1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகே ஆபத்தே

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 2, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மலையும் ஒரு அழகு
    பள்ளத்தாக்கும் ஒரு அழகு
    சுழித்தோடும் நதியும் அழகு
    சலனம் இன்றி ஓடும்
    நீரோடையும் அழகு
    இளமையில் அழகென
    தோன்றியவை எல்லாம்
    ஆபத்தாக தெரிகிறது
    ஆண்டுகள் போக போக

    ஏன் இந்த மாற்றம் ரசனையிலே
    என்ற கேள்வி எழுந்தது
    கிடைத்தது ஒரு பதில்
    ரசனையில் மாற்றம் இல்லை
    வயதின் தாக்கம் உடலில் மாற்றம்
    இதுவே அழகெல்லாம் ஆபத்தாக
    தோன்றிய ரகசியம்

    இளங்கன்று பயம் அறியாது
    என்று சொன்ன என் தாய்
    வந்தாள் நினைவிலே
    அன்று அவள் சொன்ன
    வார்த்தைகளின் பொருளை
    உணர்ந்து கொண்டேன் இன்று
    அதையே நானும் சொன்னேன்
    என் பிள்ளைகளிடம் ஒரு தாயாக
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a nice one Periamma. A beautiful one often comes with an invite to an unknown risk. Thanks for sharing. -rgs
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Sri Thanks for your immediate response.your words are true.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமை மா.........வாழ்கை ஒரு வட்டம்.....அப்டின்னு தெளிவா உணர்த்தி விட்டன உங்கள் கவி
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காலங்கள் மாறும்.....காட்சிகள் மாறும்.....பழைய பாடல் கேட்கிறது அம்மா........நலமா அம்மா? இந்தியா வந்துவிட்டீர்களா?
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ராம்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா.காலங்கள் மாறுவதால் கோலங்கள் மாறும் .காட்சிகளும் மாறும்.ஆனால் தாய் உள்ளம் மட்டும் மாறாது.செப்டம்பரில் தான் இந்தியா வருகிறேன்.நம் கவிதை தளம் இப்ப கல கலப்பாகி விட்டது.சந்தோஷமா இருக்குமா.
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    அழகான வரிகள் மா
    அழகிற்கும் ஆபத்து உண்டு
    அழகினாலும் ஆபத்து உண்டு
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆமாம்மா....ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! புதிய வரவுகள் அதிகம்! ஆனாலும் பழையவர்கள் வரவு குறைந்தே விட்டது கொஞ்சம் வருத்தம்
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உண்மை தானே மா...அது சிறு வயசில புரியாது....அனுபவத்தில வந்த உண்மையை பிறர் நமக்கு கூறினாலும்...நாம் அதை அனுபவித்த பின்னரே உணர்கிறோம்....கவிதை எப்போதும் போல கருத்துடன் கலந்து சிறக்கிறது!!
     

Share This Page