1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Hi RGS,
    புத்தகத்தில் படித்தபோது இந்த ஒரு வரி புன்னகையை என்னுள் வரவழைத்தது:

    "If you don’t blow your own horn, someone else will use it as a spittoon"
    Q# 21) இந்த வரியை பற்றிய தங்களது சொந்த கருத்தை பதிவிடுங்கள்.
    மேலாண்மைப் பிரிவில் ஒரு ஆரம்பப் பாடம் அது. பொதுவாக ஆசியர்களுக்கே தன்னைக் குறித்தும், தன் சாதனைகளைக் குறித்தும் பேச ஒரு தயக்கம் உண்டு என்று என் முன்னாள் மேலாளர் சொன்னதுண்டு. தாம் சாதித்தது அரை வரி வந்தாலும், அதை அறுபது வரிக்கு மேல் நீட்டிப்பவர்களைக் கண்டதுண்டு. நம் சாதனைகளை, உழைப்பை நாம் சொல்வது தவறில்லை. ஏனெனில் பிறர் அதைச் சொல்வார்கள் என்று நாம் வாளாவிருக்க முடியாது.

    Q# 22) உள்முகச் சிந்தனையாளன் ஆக இருந்ததால் நீங்கள் (பயன்)பெற்றது எது இழந்தது எது?
    உள்முகச் சிந்தனையாளனாக இருந்ததில், இருப்பதில் பெறுவது இது - எப்பொழுதும் தன் சிந்தனையின் போக்கை கவனிப்பதும், தான் எண்ணியது சரி தானா என்று சரி பார்த்துக் கொள்வதும், தனைக் குறித்த ஒரு தெளிவைத் தருகிறது. மேலும் தன் கருத்தைப் பகிர்வதில் உள்ள தயக்கமும், அச்சமும் மேலும் தன்னைச் செறிவுபடுத்திக் கொள்ள வைக்கிறது.
    இழப்பது - பிறருடன் கூடி மகிழ்ந்திருத்தலை. மற்றும் பிறரது நேரடி வெளிப்பாட்டை அறிய முடியாமை, மற்றும் தனது தவறையோ, அறிவு / செயல் குறித்த விமர்சனத்தையோ கேட்ட பின், தன்னை சீர் செய்து கொள்ளும் மனப்பாங்கை. -rgs
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வாங்கற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதாதா?

    இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அலுவலகத்தில் எந்த வேலை எனக்கு கொடுத்தாலும் வேலையை முடித்து விடுவேன். பதவி உயர்வு வேண்டும் என்றெல்லாம் நினைத்து மெனக்கெட்டு வேலை பார்த்தது கிடையாது. வாங்கும் சம்பளத்திற்கு மனம் ஒன்றி வேலை. வருடம் தோறும் சம்பள உயர்வு. வர சம்பளத்தில் எதிர்காலத்திற்கு/வயோதிக காலத்திற்கு முதலீடு. போதும் அளவிற்கு பணம் சேர்ந்தவுடன் early retirement. இது தான் அப்போதைய மனநிலை.

    மனமாற்றம் ஏற்பட்டது எப்படி? நான் தற்போது வேலை பார்க்கும் இடத்தில் சில நபர்களை/ நண்பர்களை சந்தித்தேன். இவர்கள் அலுவலகத்தில் அடுத்த பதவி உயர்விற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று துல்லியமாக திட்டமிடுபவர்கள். கடின உழைப்பாளிகள். அதி புத்திசாலிகளும் கூட. இந்த சகவாச தோஷம் என்னை சும்மா விடுமா?

