1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அரசாணிகால்

Discussion in 'Regional Poetry' started by FirstBite825, Sep 8, 2011.

  1. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    சின்னஞ்சிறு மரக்கன்று
    வீட்டினில் வைத்து வளர்க்க ஆசைப்பட்டேன்
    நர்சரியிலிருந்து வாங்கிவந்தேன்

    வீட்டினிலே
    என் கண்முன்னே அழிந்து சருகாகக்கண்டேன்
    என்ன முயற்சித்தும் என்னால் அதை காப்பாற்ற முடியவில்லை

    தாவரத்தின் மொழியறிந்திருந்தால்
    அதன் தேவை புரிந்திருக்குமோ

    நர்சரியில் அதை வளர்த்தது யார்
    மற்றுமொரு மரக்கன்றாகத்தானிருக்கும்
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒருவேளை அந்த பசும்புல் பக்கத்தில் போய் கண்ணீர் சிந்தியது போல, இந்த நர்சரி செடி பக்கத்திலேயும் போய் கண்ணீர் வடித்தீர்களா?? தண்ணீர் கேட்டால் கண்ணீர் விடுகிறாரே என்ற வருத்தத்தில் உயிரை விட்டிருக்கும்!:hide:
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நர்சரியில் இருந்து வாங்கி வந்து
    வாட்டி வதக்கி போக்கி விட்டீர்கள் வளரும் பயிரை...

    வீட்டில் இருக்க வேண்டிய குழந்தையை இளம் வயதிலேயே
    நர்சரிக்கு அனுப்பி வாட்டி வதக்கி வளரும் பயிரின்
    உணர்ச்சிகளை கெடுத்து விடுகிறோம்...

    தாவர மொழியும் அறிந்திடேன்
    தவழும் குழந்தையின் மொழியும் அறிந்திடேன்...
    அய்யகோ!!!!!
     

Share This Page