1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதியார் கவிதைகள் ....

Discussion in 'Books & Authors in Regional Languages' started by veni_mohan75, Dec 24, 2009.

  1. Parkavi

    Parkavi New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Enaku piditha bharathiyar kavithaigal,

    Ninai Saranadainthen...

    Senthamizh naddennum podhinilae.....

    theeradha vilayatu pillai.


    azhagulla malar kondu vandhae - ennai
    azha ahach cheydhapin kannai moodik kol
    kuzhalilae soottuvaen enbaan - ennaik
    kurudaakki malarinai thoazhikku vaippaan
    (theeraadha)

    pinnalaip pinninrizhuppaan - thalai
    pinnae thirumbumun naer senru maraivaan
    vannap puduch chaelai thanilae - puzhudi
    vaarich chorindhae varuththik kulaippaan
    (theeraadha)....



    Chinna chirukkiLiyE

    un kaNNil neer vazhindhAl ennenjil udhiram koTTudaDi
    en kaNNin pAvaiyanrO kaNNammA ennuyir ninadhanrO




    Arumaiyana varigal.....
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பங்கு கொண்டு பாடல் வரிகளை பகிர்ந்த என் அன்பு நட்புகளுக்கு வந்தனம். மேலும் பிடித்த வரிகளை பகிருங்கள்.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான், நான் என அவன் ரசித்து ருசித்து எழுதிய நான்....

    இரட்டைக் குறள் வெண் செந்துறை

    வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
    மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
    கானிழல் வளரும் மரமெலாம் நான்,
    காற்றும் புனலும் கடலுமே நான். 1

    விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
    மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
    வாரியிலுள்ள உயிரெலாம் நான். 2

    கம்பனிசைத்த கவியெலாம் நான்,
    காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
    இம்பர் வியக்கின்ற மாட கூடம்
    எழில் நகர் கோபுரம் யாவுமே நான். 3

    இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
    இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
    புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
    பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4

    மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
    இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
    தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
    சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5

    அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
    கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
    காரண மாகிக் கதித்துளோன் நான். 6

    நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
    ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
    ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
    அறிவாய் விளங்குமுதற சோதிநான்! 7
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எனை கவர்ந்த மற்றொரு பாடல்....கண்ணம்மா

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
    செல்வக் களஞ்சியமே
    என்னைக் கலி தீர்த்தே
    உலகில் ஏற்றம் புரிய வந்தாய் (சின்னஞ்சிறு கிளியே)

    பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
    பேசும் பொற்சித்திரமே
    அள்ளி அணைத்திடவே
    என் முன்னே ஆடி வரும் தேனே (சின்னஞ்சிறு கிளியே)

    ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி
    உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
    மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

    கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
    உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?
     
    Karthiga likes this.
  5. vinez

    vinez Senior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Gender:
    Female
    என்னக்கும் பாரதியோட கவிதைகள் எல்லாமே ரொம்ப புடிக்கும்.. நான் எல்லோரோட போஸ்டும் பாத்தேன் எல்லோரும் அவரோட காதல்,நாட்டுப்பற்று பாட்டு தான் குறிபிட்டு இருந்திங்க யாருமே அவரோட தெய்வ பக்தி பாடல்கள் போடல..அதனால நான் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன் :) என்னக்கு "மலரின் மேவு திருவே" பாடல் ரொம்ப புடிக்கும். முதல் நான்கு வரிகள்

    மலரின் மேவு திருவே! – உன்மேல்
    மையல் பொங்கி நின்றேன்
    நிலவு செய்யும் முகமும் - காண்பர்
    நினைவு அழிக்கும் விழியும்
    கலகல் என்ற மொழியும் - தெய்வ
    களிதுலங்கு நகையும்
    இலகு செல்வ வடிவம் -கண்டு
    இன்பம் வேண்டி நின்றேன் .
     
  6. venigv

    venigv New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    பெண்கள் விடுதலைக் கும்மி

    பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
    பேசிக் களிப்பொடு நாம்பாடக்
    கண்களிலே யொளி போல வுயிரில்
    கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.

