1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அசைவ வாழைப்பழம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Apr 19, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]பழம் என்றாலே வாழைப்பழம் என்று எண்ணும் அளவுக்குச் சிறப்பு மிக்க பழத்தில், அசைவ வகை பார்த்துள்ளீர்களா? நான் நேற்றுத்தான் பார்த்தேன்! மாம்பழ வண்டு, மாம்பழத்தில் நடனம் ஆடும் புழுக்கள், ஆரஞ்சுப் பழத்தில் 'டிஸ்கோ' ஆடும் வெள்ளைப் புழுக்கள் என்ற சில வகை அசைவப் பழங்கள் பார்த்த ஞாபகம் உள்ளது. ஆனால் புழுக்கள் ஏழையின் கனி என்று போற்றப்படும் வாழைப்பழத்திலுமா?

    என் அனுபவம் இதோ: வாழை, மா, விதையில்லாப் பச்சை திராட்சை மற்றும் ஆப்பிள் பழங்கள் எல்லாம் வீட்டில் இருக்க, பழக் கலவை செய்து உண்ணலாமே என்று ஆசை வந்ததில் வியப்பென்ன? அதனால், தயாரிப்பை ஆரம்பித்தேன். மா மற்றும் வாழைப் பழங்களில் தோலை நீக்கிவிட்டு, அவற்றையும், ஆப்பிளையும், சிறு துண்டுகளாக நறுக்கினேன். அந்தக் கலவையில், பச்சை திராட்சையும் இட்டுக் கலக்க ஆரம்பித்தேன்.

    அடடா! என் கண்களில் படுவது என்ன? திராட்சைப் பழம் ஒன்றின் மேல் ஆடாது அசங்காது ஒரு வெள்ளைப் புழு! ஆண்டவனே! என்ன இது! வியப்பு மேலிட இன்னும் உற்று நோக்க, அதன் தோழர்கள் பலர் கலவையில் தெரிந்தனர்! எங்கிருந்து வந்தன என்று ஆராய்ந்தபோது, ஒவ்வொரு வாழைப் பழத் துண்டிலும் பதிந்து கிடக்கிறது ஓர் அசையாப் புழு! இதுபோல நான் இதுவரை கண்டதே இல்லை! பழங்கள் விற்கும் விலையில், அதை முழுதும் களைந்துவிட மனம் வரவில்லை. நிதானமாக அமர்ந்து, வாழைப்பழத் துண்டுகளைத் தவிர மற்றவை அனைத்தையும் இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றினேன். பல நிமிடங்கள் செல்ல, ஒருவழியாக வேலை முடிந்தது. பின், குடி நீரில் இரண்டு முறை அலசி (வைட்டமின் சத்துக்கள் கொஞ்சம் போனாலும் பரவாயில்லை; புழுவின் தடையங்கள் போகுமே!) கொஞ்சம் சர்க்கரை தூவி, மற்றவர்களுடன் பகிர்ந்து உண்டேன்!

    எதற்கு இதை எழுதுகிறேன் தெரியுமோ? வாழைப்பழத்தை உண்ணும்போது நீங்களும் கொஞ்சம் கவனமாகப் பார்த்து உண்ணத்தான்!

    குறிப்பு: நான் வாங்கியது பெங்களூர் ஸ்பெஷல் மஞ்சள் வாழைப்பழம்!


    [​IMG]
    [/JUSTIFY]
     
    Loading...

Share This Page