எய்தவன் சிரிக்கிறான் உயிரை துளைத்த அம்பு அழுகிறது ஆண்டவனே இது என்ன நியாயம் எய்தவனை விட்டு விட்டு என்னை உடைத்தெறிகிறார்களே பாவி அவன் பஞ்சணையில் சாய்ந்திருக்க ஒன்றும் அறியா நான் புழுதியில் புரள்வதேன் தீயவன் சேர்க்கை எனை தீக்குள் தள்ளி விட்டதே இதுவும் உன் லீலை தானோ