1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அஞ்சலிக்கு...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jan 4, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அறியாதவராய் அறிமுகமாகி
    பரஸ்பரம் நட்பைப் பரிமாறி
    நட்பென்பது அன்பாய் மாறி
    அறிந்தோம் நம்மை நாம்

    என் சொல்வேன் உன்னை நான்??
    மாதங்களில் மார்கழி ஆனாய்..
    சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்றாய்
    அன்பு கொண்டே என்னை வென்றாய்..

    புதியவர் என்றும், பழையவர் என்றும்
    காட்டவில்லை நீ ஈடுபாடு... அதுதான்
    உன்னை மற்றவரிடம் இருந்து தனித்து
    காட்டிய ஒரு வேறுபாடு

    ஆற்றல் பல உண்டு உன்னிடம், அதை
    செய்யும் வலுவும் உண்டு உன்னிடம்,
    செய்யும் குணம்(பொறுமை) இல்லையா?? இல்லை
    மனம்தான் இல்லையா??

    தடை தகர்த்து, உன் பயணம் நகரத்து...
    வெற்றி நீ தொட்டு விடும் தூரம்தான்


    ***********************************************************

    அஞ்சலி எனும் செல்லப் பெயர் கொண்டவள்
    (கல்லூரித் தோழிகளுக்கு...) என் தமக்கை அவள்,
    தங்கத் தாரகையாய் இங்கே வலம் வரும் லதா ராம் தான்
    இந்த வரிகளுக்கு உரியவர் :)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நேரம் இன்றி கொடுக்கிறேன் இந்த சிறு வரி!

    கண்டவுடன் உள்ளம் தைக்கும் முல்லையே
    நம்பிக்கையை நீ உணர்ந்தால்
    நாளும் உயர்வு உன்னுடன்.
    கவலை கொண்டு கலங்குவதை விட
    உறுதி கொண்டு தெளிவது மேல்.
    வானத்தை பாரடி தோழி
    பூமிக்கு குடை பிடிக்கிறது பார் தலைக்கு மேலே
    அதன்கீழ் எனக்காய் நானொருமுறை -
    உனக்காய் நீ ஒருமுறை வாழ்ந்து பார்ப்போமே வா

    அஞ்சிடாமல் அஞ்சலி நீ
    அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு!
    திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு!

    மீண்டும் மீண்டு வந்து இங்கே
    தாண்டும் உயரம் காண ஆவலாய் உள்ளோம்!!!!
     
    Last edited: Jan 4, 2011
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Latharam mai patri kavithai nalla ezhuthiirrukkai veni ....
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஆம் வேணி. சற்று நாட்களாக அவர் இங்கு வருவதில்லை போலும்.
    ஏதேனும் முக்கியமான அலுவல் காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்.
    உங்கள் அழகு வரிகளுக்காக அவர் வந்து விட்டால் மகிழ்ச்சி தான். -ஸ்ரீ
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வேணி அக்கா,

    லதா அக்காவிற்கான உங்களது வரிகள் நன்று. :)

    லதா அக்கா,

    தடைகள் பல வரும் அனைத்தையும் நம்பிக்கை கொண்டு வெல்லுங்கள். நண்பர்களாய், சகோதரிகளாய் எங்கள் துணை உங்களுக்கு உண்டு :thumbsup
    அட அஞ்சலியா உங்க பெட்-நேம் :)
     
  6. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    லதா அக்காவுக்கு மிகவும் தேவையான கவிதை.
    ரொம்ப அருமை வேணி அக்கா.
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow nice lines...
    superb poem for latha ka...:)
     
  8. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பான அஞ்சலியே! உன் அழகு தோழி!
    படைத்து விட்டால் அருமை கவிதை
    எங்கள் வாழ்த்து உனக்கு இருக்கையில்
    எல்லா தடைகளும் விலகி ஓடும்
     
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    உனக்கொரு நன்றி கூற
    துடிக்குது என் உள்ளம் - ஆனால்
    நன்றி கூறி உன்னை
    விலக்கி வைக்க
    விரும்பவில்லையடி - மாறாக
    il என்னும் விளக்கில்
    அன்பு என்னும் நெய் கொண்டு
    நம் நட்பு என்னும் தீபம்
    சுடர் விடவே விழைகிறேன்
     
    Last edited: Jan 5, 2011
  10. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    :bowdown:bowdown:bowdown நன்றி சரோஜ், உங்கள் அன்புக்கு முன்னால், என் கண்கள் கலங்கி தான் போகிறது
     

Share This Page