1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்னையரால் கேட்க முடிவதில்லை!

Discussion in 'Regional Poetry' started by malarvizhi, Apr 26, 2011.

  1. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    உதடு சுழித்து
    உடல் முறுக்கி
    ஆரோக்கியத்தை
    அறிவிக்கும் குழந்தைகளின்
    முதல் அழுகுரலை…இன்றைய
    அன்னையரால் கேட்க முடிவதில்லை!
    -

    தாயையும் சேயையும்
    தனித் தனி அறைகளில்
    பிரித்து போடுகிறது நவீன
    மருத்துவ உலகம்
    -
    குழந்தையை குளிப்பாட்டி..
    பவுடர் பூசி பொட்டிட்டு
    அழகு பார்த்து ரசிப்பது
    பணிப் பெண்ணின் கடமைகளில்
    ஒன்றாகி போனது..!
    -
    இன்று மழலையின் குறும்பும்
    குதூகலுமும்
    பாலர் பள்ளியின்
    சுவற்றுக்குள் சுருங்கிப் போனது..!
    -
    வேலைக்காரியின்
    வேக அதட்டலில்
    குழந்தையின் சுட்டித்தனம்
    சுறுசுறுப்புடன் சேர்ந்து
    மன வளர்ச்சியும்
    அடங்கிப் போச்சு!
    -
    நாகரிக உலகின்
    நகர வாழ்க்கை
    நசுக்கிப் போட்டது
    அன்னையின் உறவை!
    -
    அவசர யுகத்தில்
    சொந்தங்கள்
    தொலைந்து போனது போல்…
    நாளைய குழந்தைகளும்
    அன்னையின் அன்பை
    அறியாமலே போயிடுமோ..!

    =========================

    >ஒதியக்காடு அழகிரிவேல்
    நன்றி; தமிழ்முரசு 30-1-11
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    குழந்தையை
    அன்னை அவள்
    வயிற்றை அமுக்கி
    எடுத்த
    காலம் போய்
    வயிற்றை நோண்டி
    எடுக்கும்
    காலம் இது

    கவிதை நன்று .......பகிர்ந்தமைக்கு நன்றி
     

Share This Page