இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன் - (Idly Dosa - Slow Poison)

Discussion in 'Jokes' started by Nijasav, Jun 22, 2012.

  1. Nijasav

    Nijasav IL Hall of Fame

    Messages:
    3,706
    Likes Received:
    2,349
    Trophy Points:
    308
    Gender:
    Female
    இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன் - (Idly Dosa - Slow Poison)

    என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. இப்பொழுது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்".

    இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதயே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்னத்தான் பிரச்சினை என்கிறேர்களா, அதற்க்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

    ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், ச்மீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்ப்பொழுது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" அப்ப்டின்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை போகும். இது பேச்சலர்ஸ் கூட இப்ப செய்கின்றனர். இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள் விழிப்புனர்ச்சியை பரப்புங்கள்.

    1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

    2. இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றூம் ஆரோட் மாவு போடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கன்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவது ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் க்டையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல் இருக்க காரணம் இந்த் புண்ணிர்க்கு, கேர்ம்போர்டில் Boring Powder போடும் ஆரோட் மாவுதான்.

    3. முக்கியமாக இந்த கிரன்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தல் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூனு மாதம் தான் மேக்ஸிமம்.

    4. உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றூம் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

    5. கிரையன்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயக்க்ம் இரண்டு விஷயங்கள். 1. கிரையன்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும் ஒவ்வொரு முறை,பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம் சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிரது. ஆனால் இவர்கள் கிரையன்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரயன்டரின் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போய்விடும்.

    6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது கடவுளுக்கு கூட தெரியாது. எனெக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

    7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள்.வெந்தயம் ஒரு இயற்க்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

    8. கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்.

    9. கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின் அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான்.

    10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைத்து இப்ப இருக்கிற கரென்டு கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸ்னாகிறது.

    இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈர்மான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்ல்து ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாக கவனம் தேவை.

    இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல அதனால் சென்னை மா நகராட்சி ரெய்டு செய்து மாவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கைப்டுத்திகிறது.

    தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்
     
    Loading...

  2. Nijasav

    Nijasav IL Hall of Fame

    Messages:
    3,706
    Likes Received:
    2,349
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Kindly spread this news
     

Share This Page