1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அனுமதி - கெட்ட பசங்களுக்கு மட்டும்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Aug 30, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்னை தொல்லை செய்து என் எல்லை மீற வைத்த ரோசாவுக்கு..... இந்த வரிகள்

    அவள் :

    இமை மூடி இதயம்
    திறக்கும் மந்திரம்
    உன் இதழ் மட்டும்
    அறிந்த தந்திரம்

    அவன் :

    மந்திரம் செய்யும் மாயக்காரி
    இரு வரி இதழில் நீ செய்யும்
    மாயங்கள் எண்ணிலடங்கா..
    அதை எண்ணத் துவங்கினால்
    சுகம் சொல்லிலடங்கா...



    அவள் :

    மகுடி வாசித்தால் தான்
    பாம்பு ஆடுமாம் - இதோ
    உன் ஈர இதழ்களின்
    வாசிப்பிலே வசமின்றி
    ஆடுகிறேன் நான்

    அவன் :

    எதன் மீதும் ஆசையில்லை
    எனக்கு.. உன் இதழ் தவிர
    நல்ல பூசையில்லை எனக்கு
    இதழ் வரியில் கவி படிக்க
    என்ன மறுப்பு???



    அவள்:

    நீ சமைத்ததை நான் சுவைக்க
    நான் சுவைத்ததை நீ சுவைக்க
    சுவையாய் அந்த இதழ் வழி
    பரிமாற்றம்... இடம் மாறியது
    பதார்த்தமா?? இது நடந்தது
    எதார்த்தமா...

    அவன் :

    இடம் மாறியதில் என் இதயம்
    தடம் மாறியது.. இதழ் ஈரத்தில்
    தடயமும் மாறியது.. நான் பேச
    வந்த விடயமும் மாறியது



    அவள் :

    உறக்கத்தில் பிடியிலும்
    உன் கையணைப்பில் நான்
    என் இதழ் மட்டும் ஏனோ
    உன் இதழ் அனைப்பின்றி
    அனாதையாய்....

    அவன் :

    உறங்கும் உன் அதரங்கள்
    எனக்கு தேன் தரும்
    மலரின் மகரந்தங்கள்
    உறக்கம் கலைத்தால்
    உதைக்க வருவாயோ
    என சிறு அச்சம்


    ஜே வீ... அனுமதி கெட்ட பசங்களுக்கு-ன்னு சொன்னதுனாலே நீங்க இங்கே வருவீங்க-ன்னு தெரியும்:)... உங்க 5000 th பதிப்பின் பாதிப்பில் இந்த பரிமாற்றங்கள். அனுமதியின்றி உங்க பாணியை கையாண்டமைக்கு மன்னிப்பை வேண்டும் நான். :hide:
     
    Last edited: Aug 30, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அய்யய்யோ கண்ண கட்டுதே.... :drowning

    இங்கு காப்பாத்துவார் யாரும் இல்லையா? :drowning

    கடைசியில பழியும் என் மேலயா?

    பாவம் ஓரிடம், பழி ஓரிடம்....
     
    Last edited: Aug 30, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எழுதினது மட்டும் தான் நான். :)என்னை இப்படி எழுதத் தூண்டின மகராசி வருவா இன்னும் பத்து நிமிஷத்துல... :rant:rant

    ஆனாலும் கொஞ்சம் ஓவராத்தான் போய்டிச்சோ??? :hide:
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Format thaane sonne.... :spin. Ithukkuthaan sariyaa tamil padikkaatha pasanga kooda serak koodaathundrathu...:rant:rant
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    format sonnengalao.....padameduththu solluveengalo....

    aanaa yen paer vandhuchchaa illiyaa?

    ithu maathiri sothanai yellaam yeththana paaththiruppom. summaa bayandha maathiri oru acting. :rotfl
     
    Last edited: Aug 30, 2010
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Unga per ippadiyaavathu vanthatennu santhosap padunga... :)

    Ungakitta starting ellaam nallaaththaan irukku.. aanaa finishing sari illaiye...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கன்னங்களோடு பேசி விட்டு
    நீ கண் அயர்ந்து நிற்கையில்
    என் தினவெடுத்த கல்கண்டு அதரம்
    திமிராய் உன்னை பார்த்து கண் சிமிட்ட
    வீரனாய் வந்து வேகத் தடை தாண்டி
    பரபரத்து முன்னேறி செல்கையில்
    உன் எந்திர மந்திரத்தால்
    திமிறிய என் அதரத்தின் திமிர் அடக்கி
    என் இதழ் சிவந்து நனையக் கொடுத்த
    இலக்கிய முத்தம்.......
    அரங்கேற என் அச்சம் அச்சானது
    மறு பதிப்பாய் உன் இதழில் ...
    அப்பப்போ சிலு.... சிலு .....

    கண்கள் மின்னுகின்றன
    இதழ்கள் துடிக்கின்றன
    முகம் சிவந்து கறுக்கிறது
    மீண்டும் ஒரு
    முத்தமழை வெடி...க்....க....
    என் நாணம் நழுவிக் கொண்டே போக
    முத்தங்கள் பெருகிக் கொண்டே போக ...
    இப்பப்போ சுடச் சுட......

    இதன் மறு பாதி என் வரிகளில்.....விரைவில் .....

    என் பேரை காப்பாற்ற வந்த அருந்தேவியே
    என் ஆராந்தேவியே ..அருமை உன் முத்த (மொத்த) விவகாரம் :bowdown
     
    Last edited: Aug 30, 2010
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உத்தரவின்றி உள்ளே நுழைந்த காதல்,
    அனுமதி கேட்காமல் இதயம் களவாண்ட
    கவிதை வரிகள், அருமை வேணி...:thumbsup:thumbsup:thumbsup
    கெட்ட பசங்களுக்கு மட்டும் தான் என்பதால் நான் இனி இங்கு வர முடியாது செய்துவிட்டீர்களே....:spin:spin:spin
     
  9. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi Veni,

    Super unga kavithai...ketta pasangalukku mattum anumathinnu pottuteengale.:rotfl.

    eppadi ippdi ellam karpanai panreenga...pambu aadum aattam pol oru aattamnu appadinnu ellam.:thumbsup:thumbsup:thumbsup
     
  10. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nice veni .

    அருமையான கவிதை வேணி

    உங்கள் கற்பனை அருமை,
    அதைவிட உங்கள் எழுது அருமை
    அதைவிட உங்கள் கவிதை அருமை

    ana veni nan inga vanduten ndrathukaga ena keta pasanga listla sethrathinga?

    enna nan romba ketavatsk
     
    Last edited: Aug 30, 2010

Share This Page