1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்த ஒரு இரவில்!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Dec 27, 2012.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Suganya :)
     
    1 person likes this.
  2. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    செம செம ... :)
    சந்தானம் காமெடி மாதிரி கதையோட சேர்ந்து வர டைலாக்ஸ் ரொம்ப சூப்பர்


    உங்க ஹாஸ்டல் இலக்கிய ரசனைய கண்டு நான் வியக்கிறேன் !!
    ஆக, காணாம போனது செல் போன்ஸ் !! இத போல ஒரு இன்சிடன்ட் எனக்கு தெரிஞ்சு ஒரு காலேஜ்ல நடந்துருக்கு.. வைடிங் பார் கிளைமாக்ஸ்.. (உங்க பீட்டர் இந்து எபக்ட் தான்)
     
    2 people like this.
  3. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Rajeni
    story romba interesting ah poguthu pa... :thumbsup
    Thriller+Comedy+Hoste life kalatta+Novels....superbbbbbbbbb :2thumbsup:
    novel-iku sandai poduradhu..hostel-la host patri pesi...adthai check night full ah thooingama irrukaradhu....hmmm unga story read pannum podhu ennoda UG hostel dhaan niyabakam varudhu..romba miss pannuran :cry:
    waiting for next pa :coffee
     
  4. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Very Interesting...nice scenes in hostel life. Good to read !
     
  5. Manii

    Manii New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Inba: Vaera ena Charger mm saythu aduthu poitagala...?????

    Kadhaien naayagi Inba vai parthu sirika...!!!!! Indhu eruvariyum parthu muraithal.....

    appo anga oru Song:

    enadhu kaiyennai adippadhuvoa enadhu viral kannai keduppadhuvoa
    azhudhu ariyaadha en kangal aaru kulamaaga maaruvadhoa
    aenenru kaetkavum naadhiyillai aezhaiyin needhikkuk kannundu
    paarvaiyillai
    pasuvinaip paambenru saatchisolla mudiyum kaambinil visham enna
    karakkavaa mudiyum (2)
    udambil vazhindhoadum udhiram unaikkaetkum
    naan seydha paavam enna (2):drowning
     
  6. Manii

    Manii New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Hi Rajeni,

    Nice...:) The way you have narrated the story was Very Nice....:) I Liked it very Much....:)

    I have read the story, the suspense you created and the way ended up every part was amazing...:) even though it was a funny at the end, u made the readers to wait to know that...:) These is the Class of the Good Story Narrator [Writter]...:) Superb...:)

    Great...:) Keep going dude...:) Waiting for the next Part...:)

    Thanks for this wonderful Narration Rajeni...:)
     
    Last edited: Jan 9, 2013
  7. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Very funny + suspense story..Keep going..
     
  8. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில் – 5​


    உண்மையில் என்ன தான் நடந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டுமே. இந்து சொல்லத்துவங்கினாள்,

    “கவிதாவ கத்தி வச்சு மிரட்டி கீழ கூடிட்டு வந்திருக்கான்”

    “என்னது?!! அப்போ கவி அவன தூரத்துல பாத்து கத்தலயா??”

    “ நோ! ஆக்சுவலி, லாக் பண்ணாத ரூம்ஸ்ல கவி ரூமும் ஒன்னு.. அவன் மொபைஸ் எடுக்கும் போது, ஷீ டர்ன்ட் இன் ஹெர் ஸ்லீப். முளிச்சுட்டானு நெனச்சு கழுத்துல கத்தி வச்சுட்டான்!

    அவ அப்பதான் முழிச்சிருக்கா.. அவள எழுப்பி வெளிய கூட்டிட்டு வந்து செயின கலட்டி வாங்கிகிட்டு, கீழ வரைக்கும் அவள கூட்டிடே வந்திருக்கான் தப்பிக்க. சென்டர்ல இருக்க ஓப்பன் ஏரியாக்கு வந்தவுடனே அவன் அசந்த நேரம் கவி அவன் கையை கடிச்சிட்டு உள்ள ஓடிவந்துட்டே கத்திருக்கா.. கடிச்சு தள்ளும் போது கத்தி இவ கைல கொஞ்சம் கிழிச்சிடுச்சு!”

    “எங்க”

    “இங்க” புறங்கையை தொட்டுக்காட்டினாள்.

    “தைரியமா ஆக்ட் பண்ணிருக்கால்ல..”

    “இன்ஃபக்ட், அவன் பைப் பிடிச்சு மேல எறத்துக்குள்ள பிடிச்சுடலாம்னு கத்திருக்கா”

    கதவை திறக்க யோசித்தது நினைவு வந்தது. கிட்டத்தட்ட அனைவர் முகங்களிலும் சில கணங்கள் இந்த சிந்தனை தான் ஓடியது என்று சொல்லலாம்.

