்தோஷ் .

    " நீ இப்படி சொன்னா நான் ஏமாந்து போய்டுவேன்னு நினைச்சியா ? அதெல்லாம் நாங்க அசர மாட்டோம்மாக்கும் " என்றாள் அவன் காட்டிய திசையை பாராமலே .

    " ஏய் லூசு , நான் நிஜமாத்தான் சொல்லுறேன் " என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்களை கண்டு கொண்ட நிகிலன் அவர்கள் அருகே வந்தான் .

    " ஹாய் சந்தோஷ் " என்றவன் சந்தோஷிடம் பேச தொடங்கினான் . சந்தோஷிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அடிக்கடி நிமிஷாவிடம் சென்று மீண்டது . இதனை கண்டு கொண்ட சந்தோஷ் நிமிஷாவை திரும்பி பார்த்தான் . வெட்கத்தோடு தலைகுனிந்து நின்றவளை பார்த்து அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது .

    சற்று நேரம் நிகிலனிடம் பேசிக் கொண்டிருந்தவன் , பிறகு மதுராவிடம் திரும்பி ,

    " வாணி வா நாம போய் உனக்கு தேவையான புத்தகங்களை வாங்கி விட்டு வருவோம் . நிம்மி நீ நிகில் கூட போய் உனக்கு தேவையான c.dஐ வாங்கிட்டு காருக்கு வந்துடு " என்றவன் கையசைத்துவிட்டு நடக்க தொடங்கினான் .

    முதலில் சற்று விழித்தாலும் அவனுடைய இரண்டாம் வாக்கியம் புரிந்து விட அவனுடன் இணைந்து நடந்தாள் . மனம் எகிறி குதித்தாலும் வேறு வழியின்றி அவனுடன் செல்ல துவங்கினாள் .

    மனதில் ஏதோ எண்ணம் தோன்ற அவளை புத்தகக்கடையில் விட்டு விட்டு ,

    " நான் இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துறேன் . நீ அதுக்குள்ளே புக்ஸ் பார்த்துட்டு இரு " என்றவன் அவளுடைய பதிலை எதிர்பாராமல் கடையை விட்டு வெளியேறினான் .

    " இவரு என்ன நினைச்சிட்டு இருக்காரு ? என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டாரு . புக்ஸ் வாங்கவாம் . எங்க இருந்து வாங்குறது ? கைல பைசா கிடையாது . பர்ஸ் எடுத்துட்டு வரேன்னதுக்கு அண்ணணும் தங்கையும் சேர்ந்து அதையும் எடுக்க விடவில்லை . இப்போ நான் என்ன செய்யுறதாம் " என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள் .



    சில நொடிகள் அவன் சென்ற திசையை வெறித்தவள் அங்கிருப்பவர்கள் தன்னை கவனிப்பார்களே என்று பயந்து புத்தகங்களை பார்வையிட தொடங்கினாள் .

    ' நல்ல வேளை இந்த மாலுக்கு வந்தோம் ' என்று மனதிற்குள் நினைத்தவன் போட்டோ கடைக்குள் நுழைந்தான் . இரண்டு நாட்களுக்கு பிறகு வாங்கி கொள்வதாக கூறியிருந்த ஆல்பத்தை இன்றே பிரிண்ட் போட்டு தருமாறு தெரிவித்து விட்டு பத்து நிமிடங்களின் திரும்பி வருவதாக கூறிவிட்டு மதுரா இருந்த கடையை நோக்கி சென்றான் .

    புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தவள் ,

    " என்ன புத்தகம் பார்த்தாச்சா ? " என்று தன் அருகே கேட்ட குரலில் தூக்கிவாரி போட்டு துள்ளி நகர்ந்தாள் .

    " ஷ்... ஏன் இப்படி பயப்படுறே ? " என்றான் சந்தோஷ் . ( இப்படி திடீர்ன்னு பக்கத்துல வந்து பேசினா அவ பயப்படாம வேற என்ன செய்வா ? )

    " இல்ல...அது.. நீங்க வந்தத கவனிக்கல . திடீருன்னு குரல் கேட்டது " என்று மென்று முழுங்கினாள் . ( திடீருனு பேசினா திடீருன்னுதான் வாணி கேட்கும் )

    " சரி சரி விடு . வா புக்ஸ் பார்க்கலாம் " என்றவன் அவளுடன் இணைந்து புத்தகங்களை பார்வையிட துவங்கினான் .

