1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பான தோழிகளே நலமா?

Discussion in 'Regional Poetry' started by deepa04, Mar 24, 2011.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்பான தோழிகளே நலமா?

    அன்புமிக்க இந்த அரம்பையர் உலகை மறந்து,
    புறம் திரிந்தேன் பலநாள்.
    ஒவ்வரு நாளும் உள்ளம் கேட்கும்

    இங்கு,கவிதை சொல்லும் கிளிகள் ,
    அந்தாதி தரும் குயில்கள்,
    அளவளாவி மகிழும் மயில்கள்,
    சிறகடித்து பறக்கும் பறவைகள்,
    இக்கனம் என்ன செய்கிறதோ என,

    இத்தனையும் உள்ளமதில் இருந்தும்,
    உட்கார நேரமின்றி,துரிகை தூக்கி,
    கலையெனும் பைத்தியம் பிடித்து,
    மாநகர் தெருவினுள் நடம் பயின்றதால்,

    இங்கு அன்பான உள்ளகளையும்,அவர் தம்,
    அழகிய மொழிகளையும் ரசிக்க இயலாமல்,
    கணினியையும் மறந்திருந்தேன்,சிறிய
    மணித்துளி கிட்டிய உடனே வந்தேன்,

    நட்புடன் தரும் எடக்கு,மடக்கு ,
    வேணியின் அருமை அந்தாதி,
    கவிக்குயிலின் அற்புத தொகுப்புகள்,
    ஆன்மீகம் அள்ளித்தரும் ஸ்ரீனி,
    பழையபாடலில் மனதைகவரும் லதா,
    மலரின் கவிதைகள்,பெரியம்மாவின் படைப்புகள்,

    எனதருமை தங்கைகளின் அளவளாவல்கள்...
    அப்பப்பா,இத்துனையும் மறந்து இத்துனை நாள் ,
    எப்படித்தான் போக்கினேன் .....எனக்கும் அது
    புரியவில்லை,எப்படி என தெரியவில்லை,
    வந்துவிட்டேன் இன்று,நலமா அனைவரும்?
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    வாங்க தீபா, நலமா, நாங்கள் யாவரும் நலமே, எல்லோரும் சுகமே..உங்கள் மறுவருகை கவிதையை ரசித்தேன் வெகுவாக.
     
    Last edited: Mar 24, 2011
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    நலம் நலமறிய ஆவல் தீபா. வாங்க வந்து கலக்குங்க :cheers

    காரிகை தூரிகையால் தீட்டிய படைப்புகளை எங்களுக்கும் காண்பித்தால் பேருவகை அடைவோம் :)
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வருக வருக மதுரை மாநகர மங்கையே,
    வெள்ளமாய் பாயட்டும் கவிதைகள் கங்கையாய்,

    கல் மனசு தான் இங்கு வராமல் இருந்ததில் தெரிந்தது,
    கல்லுக்குள் கசியும் ஈரமென வந்ததும் தெரிந்தது, புரிந்தது.

    எடக்கு மடக்கு செய்தால் இங்கு எனை மடக்கி மடயனாக்க,
    பலர் உண்டு - நீங்கள் மட்டுமே இல்லாதது குறை, அதுவும் தீர்ந்தது இப்போது.

    வருக வருக தீபா. தூங்கா நகரத்தில் இருந்தும் தூங்கி விட்டீர்களே?
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாங்க அக்கா எப்படி இருக்கீங்க?? எப்படி இருக்கு உங்க கை வேலைகள் எல்லாம்??? :):) மறவாது இருந்து, ஓயாத வேலைகளின் பின் இங்கே அழகு கவிதையில் அளவலாவியதில் மகிழ்ச்சி :):)
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    நாங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறோம்!! அருமையான கவியின் மூலம் மீண்டும் தியில் எழுந்து விட்டீர்கள்!!! வருக வருக!! என்னையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி!!:hiya
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த பெரியம்மாவை மறக்காமல் இருந்ததற்கு நன்றி தீபா.கிருஷ்ணனின் லீலைகள் காண மிக்க ஆவலுடன் இருக்கிறோம்.மிக பெரிய இடைவெளியை ஈடு செய்ய கவிதைகளை அள்ளி கொட்டுங்கள்.
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    latha,
    thanks for your reply.
    thanks for your invitation.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தூரிகை தந்த ஓவியங்கள் விரைவில் அரங்கேறும்.
    நன்றி அபி உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு.
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female

    தூங்கவில்லை,துங்காமல்,தூரிகை தூக்கியதன் பலன்.
    இதோ வந்துட்டேன்.....................
     
    Last edited: Mar 26, 2011

Share This Page