    “போலிஸ்க்கு இன்ஃபொர்ம் பண்ணியாச்சா?”

    “ப்ரின்ஸி இன்ஃபொர்ம் பண்ணிட்டு வந்துட்டிருக்கார்”

    இப்போது நன்றாக விடிந்திருக்க சோதனையெல்லாம் முடிந்து உள்ளே செல்லலாம் என உத்தரவு வந்தது. ப்ரின்ஸியும் வந்துருந்தார். முகத்தில் கவலையுடன் க்ளெர்க் அறையில் கவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். வலது கையில் ஈரத்துணி சுற்றியிருந்தது. முகம் அழுது வீங்கியிருக்க இன்னும் அழுது கொண்டிருந்தாள். சிறிது அலட்சியத்துடன் தலை நிமிர்ந்து அவள் வகுப்புக்கு செல்வது நினைவு வந்தது. தைரியமான பெண். தன்னால் முடிந்தவரை நன்றாகவே சமாளித்திருக்கிறாள். அவள் தந்தைக்கு அழைத்து விவரம் சொல்லப்பட்டது.

    சௌமி அன் கோவுடன் அறைக்கு வந்தோம். மூன்றாம் ஆண்டு மாணவி இன்னொருத்தி அழுதுகொண்டே அறையை கடந்தாள். காரணம் தெரிந்தாக வேண்டுமே நமக்கு! இந்துவை அனுகினோம்.

    “அவளோடது காஸ்ட்லி மொபைலாம் அதுல 3000 ருப்பீஸ் பேலன்ஸ் வேற இருந்துச்சாம்”

    “அந்த பேலன்ஸ்காகவே ரெண்டு சாத்து சாத்தனும்” என்றேன் அதன் விழைவு தெரியாமல்.

    காலையிலேயே எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிஸ்ஸுமாக முதல் தகவலை சேகரித்துச்செல்ல, மதியம் எ.சி.பி வந்திருப்பதாக அனைத்து ரெப்புகளுக்கும் அழைப்பு வந்தது. அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். நினைவில் ஆர்வமாக சென்று நாற்பதுகளில் ஒருவரை கண்டு ஏமந்தோம்.

    விடுதியில் தங்கியிருக்கும் அனைவத்து மாணவிகளின் கைப்பேசி எண்களும் அவர்கள் அடிக்கடி தொடர்புக்கொள்ளும் உறவினர் எண்களும் வேண்டும் என்றார். லிஸ்ட் எடுக்கும் பணியில் இறங்கினோம். ஏ.சி. கேட்ட லிஸ்டை அறிந்து விடுதுயே கலங்கிப்போனது!

    “யார் யார்க்கு பேசினோம்னு ட்ரேஸ் பண்ணுவாங்களா?”

    “மெஸேஜ் கூடவா ட்ரேஸ் பண்ணுவாங்க?”

    என்பன போன்ற கேள்விகளை சமாளித்து லிஸ்டை முடித்து ஏ.சி.யிடம் கொடுத்து, எங்கள் பங்கிற்கு அவரிடம் கேள்விகளை கேட்டோம்.

    “இந்த லிஸ்ட் எதுக்கு ஸார்?”

    “லாஸ்ட் ஒன் வீக் கால்ஸ் ட்ரேஸ் பண்ண போறதா சொன்னிங்களே.. அப்படினா.. ஸ்டூடென்ட்ஸ சந்தேகப்பட்றிங்களா?”

    “அவன் திருடின மொபைல்ஸ் எதையும் யூஸ் பண்ணலைன்னா?”

    கேள்விகளை வாங்கிக்கொண்டு பொதுவாக விளக்கினார், “ஃபர்ஸ்ட், ஸ்டூடென்ட்ஸ சந்தேகப்பட்றோம்னு மொத்தமா சொல்ல முடியாது பட் அந்த ஆப்சனையும் செக் பண்ணிதான் ஆகனும். எதுவும் கன்ஃபிர்ம் ஆகாம யாரையும் எங்கொயர் பண்ணமாட்டோம். மிஸ்ஸிங்க் மொபைல்ஸ் எதாவது ஒன்ன யூஸ் பண்ணா ஈஸியா லொக்கேட் பண்ணிடலாம் தான், இல்லேனாலும் இந்த மாதிரி ராபரி எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். வீ வில் கெட் ஹிம்.” என்று முடித்து கவிதாவிடம் அவன் அடையாளங்களை கேட்டுக்கொண்டு புறப்பட்டார்.

