1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்க்கை எனும் பாடம்

Discussion in 'Regional Poetry' started by Rrg, Aug 4, 2022.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    வாழ்க்கை எனும் பாடம்

    வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல
    நொடியில் எல்லாம் மாறும் நிலை
    வெற்றி தோல்வி இன்பம் துன்பம்
    எதுவும் நிலைத்து இருப்பதிலை

    ஒவ்வொரு மாற்றமும் அனுபவம் தான்
    ஒவ்வொரு அனுபவம் பாடம் தான்
    அப்படிப் படித்த பாடங்கள் கொண்டு நான்
    உணர்ந்த சிலவற்றை பகிர்கின்றேன்.

    மாற்றம் ஒன்றே மாறாததென்று
    முழுதாய் உணர்வதே முதல் பாடம்
    (இன்று)
    இருப்பதைப் பற்றி சிந்திப்போம்
    இனி வருவதை வருகையில் சந்திப்போம்

    சோதனை கண்டு தளராதே - அவை
    சாதனைக்கு அடிகோலி மறவாதே
    சோதனை கடந்து சாதனை காண
    சோர்வின்றி முயலத் தயங்காதே!

    உன்னை நீ யாரென நினைக்கிறாயோ
    அதுவே நீ என உணர்ந்திடுவாய். (காலையில்)
    விடியும் என்று விண்ணை நம்பும் நீ - (உன்னால்)
    முடியும் என்றுனை நம்பிடுவாய்.

    வெற்றியும் தோல்வியும் இணைந்தே இருந்திடும்
    ஒரு நாணயத்தின் இரு பக்கம்
    தோல்வியைக் கண்டு தளராதே அது
    தாழ்வில்லை; வெற்றிக்கு முதல் படியே.

    ஏனையோர் கூறும் கருத்துகள் எல்லாம்
    ஏற்று சிந்திப்பதில் தவறில்லை - ஆயின்
    சிறப்பாய் செயல் பட வேண்டின் ஆக்கும்
    முடிவு உனதாய் இருக்கட்டும்

    நடப்பன எல்லாம் நன்மைக்கே எனும்
    நம்பிக்கையை மனதில் வளரவிடு
    செய்யும் கடமையை செவ்வெனே செய்
    முடிவை அவனிடம் விட்டுவிடு.

    (நான் வாழ்வில்)
    படித்தவை இன்னும் பலப்பல இருப்பினும்
    பொதுவாய் சிலவே பகிர்ந்துள்ளேன்
    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் பாடங்கள்
    அதுவே நம்வாழ்வின் சிறப்பன்றோ!

    அன்புடன்,
    RRG

    *கவிஞர் கண்ணதாசன் வரிகளில்:*
    வாழ்க்கை எனும் ஓடம்
    வழங்குகின்ற பாடம்
    மானிடரின் மனதினிலே
    மறக்க ஒண்ணா வேதம்.
    வாழ்க்கை எனும் ஓடம்
     
    Thyagarajan and Kohvachn like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Dear @Rrg
    You have put it in crystal clear words in few stanzas the truth about life. I enjoyed reading it. Life is a mixture. It is also a compound. Constituents of Mixture can be separated and treated easily. When it is a compound, constituents invisible but has more teeth to attack .

    But then it is said with exoerience one gets maturity to manage the complications in life and in relationship. Life can be a journey in boat upstream or diwnstream. Rowing controls the boat.
    Thanks and Regards.
     
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks sir.
    I am pleased you liked the poem.
    Regards,
     
    Thyagarajan likes this.

Share This Page