1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகுக்கு உயிர் நாலு நாட்கள்

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jul 8, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அழகுக்கு உயிர்நாலு நாட்கள் பின்னர்
    அன்பைத்தான் எல்லாரும் பார்ப்பார்
    அழுகிடுமே இவ்வுடலும் ஒர்நாள் நம்மை
    இடுகாட்டில் கொண்டுபோய் சேர்ப்பார்

    (அழகுக்கு உயிர்...)

    மரம்போல இவ்வுடல் நீயறிவாய் தீ
    மூண்டதும் உருமாறும் அறிவாய்
    புருஷோத்தமன் திருவடிக ளொன்றே தரும்
    புண்ணியம் என்பதும் அறிவாய்

    (அழகுக்கு உயிர்...)

    காகிதம்போல் இவ்வுடல் நீயறிவாய் ஒரு
    காற்றடித்தால் பறந்திடுமே அப்பால்
    ஆகாயம் நிலமெங்கும் நிறைந்த அந்த
    அரிபாதம் நிலையென்று அறிவாய்

    (அழகுக்கு உயிர்...)

    மண்பொம்மை இவ்வுடல் நீயறிவாய் ஒரு
    மழையடிக்க கரைந்திடுமே அறிவாய்
    அண்ணலென் கண்ணன்தன் பாதம் ஒன்றே
    நித்தியம் என்றும்நீ அறிவாய்

    (அழகுக்கு உயிர்...)

    பூந்தோட்டம் போலுடலம் அறிவாய் ஒரு
    பொழுதுக்குள் வாடிடும் அதுவும்
    காந்தன் அலைமகளின் பாதம் நம்மைக்
    காத்திடும் என்றும்நீ அறிவாய்

    (அழகுக்கு உயிர்...) வீயார்
     
    4 people like this.
    Loading...

  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    azahiya koodiyathu udal. maatru karuthu illai. ayin suvar irunthal thaane chithiram varaiya mudiyum. yenave udalaiyum penuvom. hariaiyum thozhuvom.

    udambaar azhiyin uyirar azhivaar
    thidambpada meignanam seravum maattar
    udambai valarkkum ubayam arinthe
    udalai valarthen vuyir valarthene

    udambai munnam izhukendru irunthen
    udambinule uruporul kanden
    udambinule uthaman koil kondullaan endru
    udamba naanirunthu ombugindrene. Thirumoolar.
     

Share This Page