1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அம்மா - Please Share In Your Views ... Do Not Cut The Thread..

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Apr 27, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    உயிருடன் இருக்கும் பொழுது அம்மா மனதை வேதனைப் படுத்தியது இன்று நினைக்கையில் மனம் துடிக்கின்றது....

    " ஏன் அப்படி கூறினேன் ?" என்று என்னை நானே நொந்துகொள்கிறேன்...

    நான் என் அம்மாவிற்கு 39 வயதில் பிறந்தேன்.... அதற்கு நான்தான் வருத்தப்பட்டிருக்கிறேன்...
    அவள் ஒரு நொடிகூட வருத்தமோ துயரமோ பட்டதில்லை... தன கடைசி மூச்சு இருக்கும் வரை என் நலனிற்காக பாடு பட்டவள்.... என் நலம் என்று இல்லை... தனக்கு தெரிந்த அத்துணை பேரின் நலமும் அவளுக்கு உயிர்மூச்சு... இதை நான் என் அம்மா என்பதற்காக கூறவில்லை... அவளின் குணம் அது... நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை...

    எனக்கு சிறு வயது இருக்கும் பொழுதே அவள் கூறியிருக்கிறாள் தன்னுடைய அம்மா தனக்கு 9 1/2 வயதிலேயே இறந்துவிட்டதை ... அதனால் என்னை தனியாக தவிக்க விட்டு போகமாட்டேன் என்று அடிக்கடி கூறுவாள் ... ஒரு தாயின் தேவை எவ்வளவு ஒரு மகளுக்கு முக்கியம் என்பதை கதை கதையாய் கூறுவாள்... அப்படி பட்டவளா என்னைக் கைவிடுவாள் ?

    என் பிரசவம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஏற்பட்டது... அப்பொழுது என் தந்தைக்கு சற்று உடல் நலம் குறைவு என்பதால் என் அம்மா என்னுடன் மருத்துவ மனையில் இல்லை... அது ஒரு பெரிய ஏமாற்றம் எனக்கு....

    பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அம்மாவிடம் கேட்டேன்...

    " என்னை கடைசியிலே அனாதையாக விட்டு விட்டாயே ஹாஸ்பிடல்ல ? நீ உயிரோடு இருந்து எனக்கு என்ன பலன்அம்மா? " நாக்கில் நரம்பில்லாமல்.......
    ஆனால், அதற்கும் கொஞ்சம்கூட கோபப்பட வில்லை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.... பெண் தெய்வம் என்று கூறினாலும் ..மிகை ஆகாது..
    அதன் பிறகு எத்தனையோ தடவை மன்னிப்பு கேட்டு விட்டேன்... ஆனாலும் இன்று கூட என்மனம் வேதனைப் படுகிறது....

    அவள் இன்று உயிருடன் இல்லை... ஆனால், அவள் மூச்சுக் காற்று என் சுவாசத்தில் கலந்துள்ளது.....

    மைதிலி ராம்ஜி
     
    Caide, aarthi28 and sindmani like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சில சமயங்களில் இப்படி தான் பேசி விடுகிறோம் .என்ன இருந்தாலும் நாம் குழந்தை தானே அதனால் அம்மா தப்பாக நினைக்க மாட்டார்கள் .
     
    sindmani likes this.
  3. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nanri... unmaiyaana vaarthaigal... manadhirku idhamai irukku...
     
    sindmani likes this.

Share This Page