1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

''அமைதிஎல்லாதென் மனமே''

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Oct 5, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ''அமைதிஎல்லாதென் மனமே ''
    கண்டசாலா என்று ஒரு தெலுங்கு பாடகர் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர். கடித்து துப்பிவிடுவார் தமிழ் வார்த்தைகளை. அப்போவும் அவர் பாட்டு இனிமையான குரலுக்காக கேட்போம். என்ன ஒரு கம்பீரம் அந்த குரலில். கதாநாயகி காதலனை சந்திக்க துடிப்பாள். அவளுக்கு தக்க நேரத்தில் ஒரு பரிசு. ஒரு மந்திரக் கண்ணாடிப் பேழை. ''இந்தாம்மா பொண்ணே , இந்த பேழையை திறக்குமுன்பாக நீ யாரையாவது மனதில் நினைத்தால் அவர் நீ இந்த பேழையை திறந்ததும் அதன் கண்ணாடியில் தோன்றுவார்''. கதாநாயகி சாவித்திரி ஓடுவாள். நாமும் ஆர்வமாக அவளை பின் தொடர்வோம். தனியே தனது அறையில் கதவை சார்த்திக்கொண்டு அவள் ஜெமினி கணேசனை (அபிமன்யுவாகத்தான்) நினைத்துக்கொண்டு மெதுவாக பேழையின் மூடியை கொஞ்சம் கொஞ்சமாக திறப்பாள் முழுதும் திறந்து அந்த மூடியின் உள் பக்கமான கண்ணாடியை ஒரு கணம் நோக்குவாள். காதல் மன்னன் கம்பிரமாக தோன்றி சிரிப்பார் பாடுவார்.
    ''நீ தானா எனை நினைத்தது ''என்று . அந்த சினிமா கொட்டகை பூரா ஆனந்த அலையில் அதிரும். கண்டசாலா அனைவரையும் தனது காந்த சக்தி குரலால் கட்டி போட்டு விடுவார். எத்தனைபேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்?. அப்படியானால் நிச்சயம் 60க்கு மேல் உங்கள் வயது. எப்படி என் ஜோசியம்? எனது ஜோசிய உண்மைக்காக நீங்கள் கட்டாயம் ஒரு சினிமா கொட்டகையில் அன்று அமர்ந்திருக்க வேண்டியிருக்குமே.

    இந்த கண்டசாலா மற்றொரு படத்தில் ''அமைதியில்லா என் மனமே'' என்று பாடியதையும் அப்படியென்றால் நீங்கள் கேட்டிருக்க நிறைய சான்ஸ் இருக்கிறது.

    மன அமைதிக்கு ஒரு பத்து யோசனை சொல்கிறேன். இதை ஒருவர் அழகாக நீளமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

    நீண்ட நமது வாழ்க்கையில் எத்தனையோ எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. பாதி கவலைகள், கஷ்டங்கள் உள்ளே இருந்தே கிளம்புபவை. இதை எப்படி அணுகினோம் எப்படி ஏற்றுக்கொண்டோம் என்பதில் தான் கஷ்டங்கள் கவலைகள் மனிதர்களிடையே வேறுபடுகின்றன. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கை பிரச்னைகளை வேறு வேறு கோணங்களில் சந்தித்து வெற்றியோ தோல்வியோ அடைகிறார்கள் என்பது தெரிந்த விஷயம். வாழ்க்கையின் பாதை மாறி மாறி தான் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒரு பத்து யோசனை, தப்பிக்கும் வழி, இருக்கிறது. நிதானமாக யோசித்து, கடைப்பிடித்தால் வெற்றி கிடைக்கலாம். அமைதி தான் அந்த வெற்றி, லட்சியம்.

    1. மூக்கை நீட்டாதே.


