1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆறுவது சினம்

Discussion in 'Stories in Regional Languages' started by shobanal, Jul 17, 2014.

  1. shobanal

    shobanal Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    போக்குவரத்து அதிகாரி ஆகி சில நாட்களே ஆகியிருந்தது வாசுவிற்கு.
    செல்போன் அலறியது.

    வாசு - "சொல்லு மாப்பிள்ளை. எங்கடா treatகு வரவே இல்ல. barல உன்னை பட்தி தாண்டா எல்லாரும் பேசிட்டு இருந்தம்."

    நண்பன் போனில் சொன்னான் "இனி உனக்கு என்னடா ஜாலி தான் . daily ரெண்டு வண்டி பிடிச்சா போதும். சொலையா சம்பாரிக்கலாம்"

    வாசு - " அதலாம் அப்படி சம்பாரிகனும்னு எனக்கு அவசியமே இல்லை டா. சும்மா timepassku தான் இந்த வேலை. MLA தெரிஞ்சவரு. பணம் கட்டுனதுமே posting வந்துருச்சு."

    நண்பன் -" இருந்தாலும் உன் UNIFORMகுனு மரியாதை இருக்குல.உனக்கு இனி ஏக போக மரியாதை தான். நீ கேக்குலனாலும் தேடி வந்து பணம் குடுப்பாங்க பாரு." நண்பன் உசுப்பேத்தினான்.

    வாசு போனை வைத்தான். தீர்மானமாய் நிமிர்ந்தான்.

    வாலிப வயதில் ஒருவன் வேகமாக வேக தடையை மீறி வண்டி ஓட்டி போய் கொண்டிருந்தான்.

    வாசு கை காட்டி நிருத்தினான்.

    அவன் நிற்பதாய் இல்லை. அவன் நிற்காவிட்டாலும் பரவாயில்லை வாசுவை துளியும் கவனிக்க கூடவில்லை. அவ்வளவு வேகம்.

    வாசுவின் மனதில் நண்பன் கூறியது மீண்டும் கேட்டது. ச்ச என் சட்டைக்கு என்ன மறியாதை.

    வாசு வண்டியை கிளப்பினான். விடாமல் துறத்தி சென்றான்.

    அந்த வாலிபனுக்கு வாசுவை பார்க்க கூட நிமிரவில்லை அவ்வளவு வேகம்.
    சந்து பொந்து விடாமல் துறத்தி சென்றான் .

    அந்த வாலிபன் ஒரு பொதுவான் இடத்தில் வண்டியை நிறுத்தி மட மடவென உள்ளே சென்றான்.

    வாசு கிட்ட தட்ட வெறி பிடித்தவன் போல் ஆனான்.

    உடம்பு சூடேறியது கண்கள் சிவக்க வண்டியை நிறுத்தி அவனை வேகமாக பிடிக்க ஓடி சென்றான்.

    அந்த வாலிபன் நின்று பேசி கொண்டிருந்தான்.

    அந்த வாலிபன் "சரிங்க wait பண்றன்" என கூறியபடி திரும்பினான்.

    வாசு அவன் சட்டை காலரை பிடித்தான்.

    "ஏண்டா ! வண்டி வெச்சிருந்தா உனக்கு என்ன heroநு நினைப்பா?, நடைடா என் கூட" தர தரவென இழுத்து சென்றான்.

    அப்போது உள்ளிருந்து வெள்ளை உடை அணிந்த அந்த பெண்மனி வந்தாள்.
    "இங்க blood donate பண்ண வந்தவரு எங்க. அய்யயோ அவரும் போயிட்டாரா? இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சாலும் patient உயிருக்கு ஆபத்தாச்சே"

    அப்போது தான் வாசு நிமிர்ந்து சரியாய் சுற்றி பார்த்தான்.
    அது ஒரு மருத்துவமணை.

    சாட்டையில் அடிபட்டதை போல் உணர்ந்தான் வாசு.
     
    1 person likes this.
  2. jhema

    jhema Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    25
    Trophy Points:
    48
    Gender:
    Female
    nice story....:2thumbsup:
     

Share This Page