1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்தோ பரிதாபம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 16, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்தோ பரிதாபம்

    நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
    இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

    வேண்டாததை வேண்டி நான் ஒரு புறமிருக்க,
    எனக்குத் தராமல், என்னருகே வீசுகிராயே ஒ மானிடா.

    நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
    இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

    நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
    மாநகராட்சியும், இந்த மானிடர்களும் எனை அழுக்காக்கி விட்டனரே.

    நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
    இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...


    நான் அழுக்கானாலும், அழுக்கினை அகற்றி, ஊரை அழகாக்கத்தானே நான் பிறந்தேன்,
    எனை உபயோகிக்காமல், எனைச் சுற்றி அழுக்காக்குகிராயே ஒ மானிடா.

    நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
    இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...


    குப்பைக்கு ஏங்கி, ஒரு குப்பைத் தொட்டியின் ஏக்கப் பாடல் கேட்கிறதா ஒ மானிடா?
    குப்பையை அகற்றி, சுற்றத்தை சுகாதாரமாக்க, சுதாரிக்க கோரும் குரல் கேட்கிறதா ஒ மாநகராட்சியே?

    நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
    இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

    சுதாரித்து, சுற்றத்தை காப்போம், சுகாதாரத்தை காப்போம், சுகமான வாழ்வினை சுகித்திடுவோம், ஒ மானிடா.
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தலைப்பை அந்தோ பரிதாபம் என வைக்காமல், நெஞ்சு பொறுக்குதிலையே என்றே வைத்திருக்கலாம். ஆனாலும் அநியாயத்திற்கு அனைத்துமே உங்களிடமே வந்து புலம்புகின்றன. பல் துலக்கும் தூரிகை, இப்போது குப்பை தொட்டி, இன்னும் என்னென்ன வரப் போகிறதோ தெரியவில்லை. புலம்பல் தான் என்றாலும் அதன் கருத்தும், அதை சொன்ன வார்த்தைகளும் மிகவும் அருமை. கண்ணெதிரே கவனிப்பார் இன்றி அழுக்கடைந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி வந்தது. அவ்வளவு பொருமல்கள் உங்கள் கவிதையில்.

    வருங்கால வேகப் பந்து, மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் இந்த குப்பை தொட்டிக்கு பெரும் பங்கு உள்ளது. நீங்கள் கவனித்திருந்தால் தெரியும், குப்பைகள் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டி வீசுவார்கள், சும்மா அப்படியே சுத்தி சுத்தி வரும். இதில் ஒரு சிலர் அந்த கவரை கட்டாமல் விட்டு, குப்பைகள் அப்படியே மழை மாதிரி வழியெல்லாம் பரவும்.

    அது மட்டுமல்ல, வில் வித்தையாளர்களுக்கும் நல்ல களம் அமைத்து கொடுப்பது குப்பை தொட்டி தான். குறி வைத்து அடிப்பார்கள்.

    ஏதோ இது வந்த பிறகுதான், குப்பைகளை பக்கத்து வீட்டில் கொட்டாமல், இதன் பக்கத்தில் ஆவது கொட்டுகின்றனர்.

    சுற்றுப்புறம் காப்பது என்பது அவரவர் மனது வைத்தால் மட்டுமே முடியும், எனது தேசம், இது எனது மக்கள் வாழுமிடம், இதை நான் தூய்மையாக வைப்பேன் என்று ஒவ்வொரு குடிமகனும் நினைக்கும் போது தான் குப்பைகள் அற்ற தெருக்களை நாம் காண முடியும்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Talk about any thing, your perspective and method of approach is different.... I liked your lines.... antha nilai ketta manida kumbalil naan illai
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    என்னை பொலம்பல் பொன்னம்பலம் என்று அழைக்காமல் இருந்தால் சரி.

    சொல்றத பார்த்தா bcci ஆபீஸ், மற்றும் கிரிக்கெட்
    கோச்சிங் கேம்ப் எல்லாம், குப்பைத் தொட்டி அருகே
    வைக்கலாம் போல இருக்கு. :)

    நிறைய நல்ல ப்ளேயர்ஸ் கிடைப்பாங்க போல் இருக்கு.

    நாம் நினைத்தால் ஒழிய இதற்கு விடிவே இல்லை.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Sandhya.

    Namathu Nanbarkal Yaarumae Andha Kumbalai,
    Saarnthavarkalaaka Irukkavae Mudiyaathu.

    We are definitely social concious people.
     
  6. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Nat,

    அடடா குப்பைதொட்டி ரொம்பதான் பாவம் .........[​IMG]
    சுற்றம் சுகாதாரத்தை பேணி வளர்ப்போம் :)
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Yes that's the spirit.

    Let's reduce waste, recycle & conserve.

    Thanks Meera.
     
  8. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நகைச்சுவையா இருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமா இருக்கு...அதுவும் சென்னைல ரொம்ப மோசம்..எப்பவும் புழுதி தான்...அதுவும் சிலர் கொஞ்சமும் பொறுப்பில்லாம குப்பைத்தொட்டி பக்கத்துலையே இருக்கும், ஆனா கண்ட எடத்துல வீசுவாங்க.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கவிதை நல்லாருக்கு...:thumbsup அது இருந்துட்டு போகட்டும் விடுங்க... ஆரம்பித்தில் நீங்க நல்லாத்தான் இருந்துருக்கீங்க நட்ஸ்... அப்புறம் என்னாச்சு?? :coffeeஉங்களின் இந்த மாற்றத்துக்கு காரணம் யாரு நட்ஸ்? :crazy
     

Share This Page