    மற்றவர் விஷயத்தில் அவர்களாக உன்னை கேட்கும் வரை நீ பட்டுக்கொள்ளாதே. உன் அபிப்ராயங்கள்,ஆலோசனைகள் இலவசம் தான்.அதற்காக தேவையில்லாத போது எதற்காக வேண்டாத பரிசாக அதை கொடுக்கவேண்டும். அப்படி பரிசளிப்பதால் உனக்கு கிடைப்பது உன் பரிசைப் பெற்றவனின் கோபம், விரோதம், ஆத்திரம். இது தேவையா? நீ சொன்ன யோசனை தான் சரி என்று உனக்கே தெரியாதே. உன் லாஜிக் எல்லாம் அடுத்தவனை சோதனை செய்து பார்க்கவா? பேசாமல் உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ. உனக்கும் அமைதி. அடுத்தவனுக்கும் தொந்தரவில்லை.

    2. மறப்போம் மன்னிப்போம்

    இது ஒரு சக்தி ஆயுதம். அமைதியை அள்ளிக்கொடுப்பது. ஒருவர் நமது மனதை புண் படுத்திவிட்டார் தனது செயலாலோ சொல்லாலோ என்று வைத்துக்கொள்வோம். அந்த எண்ணம் நம்மை வெகு காலம் தூக்கமின்றி, கோபத்திலோ, வருத்தத்திலோ ஆழ்த்தி துன்புறுத்துகிறது. வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். ரத்தம் கொதிப்பேறும். நடந்த சம்பவம் எப்பவோ என்றாலும் அதன் விளைவு இவ்வாறு வெகுகாலம் தொடரும். அடிக்கடி நினைவில் மேல் எழும்பி வாட்டும். இருக்கும் நமது கொஞ்ச காலத்தில் இந்த சுமை எதற்கு. '' சரி போ ஏதோ சொல்லிட்டான். அவனுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான். இதை எதற்கு பெரிசு பண்ணி கஷ்டப்படணும். தூசி என்று உதறி விடலாம்''. இந்த எண்ணம் மேலோங்கினால் மேலே சொன்ன துன்பங்கள் சட்டென்று விலகும். வாழ்க்கை நிம்மதியாக ஓடும்.

    3. என் பேர், போட்டோ எங்கே? -- வேண்டாம்.

    எங்கு வேண்டுமானாலும் திரும்பி சுற்றி வளைத்துப்பார். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் சுயநல வாதிகள். மற்றவரை புகழ்ந்தாலே அதில் ஏதோ ஒரு சூது இருக்கும். இன்று நீ பதவியில் இருக்கிறாய், உன்னிடம் ஏதோ காரியம் ஆகவேண்டும் என்றால் நீ தான் இந்திரன் சந்திரன். எந்த கணம் நீ அது இல்லையோ அந்த வினாடி முதல் ''நீ யாரய்யா ?'' என்பதுடன் நீ செய்யும் சொல்லும் காரியங்கள் அனைத்துமே தப்பாக தான் படும். எதற்கு மேலே ஏறணும் கீழே விழணும். உன் வேலையை நீ சீராக யோக்கியமாக சுத்தமாக திருப்தியோடு செய். அது போதும். மன அமைதி கிட்டும். பிறர் உனது முதுகில் தட்டிக்கொடுக்கவே வேண்டாம்.

    4.பொறாமையே என்னை விட்டு அகன்றிடு.

    பொறாமை எப்படியெல்லாம் ஒருவரை துன்புறுத்தும் அமைதியை கெடுக்கும் என்று நாம் அறிவோம். நீ உன்னோடு வேலை செய்யும் மற்றவர்களைக் காட்டிலும் அதிக உழைப்பாளி, கொடுத்த வேலையை நன்றாக செய்பவன். தவறு இருக்காது உன் வேலையில் என்று எல்லோருமே சொல்வார்கள். எனினும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று வரும்போது உன்னைவிட மற்றவர்கள் அதிகம் பெறுகிறார்கள். உனக்கில்லை. ஏதோ நீ ஒரு வியாபாரம் ஆரம்பித்தாய். பல வருஷங்கள் ஆகிவிட்டது. உன்னை விட சமீபத்தில் ஒரு வருஷத்துக்குள் அதே வியாபாரம் மற்றொருவன் தொடங்கினான். அவனுக்கு கொள்ளை லாபம் அபரிமித செழிப்பாக அவன் வியாபாரம் பெருகியது. உனக்கு அது நேரவில்லை. இது போல் பல உதாரணங்களை நினைத்துகொள்வோம். இதற்காக பொறாமை படவேண்டுமா?. நடப்பது எல்லாமே கர்ம பலன் என்று உணர்வாய். தொடரும் வினை, செயலில் விளைவை காட்டும்போது மற்றவனையும் அது தான் அவன் கர்ம வினைப்படி தூக்கி விட்டிருக்கிறது என்று கொள்வோமே. பொறாமையால் இழந்த பொருளையோ அதிக பலனையோ அடைய முடியாதே. அதால் வருவது அமைதி இன்மை ஒன்றே.

