1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 13

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 12, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 13

    மதுராவின் அருகே அமர்ந்த சந்தோஷ் முதலில் பேச்சை தொடங்கினான் .
    " காலையில கிளம்பிடதா நிம்மி சொன்னா ? " என்றான் கேள்வியாக .
    " ஆமாம் , என்னோட பொருட்களை எடுக்க போனேன் "
    " பொருட்களையா ?? " என்றான் புரியாமல் .

    " ம் " என்று தலையசைத்தாள் .

    இப்பொழுதும் ஒன்றும் புரியாமல் " ஏன் ? " என்றான் . (உங்களுக்கு மனசுல என்ன மணிரத்னம் பட ஹிரோ , ஹிரோயின்னு நினைப்பா ? ஒவ்வொரு வார்த்தையாதான் பேசுவிங்களோ ?? )

    " அப்பா என்னை இங்கயே தங்கிக்க சொல்லி என்னோட பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வர சொல்லிட்டாங்க . அதான் போனேன் " என்றாள் .

    " ஓ ! நீ இனி இங்கத்தான் தங்க போறியா ? " என்றவன் குரலில் இருந்த உணர்ச்சியை புரிந்துக் கொள்ளாமல் ,

    ' இவனுக்கு நாம இங்க தங்குவது பிடிக்கவில்லையோ ' என்று குழம்பிக் கொண்டிருந்தாள் .


    " எனக்கு உன் மேல சரியான கோவம் " என்று அவன் கூறியதும் அவனை நோக்கினாள்.

    " காலைல சொல்லிட்டு கூட போகலையே ன் னு கோவம் . அதான் இப்போ வந்துட்டியே கோவம் போய்டுச்சு " என்று அவன் புன்னகைக்கவும் தான் அவளுக்கு ' அப்பாடி ' என்று இருந்தது .

    " சரி நான் போய் சாப்பிடுறேன் " என்று எழுந்தவன் ,

    " நீ சாப்பிட்டியா ?? " என்று வினவினான் .

    " ம். அப்பவே சாப்பிட்டேன் " என்றாள் .

    " இப்படி என்னை விட்டு தனியா சாப்பிடுறே . உனக்கு வயிறு வலிக்க போகுது " என்று கிண்டல் செய்து விட்டு வீட்டுக்குள் சென்றான் .

    சாப்பிட்டு விட்டு மீண்டும் தன் அலுவலகத்திற்கு செல்ல தன் கார் அருகே வந்தவன் அவளை பார்த்து கையசைத்துவிட்டு சென்றான் .

    புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தவள் எதர்த்தமாய் திரும்ப முன் வாசல் படிகட்டில் சந்தோஷ் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் . அவள் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரம் அவளை நோக்கி திரும்பியவன் புன்னகையுடன் கையசைத்தான் . எதிர்பாரத விடை பெறுதல் அவளிடம் படபடப்பை ஏற்படுத்தியது .

    ' நான் ஏன் தான் அவனை கண்டாலே இப்படி பயப்படுறேனோ . நீ சுத்த பயந்தாங்கோளி ஆகிட்ட மதுரா '



    ' ஆமா இதுக்கு முன்னாடி மட்டும் ரொம்ப தைரியசாலியாய் இருந்தியாக்கும் ' என்று தனக்குள்ளேயே வாதிட்டவள் புன்னகையோடு கையில் இருந்த புத்தகத்தை படிக்க துவங்கினாள் .

    இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நேகாவிற்கு எதுவும் பிடிக்கவில்லை . (எங்களுக்கு கூட தான் உன்னை பிடிக்கல . ஆமா நீ இன்னும் உங்க வீட்டுக்கு கிளம்பலையா ? )

    தான் பேரழகி என்ற கர்வம் கொண்ட நேகாவிற்கு கட்டழகனான சந்தோஷின் மீது எப்போதுமே ஒரு கண் . இது அவள் அக்கா கல்யாணத்திற்கு வந்த அவள் தோழிகளால் வந்த வினை .