    இருவருக்கும் புத்தகங்களில் ஈடுபாடு அதிகம் என்பதால் புத்தகங்களை பற்றிய பேச்சு சுவாரஸ்யாமாய் நடந்த்து . கதை புத்தகங்களில் தொடங்கி அறிவியல் , தொழில்நுட்பம் என தொடர்ந்து வரலாறில் வந்து நின்றது .

    தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது இருவருக்குமிடையே இதமான நட்பு வேரோடியிருந்தது .

    காரை நோக்கி செல்ல எத்தனித்தவளிடம் , " ஒரு முக்கியமான வேலை இருக்கு வா அதையும் முடிச்சிட்டு போய்டலாம் " என அவளையும் அழைத்துக் கொண்டு போட்டோ கடைக்குள் நுழைந்தான் .

    " என்ன சார் நான் கேட்டது ரெடி ஆகிடுச்சா ? " என்றான் அந்த கடையில் இருந்தவரிடம் .

    " இன்னும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் ப்ளிஸ் " என்றார் அவர் .

    " ஓகே " என்றவன் அங்கிருந்த இருக்கையை காட்டி அவளை அமரச் சொன்னவன் தானும் அமர்ந்த்துக் கொண்டு அவளிடம் பேச தொடங்கினான் .

    அவன் கேள்விகள் அனைத்திற்க்கும் பதிலளித்துக் கொண்டிருந்தாள் . நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க கடை ஊழியன் வந்து ஒரு கவரை நிட்டினான் .

    " தேங்க்ஸ் " என்று பெற்றுக் கொண்டவன் அதை மதுராவின் கையில் கொடுத்து விட்டு தன் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து பணம் கட்டி விட்டு வெளியே வந்தான் .

    இருவரும் காரை நோக்கி சென்றனர் . காரின் அருகில் நிமிஷா இல்லாத்தால் அவள் வரும்வரை காரில் காத்திருக்கலாம் என்று காரில் அமர்ந்துக் கொண்டனர் .

    மதுரா பின் இருக்கையிலும் சந்தோஷ் முன் இருக்கையிலும் அமர்ந்துக் கொண்டனர் . திரும்பி மதுராவையும் அவள் கையில் இருந்த கவரையும் நோக்கியவன் ,

    " இன்னும் பிரிச்சு பார்க்கலையா ? " என்று வினவ அவள் திரு திருவென விழித்தாள் . ( நீ கவரை சும்மா பிடிக்க சொல்லி கொடுத்த அவ எப்படி பிரிச்சு பார்ப்பா ? கவர் உனக்குத்தான்னு சொன்னாதான அவ பிரிச்சு பார்க்க முடியும் சந்தோஷ் ?? )

    " கையில் இருக்கும் கவரை பிரிச்சு பாரு " என்றான் .

    அவள் பிரிக்காது தயங்கவும் , " உனக்கு சொந்தமானதுதான் அது . பிரிச்சு பாரு . உனக்கு பிடிக்கும் " என்று புன்னகைத்தான் .

    " எனக்கு சொந்தமானதா ? " என்று குழப்பத்தோடு அதை பிரித்தாள் . உள்ளே இருந்த பொருளை கண்களின் கண்ணீரும் முகத்தில் புன்னகையும் ஒரு சேர தோன்றியது . கண்களில் நீர் தளும்ப கண்ணீரோடு அவனை பார்த்து புன்னகைத்தாள் .

    புன்னகையோடு " பிடிச்சிருக்கா ? " என்றான் .



    " ம் " என்று தலையசத்தவள் கையிலிருந்த தன் பெற்றோர்களின் புகைப்படங்களை பார்க்க தொடங்கினாள் .

    அவள் புகைப்படங்களில் முழ்கி இருக்க சந்தோஷ் கார் ஸ்டிரிங்கில் தாளம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் .

    சிறிது நேரம் கழித்து முகத்தில் புன்னகையோடு நிகிலனுடன் பேசிக் கொண்டே வந்தாள் நிமிஷா .

    நிமிஷாவை விட்டு விட்டு அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் நிகிலன் .

    வீட்டிற்கு செல்லும் வழியில் , " ஏய் நிம்மி அது எப்படி கரெக்டா நிகிலன் வர நேரத்தில அதே மாலுக்கு வந்தே ? முன்னாடியே பேசி வச்சிட்டு தான் என்னை அழைச்சிட்டு வந்தியா ? " என்றான் .

