1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அட்சய திருதியை 2

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, May 6, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை. இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் சிறப்புதான். அன்று, தான தர்மம், புதுக் கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம். இப்படிப்பட்ட அட்சய திருதியைப் பற்றி புராணக் கதைகள் பல உண்டு.

    ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின்
    நண்பர் குசேலர், ஒரு பிடி அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை
    சந்திக்கச் சென்றார். குசேலரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலை எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘அட்சயம்!’’ என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது; குசேலர் ‘குபேர சம்பத்து’ பெற்றார். குசேலருக்கு, கண்ணன் அருள் புரிந்தது அட்சயத் திருதியை திருநாள் ஆகும்.

    கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

    சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

    இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.

    அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

    ஸ்ரீபரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் இந்த அட்சய திருதியை திருநாளில்தான். அட்சய திருதியை அன்று ஏழைக்கு ஆடை தானம் அளித்தால் மறுபிறவியில் ராஜ வாழ்வு கிட்டும்.

    தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

    இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி?

    வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடியாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடு வேள்விகளிலும் மனதை செலுத்த முன்வரவேண்டும். தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை.
    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது போய் ஆடிக்கழிவு என்று ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை மக்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

    அட்சய திருதியை ஒட்டி நகை வாங்கினால் செல்வம் சேருமா?
    சென்ற ஆண்டு நகை வாங்கியவர்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

    தமிழகத்தில் இப்படி என்றால் மத்தியப் பிரதேச மக்கள் அதையும் தாண்டி ஒரு படி மேலே போய்விட்டார்கள். அட்சயத் திருதியை தினம் நகை வாங்க உகந்த நாள் என்று தமிழகத்தில் கருதப்படுவது போல, ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு அந்த நாள் வேறு எந்த நாளைக் காட்டிலும் சுபமுகூர்த்த நாள் என்கிற எண்ணம் அதிகம். "சரி திருமணம்தானே! நடக்கட்-டுமே, நல்லதுதானே!' என்கிறீர்களா? அதுதான் இல்லை. . அத்தனையும் "பால்ய விவாகம்' எனப்படும் குழந்தைத் திருமணங்-கள். பத்து வயது, ஏழு வயது, ஆறு வயது, ஏன் மூன்று வயதுக் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து மகிழ்கிறார்கள் அந்த மாநில மக்கள்.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Krishnamma,
    Nice to know the importance of this day....kuselar became a kuberan on this day...very nice to know that..
    But shocking to see the minor marriages in MP on this day...

    sriniketan
     

Share This Page