    சபரிஷின் கல்யாணத்தில் துறு துறுவென புன்னகை முகத்தோட அலைந்த சந்தோஷை கண்ட பெண்களால் தங்கள் கண்ணை அவனிடமிருந்து எடுக்க முடியவில்லை .

    அவனையே தொடர்ந்து கொண்டிருந்த தன் தோழிகளை பிடித்தவள் ,

    " ஏய் என்னடி பண்ணுறிங்க ? " என்றாள் .

    " அதோ அங்கே போறது யாருடி ? " என்று தெரிந்துக் கொள்ளும் ஆவலுடன் கேட்டனர் .

    " அதுவா ? அது மாப்பிள்ளையோட தம்பி . ஏன் ? " என்றாள் .

    நேகாவிற்கு தன் அழகின் மீது கர்வமே தவிர எந்த ஆணின் மீதும் நாட்டம் கிடையாது .

    " ஆள் பார்க்க ஹேண்ட்சமா ஷாருக் மாதிரி இல்ல ?? " என்றாள் ஒருத்தி .

    " இல்லடி ஹிரித்திக் " என்றாள் மற்றொத்தி .

    " சரி சரி விடுங்க . யாரு மாதிரி இருந்தா என்ன ? அவரு எவ்வளவு ஹேண்ட்சமா இருக்காரு . அதை பாருங்கப்பா " என்று கண்கள் மின்ன கூறினாள் இன்னொருத்தி .

    அப்பொழுதுதான் நேகா சந்தோஷை கவனித்தாள் .

    அந்த திருமண மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்த சந்தோஷ் இப்பொழுது அவள் கண்களுக்கும் அழகாய் தோன்றினான் .

    " இவ்வளவு அழகாய் இருக்கிறவரை நாமெல்லாம் சைட் மட்டும் தான்பா அடிக்க முடியும் . நமக்கெல்லாம் செட் ஆகாது " என்றாள் ஒருத்தி .

    " நமக்கு எப்படிப்பா செட் ஆகும் . நாமெல்லாம் சைடு டான்ஸர்ஸ் மாதிரில்ல இருக்கோம் . அதெல்லாம் ஹிரோயின் மாதிரி பேரழகியாய் இருக்கும் நேகாவிற்கு தானே செட்டாகும் " என்று ஏற்றி விட்டாள் ஒருத்தி .

    அந்த பேச்சின் பலனாக ' கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணி எல்லோர் கிட்டையும் பெருமையாய் காட்டனும்' என்ற எண்ணம் மனதில் விருட்சம் போல் தோன்றியது . (அவன் என்ன ஷோக்கேஷ் பொம்மையா ?? எல்லார்கிட்டயும் காட்டுறதுக்கு ? )

    அன்று முதல் அவளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சந்தோஷையே சுற்றி சுற்றி வருகிறாள் , ஆனால் அதை அவன் கண்டு கொண்டால் தானே . அவள் ஒருத்தி இருப்பதையே அறியாதவனை போலவே நடந்துக் கொள்வான் . நேகாவே சென்று பேசினால் கூட ஒன்று இரண்டு வார்த்தைகளோடு நகர்ந்து விடுவான் .

    அப்படிப் பட்டவன் தானாகவே சென்று மதுராவிடம் பேசியது நேகாவிற்கு ஆத்திரத்தை கிளப்பியது . (உன்னை வீட்டை விட்டு முதல்ல கிளப்பனும் ) .

    தனக்கு பிடித்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டே காரிலிருந்து இறங்கி தன் கேபினுக்கு சென்றான் சந்தோஷ். காலையில் இருந்து மனதில் சுழன்று கொண்டிருந்த கோபம் மறந்து இப்போது சந்தோஷத்தில் சுழன்று கொண்டிருந்தான் . அந்த சந்தோஷம் எப்படி வந்தது , எதனால் வந்தது என்று அறிந்து கொள்ள முயற்சிக்காமல் காலையில் செய்யாமல் விட்ட வேலையை இப்பொழுது தொடர்ந்து கொண்டிருந்தான் . நத்தை வேகத்தில் நகர்கிறதே என பழித்த கடிகாரம் ஜெட் வேகத்தில் பறந்தது .

