1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழியா நினைவுகள்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 21, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சிறு வயதில் பெரும்பகுதி நானிருந்த இடத்தினை
    சென்று பார்க்க வேண்டுமெனும் ஆவலெனை உந்த,
    அரிதாக ஓய்வு கிடைத்த நாளில் என் அடத்தினை
    நிறைவேற்றிக் கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு தந்த

    அத்தனை சக்திகட்கும் நன்றி சொல்லி விட்டு,
    மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்று,
    சொகுசுப் பேருந்தில் சுகமாய் அமர்ந்து கொண்டு
    என்றும் இனிக்கும் அந்நினைவுகட்குச் சென்று,

    அன்றிருந்த இடங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டு
    இடம் வரவும், இறங்கி மெல்ல வலப்புறமாய் நடந்து,
    சிறிய வீதி ஒன்றைத் தேடி, எதிரில் பார்த்துக் கொண்டு
    நடக்கையிலே கோல் ஊன்றி எனை மெதுவாய்க் கடந்து,

    சென்ற ஒரு முதியவரை விசாரித்துப் பார்த்தேன்.
    அவ்விடமெல்லாம் புறநகர் இரயில் பாதைக்காக,
    சுத்தப்படுத்தப்பட்டு நாட்கள் ஆகியதை நான் ஏன்
    அறியவில்லை? என்று கேட்டு என் பதிலுக்காக,

    காத்திருந்தவரும், சற்றே நெருங்கி எனைப் பார்த்து,
    அந்நாளில் எனையழைக்கும் செல்லப் பெயரொன்றில்
    எனை விளித்து, நீ தானா? என்று கேட்டு வியந்து
    மேலும் பேச மனமெங்கும் புது உவகை ஒன்றில்,

    திளைத்து, என் ஏமாற்றம் அத்தனையும் மறந்து,
    அவருடனே பேசுகையில் நானும் எனை மறந்து,
    வெகு நேரம் சென்ற பின்னரே அதனை உணர்ந்து,
    விடைபெற்றுச் சென்றேன், என்னிடத்துக்கு விரைந்து.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    காலம் மாறும்போது நாம் வளர்ந்த இடங்கள் நமக்கே அடையாளம் தெரிவதில்லை..ஆனால் நம் நினைவுகள் மறைவதில்லை...ரசித்து படித்தேன் ஸ்ரீ...

    (ஆனாலும் தினமும் செய்திகள் பாருங்க) :)
     
    Last edited: Feb 21, 2011
  3. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    காலவெள்ளம் நம் சந்தோஷச்சுவடுகளை அளித்துவிடுகிறதே

    கண்முன் இருப்பதில் கவலை மறப்போம் .... விடுங்க
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    It is very difficult to get an unbiased news telecast in any channel Latha. Thanks for your appreciation and feedback. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    What you say is the practical approach Pushpalatha. Thanks for your feedback. -rgs
     

Share This Page