    மணி மதியம் ஒன்றை தாண்டியிருக்க தட்டுகளை எடுத்துக்கொண்டு மெஸ்ஸுக்கு சென்றோம். மெஸ் நேற்று இரவுக்கு நேர் மாறாக கனத்த அமைதியை பூசிக்கொண்டிருந்தது. அலைபேசிகளை இழந்து உண்ணாவிரதம் இருக்கும் தோழிகளுக்கு உணவை அறைக்கு எடுத்துச்சென்றனர் சக மாணவிகள். ஆங்காங்கே அமைந்திருந்தோர் நேற்றைய இரவைப் பற்றி தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர்.

    “பிடிச்சிடுவாங்களா இந்து?”

    “ஹோப் ஸோ”

    “பிடிச்சதும் அவன கூட்டிட்டு வரதாவா ஏ.ஸி. சொன்னாரு?”

    “ஆமா.. டெமோ பண்ண வைக்க போறாராம்”

    “அவன் என்ன வாக்கம் க்ளினரா விக்கறான் டெமோ பண்ண?”

    “நம்ப அப்ப தான் நம்புவோம்னு நினச்சிருப்பாரு”

    “பிடிச்சா சரி”

    மறுநாள் காலை விடிந்தும் விடியாததுமாக 8 மணிக்கெல்லாம் ப்ரின்ஸியும் ஏ.ஸி.யும் வந்து ரெப்புகளை அழைத்தனர். ஏ.ஸி. அமர்ந்திருக்க ப்ரின்ஸி அமைதியற்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். எங்களை கண்டவுடன்,

    "என்னம்மா நடக்குது இங்க?” என்றார் குரலில் கோபமும் அதிர்ச்சியும் தொனிக்க. கையில் கட்டாக காகிதங்கள் இருந்தன. எதை கேட்கிறார் என்று புரியாமல் விழித்தோம் நால்வரும்.'

    (தொடரும்)
     
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில் - 6​


    ஏ.ஸி. மௌனத்தை கைவிட்டு, “நீங்க குடுத்த லிஸ்ட வச்சு அவனை ட்ரேஸ் ப்ண்ணமுடியும்ற நம்பிக்கையே எனக்கு குறைஞ்சிருச்சுமா” என்றார்.

    “அத தான நம்ப குடுக்கும் போதே சொன்னோம்” சௌமி என் காதருகில் சொன்னாள்.

    எங்கள் அறியாமையை போக்க என்னியது போல ப்ரின்ஸி சௌமியிடம் அந்த காகிதங்களை கொடுத்து, “நீங்களே பாருங்க.. எத்தன பேர் ‘அனானிமஸ்’ நம்பர்ஸ்க்கு கால் பண்ணிருக்காங்கனு. ஆல்மோஸ்ட் 75% ஒஃப் தி ஹாஸ்டல். கால் டியூரேஸன்ஸ பாருங்க.. 4 டு 5 ஹவர்ஸ் எத்தன கால்ஸ் பொயிருக்கு!! என்னம்மா இதெல்லாம்..உங்க கர்ல்ஸ் என்னமா பண்றாங்க?” கோபமாய் துவங்கி ஆதங்கமாய் முடித்தார்.

    இது எங்கே கொண்டுவிடுமோ என்ற பயம் அனைவர் முகங்களிலும் ஒட்டிக்கொண்டது. முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு கேட்டேன், “நெக்ஸ்ட் இந்த நம்பர்ஸ் ட்ரேஸ் பண்ண போறிங்களா ஸார்?”

    “டென் டு ட்வென்டி நம்பர்ஸ்னா அத செஞ்சுப்பாக்கலாம். இந்த லிஸ்ட பண்றது வேஸ்ட். இதுல அவன் இருக்க சான்ஸஸும் கம்மி. ஏன்னா மோஸ்ட் ஆஃப் தி நம்பர்ஸ் கேம்பஸ்குள்ள தானே இருக்கும்?” என்றார் ஏ.ஸி. கடைசி வரியில் குரலை தாழ்த்திக்கொண்டு கண்களில் கேலியுடன்.

    ப்ரின்ஸி எங்களைப் பார்த்து, “ஆஸ் எ வார்டன், இட்ஸ் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி டு டேக் செர்டைன் டெசிஸன்ஸ். பட்... லெட்ஸ் ஃபினிஷ் திஸ் கேஸ் பிஃபொர் தட்” என்று ஃபைனல் டச் கொடுக்க இருவரும் புறப்பட்டனர்.

    “இவரு எதுக்கு இப்போ இவ்வளவ்ய் டென்ஸன் ஆகறாரு? இவரு தெரிஞ்சு தான் கோவபட்றாரா இல்ல தெரியாம செய்யறாரா? எனவோ புதுசா எதையோ கண்டுபிடிச்ச மாதிரி சீன் எறக்குறாரே”

    “அதுல பாரு சௌமி அவரு லிஸ்ட உன்னோட கைல குடுத்தாரு பாரு அதான் ஹைலைட்..”

    “அது யென் சௌமி உன்ன்ன்ன பாத்து அந்த கேள்வி கேட்டாரு?”