    அலுவலக வேலை முடிந்ததும் காலையில் இனி தேவைபடாது என போட்டு வைத்திருந்த C.Dஐ தூக்கி கொண்டு வெளியே கிளம்பினான் .

    மாலை வீடு திரும்பியதும் வாசலிலேயே வழி மறித்தால் நிமிஷா ,

    " ஏய் நிம்மி நீ எப்போ நம்ம வீட்டுக்கு வாட்ச்மேன் ஆனே ? " என கேட்டு கொண்டே உள்ளே நுழைய போனவனை தடுத்தாள் .

    " உனக்காக தாண்ணா காத்துட்டு இருகேன் " என்றாள் .

    " எனக்காகவா ? என்ன விசயம் ? "

    " நான் ஷாப்பிங்க் போகனும்ணா . புது படம் C.D வாங்கனும் . அம்மா தனியா வெளியே போக கூடாதுன்னு சொல்லிடாங்க . சோ , நீ என் கூட துணைக்கு வாண்ணா "

    " ஏன் அம்மா , அண்ணி யாரையாச்சும் கூட்டிட்டு போக வேண்டியது தானே "

    " அவங்களுக்கு எதோ வேலை இருக்குன்னு நாளைக்கு தான் வர முடியும்னு சொல்லிடாங்க "

    " அப்போ நாளைக்கு போலாமே "

    " ம்ஹ¤ம் " என வேகமாக மருத்து தலையசைத்தவள் , " என் பிரண்ட்ஸ் கிட்டே இன்றைக்கு அந்த பாட்டு கேட்பதா சொல்லி இருக்கேன் "

    " அப்படின போய் நெட்ல கேளு " என்றவன் உள்ளே நுழைய எத்தனித்தான் . அவனுக்கு வழிவிடாது தடுத்தவள் .

    " அதெல்லாம் முடியாது நான் இன்றைக்கே அந்த C.D வாங்குவேன்னு சொல்லி இருக்கேன் " என்றாள் பிடிவாதமாக .

    " இந்த பிடிவாதத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை . சரி வர்றேன் . இப்போ எனக்கு வழிவிடு "

    " எதுக்கு உள்ளே போகனும் ? "

    " ஏய் லூசு நான் இப்போ தான் ஆபீஸில் இருந்து வர்றேன் . போய் முகம் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வர்ரேன் " என்று அவள் தோள் பற்றி விலக்க முயல அவளோ சற்றும் அசைந்துக் கொடுக்காமல் ,

    " சரி சரி உன்னை உள்ளே விடுறேன் அதுக்கு முன்னே நீ என்னை வெளியே அழைச்சிட்டு போவேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு " என்றாள் .

    " ஏண்டி படுத்துறே ? "

    " அப்புறம் நீ உள்ளே போய் அம்மா சொல்லுறதை கேட்டு மாட்டேன்னுடேனா ? so promise பண்ணு "

    " ஓகே ஓகே ப்ராமிஸ் " என்று அவன் கூறிய பிறகுதான் வழி விட்டாள் .

    அவன் தயாராகி வந்ததும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினாள் .

    தன் கார் கதவை திறந்தவன் அப்போதுதான் மரத்தடியில் அமர்ந்திருந்த மதுராவை கவனித்தான் .

    " ஏய் என்ன ப்ரெண்ட் நீ ? உன் ப்ரெண்டை தனியா விட்டுட்டு நீ மட்டும் கிளம்புற ? " என்றான் . (super அக்கறை boss உனக்கு )

    " அவ கூப்பிட்டாலும் வரமாட்டா "

    " அதை கூப்பிடாமலே சொல்லுறே ? "

    " சரி நான் மறந்துட்டேன்னு ஒத்துக்குறேன் . எதையாவது சொல்லி சமாளிக்கலாம்னு பார்த்தா விட மாட்டியே " என்றவள் திரும்பி ,

    " வாணி வாணி இங்க வா " என்று கையசைத்து அழைத்தாள் .

