1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுதான் சாதுரியம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 23, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    வியாபாரி ஒருவனுக்கு அழகிய மகள் உண்டு;
    வியாபாரம் செய்ய, பணம் தேவையான அன்று,

    மனத்தில் விஷமுள்ள முதியவனிடம் சென்று,
    பணத்தை வாங்கினான், அதுதான் வழி என்று!

    கெட்ட நேரத்தினால், நஷ்டமே வர, முதியவன்
    கேட்ட பணத்தைக் கொடுக்க முடியாமல் போக,

    விஷமுள்ள மனத்தில் வந்து உதித்தது, மிகவும்
    விஷமமான கெட்ட எண்ணம், முதியவனுக்கு!

    வெள்ளை, கருப்பு நிறங்களிலே பரவிக் கிடந்த,
    கொள்ளைக் கூழாங்கற்கள் நிறைந்த இடத்தில்,

    தந்திரமாக வியாபாரியை மகளுடன் அழைத்து,
    தந்திரமாக அவளை மணக்கத் திட்டமிட்டான்.

    'இரு வேறு நிறங்களில் கற்களைப் பையிலிட்டு,
    ஒரு கல்லை எடுக்கச் சொல்வேன், உன் மகளை.

    வெள்ளைக் கல்லை எடுத்தால் விடுதலைதான்;
    தொல்லை இல்லாது, இருவருமே செல்லலாம்!

    கருப்புக் கல்லை எடுத்தால், அவளுக்கு என் மேல்
    வெறுப்பு இருந்தாலும், மணக்க வேண்டும்! நான்

    பணத்தைத் திருப்பிக் கேட்க மாட்டேன்; ஆனால்
    பிணக்கம் செய்து, ஒரு கல்லும் எடுக்காவிட்டால்,

    உங்கள் இருவருக்கும் சிறைவாசமே கிடைக்கும்!
    உந்தன் மகள் இப்போது முடிவெடுக்க வேண்டும்!'

    என்று சொல்லியபடி, இரு கருப்பு நிறக் கற்களை
    எடுத்துப் பையில் போட்டான், முதியவன்! இதை

    கவனித்தாள் பெண்; கொடிய திட்டம் தெரிந்தது!
    கவனமாக உடனே யோசித்து, முடிவெடுத்தாள்!

    ஒரு கல்லை வேகமாகப் பையிலிருந்து எடுத்து,
    மறு நொடியிலேயே, அதைக் கீழே தவற விட்டு,

    தவறிய கல்லும் மற்ற கற்களுடன் கலந்து விட,
    'தவறிவிட்டதே எடுத்த கல்! ஆனால், இப்போது

    பையில் என்ன கல் உள்ளது என்று பார்த்தாலே,
    கையில் நான் எடுத்த நிறமும் தெரிந்துவிடுமே!'

    என்று கூறியபடி, இன்னொரு கல்லை எடுத்தாள்!
    அன்று சாதுரியத்தால், விடுதலையும் பெற்றாள்!

    [/COLOR]
    :idea . . . :wow
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Dear RR,

    Your poetic lines were exemplarory and you have expressed in such a way that how human being should use their brain in proper way without any tension and emotions when they are in deep trouble. Excellent.
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sree.

    Yes. I keep telling myself often - 'COOL'!!

    Habit after visiting the US twice! :rotfl
     
  4. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Presence of mind helps !!!!!!!!!!!!!:cheers
    I have read this story before but it is a treat for me to read in your unique style in tamil !!!!!!!!!
    [​IMG]
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sunitha,

    Thanks for your comment and the cute picture,

    with the excellent words by Madam Curie!

    Raji Ram :cheers
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Raji,

    A very good one...need to act to the situation...how true is it??
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    andha kallai kondu, andha
    mudhiyavanin mandayai udaithu

    vellai kal eduthen,
    Illai endru sonnaal - un
    Pallai udaippen

    endru sonnamaadhiri nachunu irundhadhu unga kadhai... Kevalamaaana ennoda kavidhayai mannikkavum!!!

    ilt
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Malar,

    Thanks a lot for your comment. As Sunitha wrote, I got this story in Enlish sometime back. It was like a puzzle asking us how the girl would have escaped from that wicked man, who put two black pebbles in his bag, to trick her.

    I liked the girl's presence of mind and intellect and wanted to present it as a poem in Tamil.

    Raji Ram :) .. :thumbsup
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    Welcome dear Nithya!

    Hope you will enjoy reading my other blogs too!:thumbsup

     
  10. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Raji...

    A nice one..though i have read it already it is worth reading everytime...

    Ungal tamil kavithai migavum arumai...

    Uma
     

Share This Page