    கும்மியடி தமிழ் நாடு முழுதும்
    குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
    நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
    நன்மைகண் டோமென்று கும்மியடி.(கும்மி) 1

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி) 2

    மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
    மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
    வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் அதை
    வெட்டி விட்டோமென்று கும்மியடி.(கும்மி) 3

    நல்ல விலைகொண்டு நாயை விற்பார் அந்த
    நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
    கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
    கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி) 4

    கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
    வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி) 5

    பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
    எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி (கும்மி) 6

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோமென்று கும்மியடி
    சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்
    சாதி படைக்கவும் செய்திடுவோம். (கும்மி) 7

    காத லொருவனைக் கைப்பிடித்தே அவன்
    காரியம் யாவினும் கைகொடுத்து
    மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
    மாட்சி பெறச்செய்து வாழ்வமடி(கும்மி) 8
     
  7. venigv

    venigv New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    புதிய கோணங்கி

    குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
    நல்லகாலம் வருகுது; நல்லகாலம் வருகுது;
    சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
    சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!
    வேதபுரத் தாருக்கு நல்லகுறி சொல்லு. 5

    தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
    படிப்பு வளருது; பாவம் தொலையுது;
    படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
    போவான், போவான், ஐயோவென்று போவான்.
    வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; 10

    தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
    சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
    யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
    மந்திர மெல்லாம் வளருது, வளருது;
    குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; 15

    சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!
    அந்தரி, வீரி, சண்டிகை, சூலி!
    குடுகுடு குடுகுடு.
    குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
    சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது; 20

    தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது;
    எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
    பயந் தொலையுது, பாவந் தொலையுது;
    சாத்திரம் வளருது, சாதி குறையுது;
    நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது; 25

    பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
    வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
    சொல்லடி, சக்தி, மலையாள பகவதி!
    தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது. 29
     
  8. venigv

    venigv New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    மனைத் தலைவிக்கு வாழ்த்து


    வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
    தினமும் இவ்வுலகில் சிதறியே நிகழும்
    பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
    வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
    பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும் 5

    வெறுங் கதைத்திரளை, வெள்ளறி வுடைய
    மாயா சக்தியின் மகளே, மனைக்கண்
    வாழ்வினை வகுப்பாய், வருடம் பலவினும்
    ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
    பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ 10

    நடத்திடுஞ் சக்தி நிலையமே, நன்மனைத்
    தலைவீ, ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
    அனைத்தையும் பயன் நிறை அனுபவ மாக்கி,
    உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
    ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து, 15

    வான சாத்திரம் மகமது வீழ்ச்சி்
    சின்னப் பையல் சேவகத் திறமை
    எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்
    அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
    இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் 20

    பேதை மாசக்தியின் பெண்ணே, வாழ்க.
    காளியின் குமாரி, அறங்காத் திடுக!
    வாழ்க! மனையகத் தலைவி வாழ்க! 23
     
  9. venigv

    venigv New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    புதுமைப் பெண்


    போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றி! நின்
    பொன்ன டிக்குபல் லாயிரம் போற்றிகாண்!
    சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
    செய்ய தாமரைத் தேமலர் போலொளி
    தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
    துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
    சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
    சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1

    மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
    வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
    நாதந் தானது நாரதர் வீணையோ?
    நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
    வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
    மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?
    சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
    தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 2

    அறிவு கொண்ட மனித வுயிர்களை
    அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்
    நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
    நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
    சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள்
    தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
    நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
    நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
    அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ! 4

    நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்
    நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
    தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
    சால வேயரி தாவதொர் செய்தியாம்
    குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்
    கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
    நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
    நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ! 5

    புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
    பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
    சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
    தன்னி லேபொது வான வழக்கமாம்
    மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
    மாத வப்பெரி யோருட னொப்புற்றே
    முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
    முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்னி உரைப்பது கேட்டிரோ! 7

    உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
    ஓது பற்பல நூல்வகை கற்கவும்
    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
    திலக வாணுத லார்நங்கள் பாரத
    தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
    விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
    வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 8

    சாத்தி ரங்கள் பலபல கற்பராம்
    சவுரி யங்கள் பலபல செய்வராம்
    மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
    மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்
    காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
    கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்
    ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
    இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ! 9

    போற்றி, போற்றி, ஜயஜய போற்றிஇப்
    புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே
    மாற்றி வையம் புதுமை யுறச்செய்து,
    மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
    ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
    அருளினா லொரு கன்னிகை யாகியே
    தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
    செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம். 10
     
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    ஐம்பொறி ஆட்சிகொள் (Gnanabarathi Finals speech) - YouTube

    சென்ற மாதம் நடந்த வட அமெரிக்க பேச்சு போட்டியில்
    வெற்றி பெற்ற என் இறுதி சுற்றுப் பேச்சு. 3 சுற்றுக்களை
    கடந்து கடுமையான இறுதி சுற்றுப் போட்டி. சன் டிவி
    ராஜா முக்கிய நடுவர். நீங்களும் கேட்டுப் பாருங்கள்!

    பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் ஒன்றான `ஐம் பொறி
    ஆட்சி கொள் !`, இதுவே தலைப்பு .
     

Share This Page