    அவள் அருகே வந்ததும் ,

    " வண்டில ஏறுப்பா " என்றாள் .



    " எதுக்கு ? "

    " ஏன் எதற்குன்னு கேள்வி கேட்காம எதையுமே செய்ய மாட்டியா ? " என்றாள் சிணுங்கலாக .

    " ஏன் எதற்குன்னு தெரியலைனா கேட்டுத்தானே ஆகணும் "

    " சரிம்மா தாயே என்னை ஆள விடு . ஆளாளுக்கு இன்னைக்கு என்னை போட்டு வாங்கு வாங்குன்னு வாங்குறிங்க " என்று அவள் புலம்பவும் ,

    " எல்லோரும் வாங்குறதுக்கு நீ என்ன ஷோக்கேஷ்ல நிக்கிற பொம்மையா? " என்று இடை புகுந்தான் சந்தோஷ் .

    " ம் " என்று பல்லை கடித்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்தாள் .

    " நீங்க முறைச்சதும் நாங்க அப்படியே பொசிங்கிடுவோம்மாக்கும் . லுக்கை மாத்து லுக்கை மாத்து " என்றான் கிண்டலுடன் .

    அவனை சட்டை செய்யாமல் மதுராவிடம் திரும்பியவள் , " மாலுக்கு போறோம்டா நீயும் வா " என்றாள் .

    " நான் எதுக்கு நிம்மி . நான் வாங்குறதுக்கு ஒண்ணும் இல்லை "

    " அங்கே நீ வாங்குறதுக்கு நிறைய புக்ஸ் இருக்கும் . so வாடா " என்றாள் கெஞ்சலாக .

    " சரி நான் போய் என் ஹாண்ட் பேக்கை எடுத்துட்டு வரேன் " என்று உள்ளே செல்ல எத்தனிக்கவும் ,

    " அதெல்லாம் வேண்டாம் " என்று கையை பிடித்து தடுத்தவள் வலுக்கட்டாயமாக அவளை காரில் ஏற்றிக் கொண்டு தானும் ஏறினாள் .

    இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நேகாவிற்கு கோபம் ஏறியது .



    --உணர்வுகள் விளையாடும்....​

    - நூருல் & நிலா.
     
    5 people like this.
    Loading...

  2. nihasvin

    nihasvin Platinum IL'ite

    Messages:
    1,240
    Likes Received:
    583
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Good going dear!!
     
  3. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweetsagi,

    Jet speed nu kelvipattu irukkaen... aana adha ippo daan feel panraen.... super ah kondu poreenga... neha first kutti galatta pannu vaala...illa santhosh love ah first realise pannuvaana ...Waiting eagerly to know!!!!!!

    Vasupradha.S
     
  4. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Hi
    nice story,thanks for the update
     
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi NooruNila..
    story going very nice..
    intha neha enna prachanai panna poralo..
    santhosh-mathu meet panrapalaam finishing la "இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நேகாவிற்கு கோபம் ஏறியது" nu solreenga but enna panna pora nu solla maatikureenga.. padikura engalukku thaan buck buck nu irukirathu..
    Daei santosh yepoo thaan daa un love ah unara pora? starting la vera namma NooruNila nee purinjukaama mathu va hurt panna poratha sonnanga! hmm.. enna nadakkumo!
    eagerly waiting ma..
    -devi.
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    story is very interesting...
    neha voda friends marriage ah mattum attend pannama, amaidhiya irundhavala key kuduthu vechurukanga...
    ini neha enna panna pora?????
    madhu eppo santhosh kitta dhairiyama pesuva??????
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    interesting to read.
     
  8. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...
    semma conversation in this update between sis and bro
    intha line super
    " ஏய் என்ன ப்ரெண்ட் நீ ? உன் ப்ரெண்டை தனியா விட்டுட்டு நீ மட்டும் கிளம்புற ? " என்றான் . (super அக்கறை boss உனக்கு )"
     

Share This Page