1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, May 27, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?

    download.jpg

    கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான்.

    இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.

    என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற கண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம்.

    மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

    பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

    ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
     
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@krishnaamma
    கட + உள் = உள்ளே கடவுள் கதை
    அருமையான விளக்கம்
    ஆண்டவனை நம்பினால் நஷ்டம் இல்லை கஷ்டமும் இல்லை
    ஆண்டவினிடம் விவாதம் இல்லை.
    நன்றி.
     

Share This Page