1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அலட்சியம் வேண்டாம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Sep 7, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அலையில் எறிந்த பொருளும்
    சில சமயம் மறைந்து
    வேறிடத்தில் கரை ஒதுங்குவதுண்டு.
    நாம் அலட்சியம் செய்த எவரும்
    மறுபடி எப்போதும்
    நமைப் பொருட்படுத்தியதுண்டோ?

    பல நிறைகள் உண்டு
    எனத் தெரிந்த பின்னாலும்,
    சிறு குறையைக் கண்டு
    ஒருவரை ஒதுக்கிட வேண்டாம்.

    பொருளிலோ, அறிவிலோ
    அன்றி உடல் நலத்திலோ
    பெருமிதம் கொள்பவர் தலையும்,
    அவை மிகுந்தவர் முன் நாணும்.

    ஒதுக்குவதை இயல்பாகக் கொண்டு விட்டால்,
    தனியே ஒதுங்குவதும் ஒரு நாள் நிச்சயம் நேரும்.
    இலட்சியம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்தால்,
    அலட்சியம் வெகு தூரம் விலகியே நிற்கும்.
    -ஸ்ரீ
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    அருமையான வரிகள்..Rgs.

    அலட்சியத்தை அலட்சியப் படுத்தலாம், தவறில்லை, சரியா நான் புரிந்துகொண்டது..:)

    Sriniketan
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for liking this post and giving a nice feedback Sriniketan. Yes. You are right. -rgs
     

Share This Page