    “நிறுத்துறிங்களா.. நானே கொஞ்ச நேரந்தான் பேசறேன்..!”

    அப்டியாஆஆஆ...”

    அடுத்த இரெண்டு நாட்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில், விடுதியில் சில மாற்றங்களை காணமுடிந்தது. மெஸ்ஸுக்கு என்றாலும் வேறு “அவசர வேலை”யாக இருந்தாலும் நான்கைந்து பேர் சேர்ந்து கூட்டமாகவே சென்றனர். இரவுகளில் காரிடர்களும் மாடிப்படி சந்துகளும் வெறிச்சோடியிருந்தது. காதலோ மோதலோ அறைக்குள்ளேயே நடந்தது. எவ்வளவு நேரமானாலும் அறைக்குள்ளேயே படிக்குமாறு கூறினாள் இன்பா (பாசக்காரப்புள்ள!). முக்கியமாக அனைத்து அறைகளும் இரவு 10 மணிக்கெல்லாம் உள்ளே தாளிடப்பட்டன.

    சனி ஞாயிறு உற்சாகமில்லாமல் கழிந்தது. திங்களன்று வழக்கம் போல் வகுப்புக்கு கிளம்பி வெளியே வர, ப்ரின்ஸி உற்சாகமாக உள்ளே நுழைந்தார்.
    என்னையும் சௌமியையும் கண்டவுடன், “பிடிச்சாசுமா உங்க திருடன” என்றார். மற்ற ரெப்ஸும் வர விவரம் சொல்ல துவங்கினார்.

    “அவனை ஓசூர் பக்கதுல ஒரு கிராமத்துல பிடிச்சிருக்காங்க. ஒன் வீக் கலிச்சு சில மொபைல்ஸ்ச ஆன் பண்ணிருக்கான். உங்க கர்ல்ஸ் ஒருத்தரோட மொபைல ஹை பேலன்ஸ் இருந்திருக்கு. அதுல டெம்ப்ட் ஆகி யூஸ் பண்ணிருக்கான். ட்ரேஸ் பண்ணியாச்சு”

    அழுதுகொண்டே சென்ற ரம்யா நினைவுக்கு வர, “எல்லாம் நன்மைக்கே” என்றேன்.

    "சப்ப திருடனா இருக்கான்" என்றாள் இன்பா

    ப்ரின்ஸி தொடர்ந்து, “லோக்கல் போலிஸ் அவன அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். ஏ.ஸி. அவன இனிஷியல் ஃபார்மாலிடிஸ் முடிந்ததும் டெமோக்கு கூட்டிட்டு வரதா சொன்னார்” என்றார்.

    மேலும் இரெண்டு நாட்கள் சென்றபின் அவனை அழைத்து வந்தனர். ஏதோ வீரப்பனை கூட்டிவந்திருப்பது போலவும் அவன் எங்கள் முகத்தை பார்த்துக்கொண்டால் பிணைகைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுவான் போலவும் அனைவரும் உள்ளே ஓடிவந்து கரிடரில் காய்ந்த துணிகளுக்கு பின்னால் பாதி முகத்தை மறைத்துக்கொண்டு பார்த்தனர். இன்பா என்னையும் காய்ந்த அவள் துப்பட்டவிற்கு பின்னால் மறைத்தாள். கண்களை மட்டும் வெளியே செலுத்தி பார்த்தேன்.

    அவனா?! போலீஸ்க்காரர்களுக்கு நடுவே நடந்து வரும் அந்த அவனா திருடன்?! ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதும் இவனே தானா? ஒரு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமா? இல்லை அதுபோல தோற்றமா? - தன்னை இத்தனைப்பேர் வேடிக்கை பார்க்க அவமானத்தால் தலையை தொங்கவிட்டுக்கொண்டு வந்தவனை பார்த்துவுடன் என் மனதில் தோன்றியவை இவை தான்.

    “இன்பா.. என்ன வயசிருக்கும் இவனுக்கு? இவனுக்கு திருட வேண்டிய அவசியமனென்ன?”

    “ஏன் ‘வானத்தைப் போல’ ஸ்டைல்ல வேலப்போட்டு குடுக்க போறியா..? இங்க என்ன விக்ரமன் படமா எடுக்கறாங்க..? ஓவரா ஃபீல் பண்றா.. வாடி உள்ள!”

    (முற்றும்)
     
    Sweetynila, Caide, ridgemma and 4 others like this.
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நன்றி JAGA!!



    இப்போ நீங்க வியக்கறிங்களா இல்ல கலாய்க்கிறிங்களானு தெரியலயே :hide:

    இன்சிடென்ட கேள்விப்பட்ருக்கிங்களா?!!!! I C :)
     
    1 person likes this.

Share This Page