    5. காலம் சமய சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றம்.


    கால சூழ்நிலை சந்தர்பங்கள் நம்மால் மாற்ற முடியாதவை. அதற்கேற்ப நாம் தான் மாறவேண்டும். நம்மை நாம் மாற்றிக்கொண்டு விட்டோமானால் ஒரு அதிசயம் காத்திருக்கும். அட , இதென்ன ஆச்சர்யம், இதுவரை சற்று விரோத பார்வை பார்த்த சூழ்நிலை கூட சிரிக்கிறதே. எனக்கு ஒத்தாசையாக இருக்கும்போல் இருக்கிறதே.


    6. எதையெல்லாம் எல்லை மீறியதாக காண்கிறோமோ, அதை ஒப்புக்கொள்வோம்


    சில விஷயங்கள் நம் ஒப்புதல் இல்லாமலேயே நடக்கின்றன. நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவற்றை நாம் எப்படி கட்டுப்படுத்த முடியும். நமக்கு விருப்பமானதாக எப்படி மாற்ற முடியும்? இந்த மாதிரி நடப்பவற்றை இடையூராகவோ, துரதிஷ்டமானதாகவோ, பயனற்றதாகவோ, கருதாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் படியே அதன வழியே நடப்பதால் அது சாதகமாக மாறுகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ இன்னல்கள் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. நம்மால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டே வரமுடியாதே. அவற்றை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்வதால் அவைகளின் துன்பமும் இடையூறும் குறையும். ஏமாற்றம், ஏக்கம், கோபம் தாபம் எல்லாம் காணாமல் போகும். நம் மீது நமக்கு முதலில் நம்பிக்கை வரவேண்டும். உள்ளே தைர்யம் தானாகவே வரும். அது சும்மா வராது.சந்தோஷத்தோடு வரும். என்னால் முடியும் என்ற நம்பிக்கை வளரும். .

    7. முடிந்ததை மட்டும் செய்


    உனது திறன், தரம், திறமை, சக்தி தெரிந்து உன்னால் முடியும் என்ற நம்பிக்கை ஊட்டும் காரியங்களை மட்டும் ஏற்று தோளில் சுமந்து கொள். பிறர் புகழ, போற்ற, உன் சக்திக்கு மீறிய செயல்களில் தலையிடாதே. இப்படி முடியாததை சுமப்பது, தான் என்கிற அகம்பாவம் ஊட்டுகிற தைர்யம். இவற்றில் ஈடுபடுவதால் அமைதியை இழப்பாய். வெளி வேலைகளில் ஈடுபடும் நேரத்தை விட சிறிது நேரமாவது ஆத்மஞான விஷயங்களில் மனதை செலுத்து. த்யானம், ஜபம், யோகா, ஈடுபடும்போது, உன் மீது உனக்கே

    நம்பிக்கையும் அன்பும், பிறர் மீது காருண்யம் பரிவு, பாசம் எல்லாம் தானே வரும். மனம் இவற்றில் போனால் மற்ற மனதை அமைதியில்லாமல் செய்கிற எண்ணங்களில் செல்லாமல் தடுக்கலாம். சிக்கலில்லாத மனது தூய நீரோட்டமாக அமைதி அலைகளை விடுவிக்கும். .

