1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்த ஒரு இரவில்!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Dec 27, 2012.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அனைவருக்கும் வணக்கம்!

    என்னுடைய முதல் கதை முயற்சியை இங்கே பதித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
    முழு கதையையும் ஒரே பதிவில் கொடுக்க முடியுமா என தெரியவில்லை.. ஆகையால் 4 அல்லது 5 பதிவுகள் கொண்ட குட்டி தொடர்க்கதையாக பதிகிறேன்.
    கதையை பொருத்த மட்டில் இது ஒரு உண்மை நிகழ்வு.

    உங்கள் மேலான கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

    நன்றி!

    பின்குறிப்பு: தலைப்பை பார்த்து எந்த முடிவுக்கும் வரவேண்டாம்!
     
    Caide, accool and suganyarangasam like this.
    Loading...

  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த ஒரு இரவில்! - 1

    எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல், மின்னணுவியல் என எல்லா இயல்கலும் தனி தனி கட்டிடங்களாக வீற்றிருக்க, சற்று தள்ளி நின்ற பெண்கள் விடுதி இரவு 8:30 மணிக்கு உச்ச ஸ்தாதியில் இயங்கி கொண்டிருந்தது.
    அனைத்து பொறியியல்களும் ஒன்றாக கூடி பொரியலிலும் சாம்பாரிலும் குறை கண்டு பிடித்தனர். “அக்கா இந்த கிலியர அப்பளம் எங்க வாங்குறிங்க?” – மெஸில் வேலை செய்யும் பெண்ணிடம் ரேஷ்மி கேட்க, “போ கண்ணு” என்று அவர் வெட்க பட்டு அதை பாராட்டாக்கினார். குட்டி குட்டி கூட்டங்களாக மெஸ் அறையே கலைகட்டி இருக்க, அதில் அதிகம் சத்தமிட்டு கொண்டிருந்த ஒரு கோஷ்டியின் நடுவில் இருந்த என்னை, வழக்கம் போல் நடக்கும் கலாட்டாவில் பங்கெடுக்க விடாமல், டான் ப்ரௌன் இம்ஸித்துக்கொண்டிருந்தார். Angels and Demons-ல் கார்டினால்களை கடத்தி கொல்வது யாராக இருக்கும் என்பதிலேயே என் 60% மூளை ஆழ்ந்திருந்தது.
    “இதெல்லாம் ரொம்ப ஒவெர்” இன்பா என் அருகில் வந்து சொன்னாள். இன்பா என்னோடு ஒரே அறையில் இருக்கும் என் ஆருயிர் தோழி. இன்பத்திலும் துன்பத்திலும் என் உடன் இருப்பவள். “என்ன ரீ.. என்னாச்சு?” என்றேன்.
    “என்னவா? எரும இவ்வளோ நேரம் நான் சொன்னதே உன் காதுல ஏறலயா?” என்று என் முதுகில் ஒன்று வைத்தாள்.
    “என்ன உன்னோட பெர்ஃபார்மன்சே சரி இல்லயே.. மூட் ஔட்டா?”என்று சரண்யா முடிப்பதற்குள், “ஆமா மூட் ஔட் ஒன்னு தான் கொரச்சல்... தேவியார் புக்ல மூழ்கி இருகாங்க” என்று இன்னொரு அடி வைத்தாள் இன்பா.
    கிடைத்தது ஒரு சாக்கு என்று கோபமாக எழுந்து அறைக்கு சென்றேன். என்னவெல்லாம் செய்ய வெண்டி இருக்கு, ஒரு புக் படிக்க! என்று மீண்டும் A & D –ல் மூழ்கினேன்.
    ஒரு வழியாக உணவு முடிந்து, விடுதி அதன் வழக்கமான அடுத்த கோலம் பூண்டது. சிஸ்டம்கள் எல்லாம் உயிர் பெற, ஒரு அறையில் கரீனா கபூர் ஷஹித் கபூரை வம்பிழுக்க, மற்றொன்றில் ஷாருக் கஜொலை சீண்டி கொண்டிருந்தார். என் மானிடர் திரையில் ஹெக்டர்(Hector)-உம் அக்கிலஸும் (Achilles) ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். அதை ஆறு பேர் பார்த்து கொண்டிருந்தோம் (A & D –லிருந்து எப்படி Troy-க்கு வந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு தானே இன்பா இருப்பதே..) அக்கிலஸின் குதிங்காலில் அம்பு பாய்ந்து எல்லாம் முடியும் பொழுது மணி நள்ளிரவு 12:00 ஐ தொட்டிருந்தது. சிஸ்டம்கள் அடங்கி அலைபேசிகள் உயிர் பெற, மாடிப்படி சந்துகளிலும் காரிடர்களிலும் காதல் கசிந்தது.
    அப்பாடா என்று மீண்டும் A & D –ஐ தொட்டேன். விளக்கை அணைத்தால் தான் ஆயிற்று என்றாள். மீண்டும் இன்பா தான்! பல நேரங்களில் நான் அவளை படுத்துவதற்கு இப்படி சில நேரங்களில் பழிவாங்குவாள். “உன்னோடெல்லாம் மனுஷி இருப்பாளா..” என்று முணு முணுத்து கொண்டு காரிடருக்கு வந்தேன்.
    எங்களுடைய அறைக்கு பக்கத்தில் மெஸையும் எங்கள் அறையையும் பிரிதுக்கொண்டு ஒரு குட்டிச் சுவர் இருக்கும். அதில் சென்று A&Dயுடன் அமர்ந்தேன். ரபர்ட் லாங்க்டனுடன் ரோமின் வீதி வீதியாக, சர்ச் சர்சாக சுற்றி முடித்து நிமிர்ந்த போது மணி 3:30 -ஐ தாண்டியிருந்தது. அலைபேசிகளும் அதில் காதலித்தோரும் கூட உறங்கி இருக்க, மிரட்டும் நிசப்தத்தில், என் அறையின் மின்விசிறி மட்டும் அச்சுறுத்தும் வகையில் சத்தமிட்டு கொண்டிருந்தது.
    த்ரில்லெர் படித்த பாதிப்பு வேறு சேர்ந்துகொள்ள, வேகமாக அறைக்கு சென்று இன்பா பக்கதில் படுத்து கொண்டேன். படி படியாக நான் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்க, அப்போது தான் அந்த நடுங்க வைக்கும் ஒலி கேட்டது!!

    (தொடரும்)
     
    Caide, Deepu04, iswaryadevi and 3 others like this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very interesting start Rajeni. Will look forward to reading other parts.
    Thanks for sharing. -rgs
     
    1 person likes this.
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nice start rajini

    keep posting
     
    1 person likes this.
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi rajeni..
    nice start...

    nadungra madhiri enna satham kettudhu???
     
    1 person likes this.
  6. kannas

    kannas Bronze IL'ite

    Messages:
    85
    Likes Received:
    47
    Trophy Points:
    38
    Gender:
    Female
    good start... how are the episodes planned ranjani? daily release or weekly release...?
     
    1 person likes this.
  7. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Super thriller start ... Awaiting for the next one.
     
    1 person likes this.
  8. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    enna sathamnu nalaiku solidren..
     
    1 person likes this.
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    thanks Kannas! Daily.. next update will be released tomorrow.
     
  10. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    thrilling start. Keep going Rajeni....
     
    1 person likes this.

Share This Page