    " ஏய் இது எல்லாம் அநியாமான குற்றச்சாட்டு "

    " நீ ஒரு வக்கிலை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும் . அதை நீ இப்படி எல்லாம் பேசி புரூவ் பண்ண வேண்டிய அவசியமில்லை " என்று கிண்டல் செய்தான்.

    " வெவ்வவெவ்வே " என்று அவனுக்கு பழிப்புக் காட்டினாள் .

    " மழுப்பாம எனக்கு முதல்ல பதிலை சொல்லு " என்று தன் கேள்வியிலேயே குறியாக இருந்தான் .

    " நான் இப்போ கடைக்கு போகணும்னு மட்டும் தான் சொன்னேனே தவிர இந்த மாலுக்குத்தான் போகணும்னு சொல்லலை . நீயா தான் அழைச்சிட்டு வந்தே . அதுவும் நீ நிகிலன்னு சொன்னப்போ நான் நம்பலை . நான் ப்ளான் பண்ணி இருந்தா நான் பார்த்திருக்க மாட்டேனா ? " என்று எடுத்துரைத்தாள் .

    " ஆமா அதுவும் சரித்தான் . நான் தானே அழைச்சிட்டு வந்தேன் . சரி சரி நம்புறேன் " என்றவன் அதன் பின் அதை பற்றி பேசாமல் பொது விசயங்களை பேச தொடங்கினான் .

    அன்றிலிருந்து சந்தோஷ் மதுராவிடம் அடிக்கடி வலிய வந்து பேச தொடங்கினான் . அவளை போலவே ஒத்த எண்ணம் உடையவனிடம் பேசுவது அவளுக்கும் சுவாரஸ்யமாக இருக்கவே இருவருக்கும் பொழுது நன்றாகவே கழிந்தது .

    சந்தோஷ் மதுராவிடம் நெருங்கி பழகுவது , சிரிப்பது என எதுவுமே நேகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை . நிமிஷாவின் நிச்சயத்திற்கு என தங்கி இருந்த ஒரு வாரமும் சந்தோஷ் மதுராவின் நெருக்கத்தையும் நட்பையும் பார்த்து கோபம் கொண்டாள் . ( ரெண்டு பேரும் இப்பவாது பேச ஆரம்பிச்சிருக்காங்களேன்னு நாங்க சந்தோஷப் பட்டுக்கிட்டு இருக்கோம் . உனக்கு கோவம் வருதா ?? )

    தானும் அவனிடம் பேசலாம் என்று அவனை நெருங்க அவனோ தனக்கு வேலை இருப்பதாக அவளை புறம் தள்ளிவிட்டு சென்றான் . இதனாலேயே மதுராவின் மேல் நேகாவிற்கு வன்மம் துவங்கியது .

    நேகாவின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத மதுரா சந்தோஷிடம் சகஜமாக பழகினாள் .

    அதிலும் அவள் தாய் தந்தையரின் போட்டோ ஆல்பத்தை கொண்டு வந்து கொடுத்தவனிடம் அவளால் எப்படி பாராமுகமாக நடக்க முடியும் ??

    ஆனால் அந்த சுழ்நிலையும் நெருங்கியது . சந்தோஷினாலேயே தன் ஒரு நாள் இந்த வீட்டை விட்டு கிளம்பி செல்ல முடிவேடுப்போம் என்பதை அவள் இன்று உணரவில்லை .


    --உணர்வுகள் விளையாடும்....​



    - நூருல் & நிலா.
     
    2 people like this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    vow santhosh photo album ready panni kuduthuttan ...
    neha eppo than ava veetukku pova??????
    very interesting....
     
  3. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Ennapa eppavum Nehava vacchi than suspense kodupeenga, innaikku santhoshah vachi..........en ippadi......
     
  4. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    great going..very interesting story
     
  5. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweetsaghi,

    Adhaane paarthaen.......idhu varaikkum mudikkum podhu peria question mark illama pogudhe nu........ Oodalil koodal....start panni aachcha.... seri santhosh ah madhu va kashtapadu thu vaanaa...illa neha velayaa.... therijukka aarvama kaaththu kittu irukkom.....seekaram next post podunga ma......

    Vasupradha.S
     
  6. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    very nice story
    next update sikkiram kodungappa pl
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    you have ended with suspense. eager to read the next.
     
  8. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    photo album pottu kuduthathu super:):)
    anna thangachi rendu perum pesurathu romba nalla narate pani irukinga:)
     

Share This Page