    8. இடைவிடாத தியானம்

    தியானம் செய்யும்போது மனம் அமைதியுறுகிறது. அலைபாயும் எண்ணங்கள் விலகுகிறது. இதுவே உயர்ந்த மன அமைதி. செய்து பார்த்தால் தான் நீங்கள் அனுபவிக்க முடியும். ஒருநாளுக்கு அரை மணி நேரம் போதுமானது. மீதி 23 1/2 மணி நேரம் மனம் அசைவின்றி தெள்ளிய அமைதியோடு நகரும். முன்பெல்லாம் போல் மனம் எளிதில் குதிக்காது, கொதிக்காது. இதனால் கைமேல் பலன் கிடைக்கும். என்னடா இது, இந்த ஆள் நம்மை சாமியாராக்கி விட்டால் எப்படி ஆபிஸ் போவது என்று கவலை வேண்டாம். அன்றாட வேலை எதுவுமே பாதிப்புறாது என்பது மட்டுமில்லை, முன்பை விட இன்னும் அற்புதமாக உங்களால் பணி புரிய உதவும். நல்ல பேர், உயர் பதவி, அதிக சம்பளம் எல்லாம் வரட்டுமே. எதற்கு விட்டு வைக்க வேண்டும்.


    9. மனக் கட்டுப்பாடு.

    ஆங்கிலத்தில் சொல்வார்களே, An idle mind is the devil’s workshop என்று அது வாஸ்தவமான பேச்சு. சும்மா இருக்கும் மனதில் தான் எல்லா கெட்ட எண்ணங்களும், செயல்களும் உருவாகிறது. மனதிற்கு அலாவுதீன் பூதம் போல ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்த எண்ணம் நல்வழியை சேர்ந்ததாக இருப்பது அவசியம். பிரயோசனப்படவேண்டும். நல்ல பொழுது போக்கு இதற்கு உதவும். உனக்கு எது உயர்ந்ததாக, பிடித்தமான நற்செயலோ எண்ணமாகவோ அது அமையட்டும். இதில் ஈடுபடும்போது வியாபாரம் செய்வதில் கிடைக்கும், காசுக்காக வேலை செய்யும் ஊதியம் கிட்டப்போவதில்லை. ஆனால் இந்த ஹாபி, உனக்கு மன நிறைவை தரும், அமைதியை, திருப்தியை, கூடை கூடையாக நிரப்பும் .



    10 செய்யவேண்டியதை தள்ளிப்போடாதே, பின்னர் வருந்தாதே

    காலத்தை வீணடிக்காதே. எதைச் செய்ய முயலும்போதும் '' செய்வோமா, வேண்டாமா'' என்று ஒத்தையா ரெட்டையா பிடிக்க வேண்டாம். இதால் நாள், வாரம், மாதம் வருஷங்கள் கூட வீணாக ஓடி விடும். உன்னால் எதையுமே திட்டமிட்டு நிறைவேற்ற முடியாது. எது நேரும் நேராது என்ற நோக்கமே சிந்தனையே இலாத போது எப்படி கச்சிதமாக முடிவெடுக்க முடியும். நேரம் பொன்னானது. ஒரு வினாடி கூட வீணாகாமல் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறதே. அதில் ஈடுபடுவோம். அதில் வெற்றி என்பது லட்சியம் இல்லை. முயற்சி தான் முக்கியம். தவறுகளிலிருந்து திருந்தி படிப்படியாக முன்னேறலாமே. மூலையில் அமர்ந்து மூக்கால் அழுது முனகி என்ன சாதிக்கப்போகிறோம். தவறு படிக்கட்டாக, படிப்பினையாக இருக்கட்டும். ''ஐயோ அப்படி செய்து இப்படியாகிவிட்டதே'' என்ற ஒப்பாரி உதவப் போவதில்லை. கவலை விடு. சிந்தின பாலை பூனை குடிக்கட்டும். உனக்கென்ன அதைப்பற்றி சிந்தனை.



    இந்த பத்தும் உதவுமா இல்லையா?

     
    1 person likes this.
  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    indha paththum
    thunbaththai marakkatikka seiyum
    enbathil thuliyum iiam illai

    (en tamilenglish romba thalavalidhan, sorry)

    pranams
     

Share This Page