1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆசையின் ஓசை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 29, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வாவியுள் செய்ய தாமரை
    ஆவி கொய்யுமென் தேவதை !
    பாவியேன் காதல் கைதியாய்
    தேவியின் இதயம் பூஞ்சிறை !


    செல்லிடப் பேசி சிணுங்கியே
    சொல்லிடும் காதல் சேதியை !
    மெல்லவே அவள் நினைவுகள்
    கொல்லுமே எந்தன் தனிமையை !


    சிறுவிதழ் முத்தம் கிடைக்குமா ?
    குறுகுறுக்கும் என் நெஞ்சமும் !
    துருதுரு விழிகள் காண்கையில் ,
    சுறுசுறுக்கும் என் வாலிபம் !


    வைகறை செம்மை வண்ணத்தை
    மைவிழிக் கன்னம் பூசினால்
    கைவிரல் கோர்க்கும் நாளுக்காய்த்
    தைவரைக் காக்க முடியுமோ ?


    கோள்கள் நன்றாகக் கூடிடும்
    நாளுமே பார்க்க வேண்டுமா ?
    தோளென்னை நீ சேர்ந்திடு,
    தேளல்ல நானும் தங்கமே !


    மாலை ஆனதும் மையலும்
    லீலை செய்யுதே காதலி !
    சேலைத் தலைப்பிலே நூலென,
    சோலையே எனை மாற்றடி !


    காதலும் இந்தக் காமமும்
    சாதல் இல்லாத சாஸ்வதம் !
    ஆதலால் என்னை அணைத்திட
    ஓதல் வேண்டாமே சாஸ்திரம் !


    ஆசையில் நானும் தவிக்கிறேன் !
    மீசையைத் தடவிப் பார்க்கிறேன் !
    பூசைக்கு மலரைக் கேட்கிறேன் !
    ஓசையுன் காதில் விழுந்ததா ?

    Regards,

    Pavithra
     
    suryakala, jskls, Harini73 and 2 others like this.
    Loading...

  2. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    Very well written.
     
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல கவிதை அழகு நடை:clap2:

     
    kaniths likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    இப்டீல்லாம் எப்டீதான் எழுதறாங்களோ தெர்லப்பா :)

    அருமை அருமை
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வஞ்சப்புகழ்ச்சியா ? புகழ்ச்சி வஞ்சமா ? :thinking:

    ஓ , பாராட்டா ! :smiley:

    பின்னூட்டத்திற்கு நன்றி ! :)
     
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கொஞ்சமா புகழ்வோம் ஆனா
    வஞ்சமா மாட்டவே மாட்டோம்ல :)
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Excellent one Pavithra
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    . Thank you , jskls !
     
    jskls likes this.
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா, @PavithraS ,

    யார் இந்தப் பவித்ரன்? கொஞ்சும்
    தமிழில் நெஞ்சம் அள்ளும் வஞ்சியைக்
    கொஞ்சி எங்கள் நெஞ்சம்
    அள்ளி விஞ்சுகிறானே! நன்று நன்று!!
    அஞ்சுகமே அணைத்துச் சுகம் சேர்!
     

Share This Page