    2020 எனக்கு ஒரு workaholic வருடம் என்று இங்கு ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். கொடுத்த வேலையை சிறப்பாக செய்தது மட்டும் அல்லாமல் ஒரு கடினமான வேலையை கேட்டு வாங்கி சுலபமான முறையில் தீர்வு கண்டுபிடித்து ப்ரெசென்ட் பண்ணேன். கிடைத்த பாராட்டுக்கள் மேலும் ஊக்கப்படுத்தியது. முதல் படி சரியாக எடுத்து வைத்ததால் அடுத்து அடுத்து புதிய வேலைகள் எனக்கு கொடுக்கப்பட்டது. எந்த கடினமான வேலை என்றாலும் என்னிடம் கொடுத்தால் முடிந்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எல்லோருக்கும் வரும்படி உயிர் கொடுத்து வேலை பார்த்தேன்.

    இந்த வருடம் நான் இங்கு செலவிடும் நேரம் நிறைய குறைத்து கொண்டேன். அதற்கு காரணம் - இந்த வருடம் எனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. பள்ளியில் Double promotion என்று சொல்வார்கள். வேலையில் Double increment கேள்வி பட்டு இருக்கீங்களா? பதவி உயர்விற்கு ஏற்ற சம்பள உயர்வு. அலுவலத்தில் சில திறமையான நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களை தக்க வைத்து கொள்வதற்காக சம்பளம் உயர்த்துவது. இப்படி இரண்டும் நிகழ்ந்தது இந்த வருடத்தில் தான். அதுவும் முதல் முறையாக.

    அடுத்த பதவி உயர்விற்கு இன்னும் நான்கு வருடங்கள் ஆகலாம். அதற்கான படி இந்த வருடத்தில் இருந்தே இனிதாக தொடங்கப்பட்டு விட்டது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. முடிந்தவரை ஓட வேண்டும். ஆனாலும் Weekend வெட்டி வேலை ஆயுளுக்கும் தொடரும். இந்த thread வேலையும் சேர்த்து தான். பொறுப்பாக நடந்து கொள்ள முயற்சிக்கிறேன். :grinning::grinning:
     
    rgsrinivasan likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக உள்முகச் சிந்தனையாளன் பற்றிய தங்களது பதிவை படித்ததும் படித்ததை கிரகித்து கொள்ள எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆழமான உண்மையான அருமையான பதிலாக எனக்கு பட்டது.

    கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சிறப்பாக பதில் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி. சிந்திக்க தூண்டிய பல பதில்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

    தங்களது பதில்களை போலவே பாடல்கள் தேர்வும் வர்ணனையும் தனித்துவமானது. நேரம் கிடைக்கும்போது தங்களுக்கு பிடித்த பாடல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் சிந்திப்போம்/சந்திப்போம்.
     
    rgsrinivasan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தின் கடைசி வாரம் இது.

    நெருங்கிய நண்பர் ஒருவர் எங்கோ படித்ததை என்னிடம் இன்று பகிர்ந்தது: வருவது 2022 அல்ல. 2020 -2 (2020 part 2)

    திரும்பவும் முதல இருந்தே வா? இன்னும் எத்தனை பார்ட் இருக்கோ?

    அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று அலுவலக அறிவிப்பு எனக்கு போன வாரமே வந்துவிட்டது. திரும்பவும் முழு நேர WFH. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இடுக்கண் வருங்கால் நகுக ~ திருவள்ளுவர் சொன்னது. சிரித்தே சமாளிக்க முயற்சிப்போம்.

    WA la வந்த இந்த பதிவு என்னை சிரிக்க வைத்தது. எடிட்டிங் செம!!
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வ்ருடத்தின் கடைசி வாரத்தில் அலுவலக வேலை பார்ப்பது எனக்கு இதுவே முதல் முறை. என்னை தவிர எங்க டீம் மெம்பெர்ஸ் லீவு ல இருப்பதால் அவர்களது வேலையும் சேர்த்து பார்த்து கொண்டிருக்கிறேன். ஒரு பிரேக் தேவைப்பட்டது. அதனால் இன்று பாடல்கள் கேட்டு கொண்டிருந்தேன். கோர்வையாக தேர்ந்து எடுத்து பாடல்கள் பதிவிடும் மனநிலை இப்போது இல்லை. இன்று கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்தது. கலவையான பாடல்கள்.

