1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவன் தாள் மறவோம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 3, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எப்போதும் ஈரத்துடன் இருக்கும் அவன் தலை
    அவன் வசிப்பதோ யாரும் விரும்பாத சுடலை
    வெண்ணீறால் வெளுத்திருக்கும் அவன் நெற்றி,
    அடியார் மனம் அணுவளவும் விலகாது பற்றி,

    இருந்திடக் காணும் அவனுடைய பாதம்,
    அவன் அருளுவதோ சிவ ஞான போதம்.
    நீலம் பாரித்துக் கிடக்கும் அவனுடைய கழுத்து.
    அவனை நினைக்க மாறும் நம் தலையெழுத்து.

    தன்னுடலில் ஒரு பாதியைத் தந்தான் உமைக்கு,
    தானே விரைந்திடுவான் அடியார் துயர் துடைக்க.
    அடியார் பக்தியைச் சோதனை செய்வதில் எல்லை,
    என்னும் ஓர் சொல்லே அவனிடத்தில் இல்லை.

    தங்கத்தில் படிந்த தூசும் தீயிலே போகும்,
    அடியாரின் மன மாசும் சோதனையில் போகும்.
    புடம் போட்ட பொன்னும் பளிச்சென்று மின்னும்,
    தேர்ந்த அடியாரின் புகழும் என்றைக்கும் ஒளிரும்.

    அறியாது ஐந்தெழுத்தை எவர் சொன்னாலும்,
    அவர் வினை இருந்த இடம் தெரியாது போகும்.
    அனைத்துக்கும் ஆதியென விளங்கும் அவனை,
    அண்டி நின்றவர்க்கு மறுபிறவியே இல்லை.
    -ஸ்ரீ
     
    Last edited: Feb 4, 2011
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unmai, unmai, unmaidhan, Rgs.

    sriniketan
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஸ்ரீநிகேதன். -ஸ்ரீ
     

Share This Page