1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதியோர் கடைசி பக்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 14, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,743
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வணக்கம் முகநூல் தோழர்களே வலைதளத்தில் எனக்கு கிடைத்த நெஞ்சைத் தொட்ட ஒரு பதிவு எழுதியவர் நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள்...
    பெற்ற பிள்ளைகள் மீது பாசம் வைத்த பாவத்தினால் அவமானப்பட்டும், அவமானப்படுத்தப் பட்டும் தவிக்கும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு மருந்தாக, அறிவுரையாக, இனி பாசம் என்றெல்லாம் உங்கள் மனதில் ஏங்கிக் கொண்டிருக்காதீர்கள் உங்களுக்கான மனக்காயம் ஆற்றும் பதிவு.
    இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் சுவாரசியமா இனிமையா இருக்கும்.

    1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்.
    2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம் குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
    உங்ள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்
    3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும் என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள் சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்
    4- பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை - சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம்
    5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சம்சாரம் அது மின்சாரம் -விசு போல சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே
    6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்
    7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க
    8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம் சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
    அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்
    9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம் அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்க
    10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்.
    அன்புடன் ஸ.மு.
     
    chamu02 likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,743
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    @chamu02
    வருகைக்கு நன்றி
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    These are dinned into our ears for the past 10 years.

    Whether one expresses or not, nothing can be done to stop

    them feel. After all we are human beings emotionally bound.

    We hear advices not to be taken seriously.

    Upto 2050, no major changes need be expected.

    It will take nearly 75 years for any major change to take place.

    Jayasala 42
     
    Thyagarajan likes this.
  4. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல பதிவு. எதிர்பார்ப்பு என்பது எப்பொழுதும் அன்பாகவே மட்டும் இருக்க வேண்டும். உண்மையான அன்பை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் கிடைத்தாலும் தனது அன்பின் காரணமாக அதை விட்டு கொடுத்து விடுவார்கள். கண்டிப்பாக அவர்கள் உழைப்பை அறிந்த பிள்ளைகள் அவர்களை விட்டு கொடுக்க மாட்டார்கள்.எந்த தருணத்திலும் சரி, அவர்கள் கடமைகளை சரி வர செய்து விடுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஊக்கம் வேண்டும். தாம் செய்த பதில் காரியங்கள் சரி என்றும், தன்னால் அவர்கள் சந்தோஷபடுகிறார்கள் என்ற எண்ணமமும் அவர்கள் எந்த காலத்திலும் மாறாமல் இருக்க உதவும்.
    எனது தாழ்மையான கருத்து
     
    Thyagarajan likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,743
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி நண்பரே அருமையாக பகன்றீர். ஆழ்ந்த சின்தனை.
     

Share This Page