அவர் காலை நடையின் பகுதியென அப்பூங்காவும் இடம் பெறுவதுண்டு. அதன் கடைசியில் தனியே சிறுமியென அச்சிறுமரம் கண்டவர் நிற்பதுண்டு. அதன் ஒவ்வொரு பசிய இலையதுவும் ஒரு சேயின் கையெனத் திறந்திருக்கும். அதைத் தொடவும் சற்றே தயங்கி நிற்கும் அவர் முகமொரு முறுவல் கொண்டிருக்கும். அதன் சற்றே மங்கிய செவ்வண்ணம் கொண்ட மலர்களை அவரும் மிதிக்காமல் கடந்தே சென்றிடுவார் தினந்தோறும். தொடர்கிறதிது மாதங்கள் தவறாமல். அதுவோ சிறுமரம், நிழல் கிடைக்காது. அதன் பூக்களும் பெரிதாய் மணக்காது. அதன் வடிவத்தில் மாற்றமும் நிகழாது. அதன் இலைகளில் பசுமையும் மாறாது. அதில் அவர் எதைத்தான் கண்டாரோ? அதை அறிந்திட எனக்கும் ஆசை தான். அவரிடம் ஒரு நாள் அதைக் கேட்பேனோ? அறியேன். அது நிகழ்ந்தாலும் சொல்லேன்!