    MV songs Playlist 67

    தேவதை போல் ஒரு பெண் - கோபுர வாசலிலே
    ஊரு விட்டு ஊரு வந்து - கரகாட்டக்காரன்
    வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்
    ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம்
    பேரு வச்சாலும் வைக்காம போனாலும் - மைக்கேல் மதன காமராஜன்
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கேட்கும் போதே கிறுகிறுக்க வைக்கும் பாடல்களில் ஒன்று இது. எத்தனை முறை கேட்டாலும், புதியதாகவே தோன்றுவது. ஸ்வர்ணலதாவின் அபாரமான, உணர்ச்சி ஓங்கும் குரலில், மிகக் குறைந்த இசைக்கருவிகளைக் கொண்டு, அற்புதமான இளையராஜாவின் இசையில், அழகான பாடல் வரிகள் [வாலி] சேர, காலம் தாண்டி நிற்கும் இது. முதல் முறை ஏற்படும் ஒரு அனுபவம் ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை இத்தனை குறைந்த வரிகளில் சொல்வது கடினம். ஒரு கரை கடந்த மகிழ்ச்சி, கூடவே ஒரு குற்ற உணர்வு. இது சரியா, இல்லையா எனும் தவிப்பு, அதனால் என்ன என்று இன்பத்தில் மூழ்கி, கடக்கத் துணியும் இளமை வேகம், உணர்ச்சியின் காட்டாற்றில் அடித்துச் செல்லப்படுவதில் உள்ள கிளர்ச்சி, மர்மம், இன்னும் என்ன? என அறியும் ஆர்வம் என்று மேலும் மேலும் எழுதிக்கொண்டே போகலாம். சேர்ந்திசை இந்தப் பாடலில் இத்தனை பொருத்தமாய் அமைந்தது வியப்பூட்டியது. பித்தேறியவனாய், கேட்டுக் கொண்டே இருக்கிறேன் மீண்டும் மீண்டும்!
    படம்: வள்ளி. பாடல்: என்னுள்ளே என்னுள்ளே!

     
    vidhyalakshmid likes this.
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பாராட்டுக்கள் VV , உங்கள் பதவி, மற்றும் சம்பள உயர்வுக்கு!
    நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்!
     
    singapalsmile likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கேள்விகளுக்கும் நன்றி VV. எனக்குப் பிடித்த பாடல்களை இங்கே அவ்வப்போது பகிர்கிறேன்!
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    உங்களது பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    நீங்க போஸ்ட் பண்ண பாடலும் அதற்கான வர்ணனையும் வேற லெவல். தாக்கமா தக்க பதில் டைப் பண்ண கரங்கள் துடித்தாலும் மூளை தடுக்கிறது. அதனால் வேற வழியில் கையாள்கிறேன்.

    உங்களிடம் நான் ragging கேள்விகள் கேட்கவே இல்லை. உங்களது எழுத்து புலமை, தேர்ந்து எடுக்கும் வார்த்தைகள், சொல்ல வந்ததை பாங்காக சொல்லும் திறமை, கற்பனை திறன், நுணுக்கமான காதல் பார்வை அனைத்தும் ஒரு சேர வெளிக்கொண்டு வர உங்களுக்கு ஒரு ragging assignment. ஒரு மாதம் முழுதும் யோசித்து Feb 2022 விடை அளித்தால் போதும். அதுவும் விருப்பம் இருந்தால் மட்டுமே. கட்டாயம் எதுவும் இல்லை.

    1) டீன் ஏஜ் பையனாக உங்களை நினைத்து கொண்டு ஒரு காதல் கடிதம் எழுதவும்
    2) அறுபது வயது பெரியவராக உங்களை நினைத்து கொண்டு ஒரு காதல் கடிதம் எழுதவும்

    வயது சார்ந்த எண்ணங்களின் வேறுபாட்டை வண்ணமயமாக வெளிப்படுத்த முயற்சிக்கவும்.
     
    vidhyalakshmid and rgsrinivasan like this.

Share This Page