1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அம்மா+அப்பா= முதியோர் இல்லம்

Discussion in 'Regional Poetry' started by Artbrush, Jan 14, 2011.

  1. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அம்மா---நீ இருக்க கருவறை கொடுத்தைன் நான்
    அன்று
    நான் இருக்க ஒரு அறை இல்லையா உன் வீட்டில்
    இன்று

    அப்பா---உனக்காக தொட்டில் கட்டினோம் நீ தூங்க
    அன்று
    எங்களுக்காக காசு கட்டினாய் முதியோர் இல்லத்தில்
    இன்று

    அம்மா----தத்தி த த்தி நடந்தாய்
    கை பிடித்து நடை பழக்கினேன்
    அன்று
    வயோகத்தில் தள்ளாடினேன்
    ஓரமாய் கிட என்றாய்
    இன்று

    அப்பா---திக்கி திக்கி பேசினாய்
    வார்த்தைகளை தெளிவாக்கினேன் நான்
    அன்று
    வயதால் வார்த்தை குளறிய என்னை
    வாயை திறக்காதே என்கிறாய்
    இன்று

    அம்மா----ஈரமாக்கினாய் ஆடையை இயற்கை உபாதையால்
    வேறு உடை மாற்றி அழகு பார்த்தேன்
    அன்று
    கை நடுக்கத்தால் சிந்திய தண்ணீர்
    ஈரமாக்கியது உன் ஆடையை
    கண் தெரியவில்லையா உனக்கு
    இன்று நீ

    அப்பா---ஓயாமல் நீ கேட்கும் கேள்விக்கு
    விபரமாய் பதில் சொன்னேன்
    அன்று
    நான் பேசும் ஒரு வார்த்தை நச்சரிப்பு
    உனக்கு இன்று

    அம்மா----உனக்காக பத்தியம் இருந்து
    பால் கொடுத்தேன்
    அன்று
    ஒரு டம்ளர் பாலுக்காக கணக்கு பார்க்கிறாய்
    இன்று

    அப்பா----உனக்காக நண்பரிடம் கடன்
    ஆபிசில் லோன்
    எல்லா சுமையும் என்மேல்
    உன் படிப்புகாக
    அன்று
    ஒரு பிடி சோறு சுமையானது
    என்னால் உனக்கு
    இன்று

    அம்மா,அப்பா----ஓயாமல் உழைத்தோம் உனக்காக
    அன்று
    ஓய்வு எடுக்கிறோம் முதியோர் இல்லத்தில்
    உன்னால் இன்று

    நினைவு இல்லையா????????
    நாங்கள் செய்த து
    எங்களை அனாதையாய்
    முதியோர் இல்லத்தில்
    விட்டு விட்டு போகும் போது
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதியோர் இல்லம் :
    இது ஒரு மனித காட்சி சாலை.
    இங்கே மிருகங்கள் வந்து போகின்றன,
    மனிதர்களை பார்க்க !!!!!!

    (இணைய தளத்தில் இருந்து எடுத்த வரிகள்)

    பெற்ற உறவுகள் விழுந்திடாமல் வேராய் இருந்திட
    விழுதுகள் துறந்த ஆலமரம்...பெற்றோர்
    அவர்களுக்கு இன்று ஓர் திறந்த வெளி நிழல் முதியோர் இல்லம்.

    அப்பாடா
    ஒரு வழியா எழுதி முடிச்சிடீங்க.
    ரொம்பவும் எதார்த்தம் நிறைந்த வரிகள் அக்கா
     
  3. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    டியர் கார்த்திகா
    உண்மை தான் நீங்கள் சொல்வது ஆனால் இத்த தலைமுறை புலம்பியது போதும் அம்மா நாம் வெகு ஜாக்ரதையாக இருப்போம்
    நாமாகவே இல்லம் பார்த்துகொள்வோம் இனி இந்த குரல் கொடுக்காமல் இருக்க முயல்வோம் நாம்
    என்ன சொல்வது சரிதானா ?
    kantha
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வலி நிறைந்த வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதை கார்த்திகா. வாழ்த்துக்கள். நிச்சயம் களையப்பட வேண்டிய தவறுகளில் இதுவும் ஒன்று. -ஸ்ரீ
     
    Last edited: Jan 14, 2011
  5. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Dear Kartika,

    This is part of the life cycle that generations have been facing. Since we did not have brothers . we took care of our father. Time came when we physically as ladies could not shoulder him and hence were forced to send him to an old age home. Hence sometimes these old age homes are boon as they do care for the sick people . In the mad rush to go to office we are not able to take care of minute things.

    Your poem sounds reminicence - very true - life is changing and it is time that we too start to learn to adapt to homes.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அட முட்டாள்களே
    தந்தை தாயை விடுதியில் விடும்
    வீணர்களே மடையர்களே
    ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
    உன் பிள்ளையால் உனக்கும்
    இதே நிலை தான் ஏற்படும் என்பதை மறவாதீர்
    உன் பிள்ளை உன்னை காக்க
    நீ உன் தாய் தந்தையரை காக்க வேண்டும்

    உன்னை
    தன் வயிற்றில் வைத்து காத்தவளை
    நீ வீட்டில் வைத்து காக்க மறுத்தால்
    உன் பிள்ளை உன்னை தெருவில் நிறுத்தி விடுவான்

    அம்மா உங்கள் கவிதை மிக அருமை.......
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அழகான வரிகள் ab.... ஆனால் சமீபத்திய அறிக்கையொன்று சொல்கிறது இவ்வாறு...."நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது..." என்று. இது நல்ல விஷயம் தானே?:)
     
    Last edited: Jan 14, 2011
  8. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன் இல்ல! பாராட்டுக்கு நன்றி சரோஜ்
     
  9. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது சரிதான் காந்தாம்மா!
    நன்றி
     
  10. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ
     

Share This Page